Published:Updated:

தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!

Vikatan Correspondent
தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!
தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!
தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவருடன் இந்திய தேர்தல் கமிஷனர் நசீம் சைதி மற்றும் இரு டைரக்டர் ஜெனரல்கள், துணை கமிஷனர் ஆகியோரும் உள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திக்கின்றனர். அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடிக்கும் என்று தெரிகிறது.

அதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகிய அதிகாரிகளுடன் சம்பத் மற்றும் அதிகாரிகள் கலந்தாலோசனை செய்கின்றனர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டம் நிறைவு பெற்ற பிறகு, தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், டி.ஜி.பி. (தேர்தல்) மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை சம்பத் மற்றும் இந்தியத் தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் சந்தித்து பேசுகின்றனர்.

தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், துணை ராணுவத்தை பணியமர்த்தும் பகுதிகள், பிரச்னைக்கு உரிய வாக்குச்சாவடிகள், வெப் கேமரா கண்காணிப்பு வசதி, தேர்தல் பணியாளர்களின் செயல்பாடு போன்றவை குறித்து கருத்து கேட்டு தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அறிவுரை வழங்குகிறார்கள். அதன் பின்னர் வருமானவரித் துறை, மத்திய கலால்வரித் துறை கமிஷனர்களுடன் சம்பத் மற்றும் அவருடன் வரும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.