Published:Updated:

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது : தேர்தல் ஆணையர் சம்பத்

Vikatan Correspondent
தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது : தேர்தல் ஆணையர் சம்பத்
தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது : தேர்தல் ஆணையர் சம்பத்
தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது : தேர்தல் ஆணையர் சம்பத்

சென்னை: தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ''தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி மின்சாரம், குடிநீர் பணிகளை நிறுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். 39 பொதுப் பார்வையாளர்கள், 78 செலவின பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6,798 சிறு பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 17,684 வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்களின் செலவின கணக்கு விபரம் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்தல் பிரசாரத்திற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. வேட்பாளர்கள் தங்களது சமூக வலைதள கணக்கு விவரங்களையும் அளிக்க வேண்டும். எலக்ட்ரானிக் ஊடகங்களுக்கான விதிகளே சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும். வேட்பாளர் பெயரை கூறி வாக்கு கேட்டாலே செலவு அவரது கணக்கில்தான் சேரும்.

பணம் பறிமுதல் செய்யப்படுவதால் அப்பாவிக் பாதிக்கப்படக்கூடாது. உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுவதில்லை.அதிக பணத்தைச் எடுத்துச் செல்ல உரிய காரணம் நிரூபிக்கப்பட்டால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்'' என்றார்.