Published:Updated:

தேர்தலுக்கு 3 நாள் முன்புதான் பலத்த பாதுகாப்பு: சொல்கிறார் பிரவீன்குமார்

விகடன் விமர்சனக்குழு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்னதாகத்தான் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறிய அவர், தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண் 1095 என்றார்.

மேலும், மத ரீதியான பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பிரவீன்குமார் தெரிவித்தார்.