Published:Updated:

அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வேட்புமனு தாக்கல்

திருச்சி, செப்.21,2011

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.##~~##

திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அருள்ஜோதி என்பவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரஞ்சோதி வேட்புமனுத் தாக்கலின்போது அமைச்சர் சிவபதி, எம்.பி. குமார் மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். இவர் தற்போது நில அபகரிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு