Published:Updated:

காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, செப்.28,2011

காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் காங்கிரஸின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.வீ.தங்கபாலு செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். ##~~##

காங்கிரஸ் சார்பில் 6 மாநகராட்சி மேயர், 67 நகராட்சி தலைவர், 171 பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயர் வேட்பாளர் விவரம்:

சென்னை - சைதை பி.ரவி
வேலூர் - எஸ்.தேவி
ஈரோடு - பா.ராஜேஷ்
மதுரை - ஐ.சிலுவை
திருநெல்வேலி - ஜுலியட் பிரேமலதா
தூத்துக்குடி - ஜே.சிந்தியா வைலட் லில்லி.

முன்னதாக, வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடம் அமைத்த 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு மூன்று நாள்களாக நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் கே.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 3-வது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், மாநிலத் தலைவர் தங்கபாலு, முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,

முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா, ஜெ.எம். ஹாரூண் எம்.பி, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். 

பல மணி நேர ஆலோசனைக்குப் பிறகு 6 மாநகராட்சி மேயர்கள், 67 நகராட்சித் தலைவர்கள், 168 பேரூராட்சித் தலைவர்களுககான வேட்பாளர்களை தங்கபாலு அறிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு