திருமா 'தில்' பேட்டி

''தனித்துப் போட்டியிடவும் தயார்!''

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் வைகோ, நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்ட திருமா திடீரென 'நாம் தமிழர்' (இதே பெயரில் ஏற் கெனவே ஆதித்தனார் தொடங்கிய அமைப்பு ஒன்று செயல்பட்டு வந்தது) என தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பித்திருக்கிறார். புது அமைப்பைத் தொடங்கிய கையோடு, ஈழத் தமிழர்கள் நலனுக்காக நடைபயணப் போராட்டத்தையும் அறிவித்திருக்கிறார். அவரை சந்தித்தோம்.

தொடர் முழக்கங்களால் தொண்டை பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர் குரலில் வேகம் குறையவில்லை.

''பொங்கல் நேரத்தில் நான்கு நாட்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தியபோதே 'நாம் தமிழர்' நடைபயணத் திட்டத்தை வகுத்துவிட்டோம். வழக்க

மான நடைபயணம் போல் இல்லாமல்இரண்டு கோடிக்கும் மேலான மக்களை சந்திக்க இருக்கிறோம். வெறிபிடித்த சிங்கள ராணுவத்தால் ஈழத்தில் மக்கள் நசுக்கப்படும் கொடுமை பற்றி தமிழகம் முழுக்கச் சொல்லப் போகிறோம். ஈழத்தில் ஒலிக்கிற ஒப்பாரியும் ஓலமும் நம் மக்களுக்குக் கேட்கவேண்டும். இதயத்தைப் பிளக்கும் ஈழத்தின் சோகங்களை உணர்ந்திருக்கும் மக்கள், மனம் வெறுத்துப் போய்த்தான் மயான அமைதி பூண்டிருக் கிறார்கள். அந்த அமைதியை உணர்வு பூர்வப் போராட்டமாக மாற்றி, ஈழத்தின் விடிவுக்காக கைகோக்க வைப்பதற்குத்தான் இந்தப் பயணம். எங்கள் கட்சியின் தம்பிகள் ஒரு குக்கிராமத்தைக் கூட விட்டு வைக்காமல் நடைபயணம் வரப் போகிறார்கள்!''

''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகளோடு மனவருத்தம் ஏற்பட்ட தால்தான், தனியாக 'நாம் தமிழர்' அமைப்பை நீங்கள் ஏற்படுத்தி இருப்பதாகச் சொல் கிறார்களே?''

''ஈழ விடிவுக்கான எழுச்சியை எப்படியும் தடுத்துவிட வேண்டும்... மக்களின் உணர்வுகளை மழுங்கடித்துவிட வேண்டும் என்பதற்காகவே ஈழ விவகாரத்தில் ஈகோ யுத்தம் நடப்பதாக சிலர் கிளப்பி விடுகிறார்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் களோடு எனக்கு என்ன மனவருத்தம் இருக்கப் போகிறது? ஈழ விடிவுக்காகக் குரல் கொடுப்பது ஒரு குழந்தையாக இருந்தாலும் அதனுடைய கூட்டணி யில் அங்கம் வகிக்கத் துடிப்பவன் நான். ஈழத் துயரங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது முதல், இந்திய அரசின் ரகசிய முகத்தை அப்பட்டமாக்கியது வரை சிறுத்தைகளின் போராட்ட வீரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இதற்காக எங்கள் கட்சித் தொண்டர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பஸ் கண்ணாடிகளை உடைத்ததாகச் சொல்லி, 22 தம்பிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட் டத்தைப் பாய்ச்சி இருக்கிறார்கள்.

இருநூறுக்கும் மேற்பட்ட தம்பிகள் பிணை எடுக்கக் கூட வழியின்றி சிறையில் கிடக்கிறார்கள். சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதலில் சிறுத்தைகளுக்குத் துளியள வும் சம்பந்தமில்லை. ஆனாலும், 11 பேர் அந்த வழக் கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், எங்களின் வீரியமிகு போராட்டத்துக்கு தனித்துவம் தேடுவதில் தவறு கிடையாது. அதே நேரம் எங்கள் கட்சித் தொண்டர்களை தக்கபடி வழிநடத்தவும், அவர்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்கவும் எங்களுக்குத் தனி அமைப்பு தேவை. அதற்காகத்தான் 'நாம் தமிழர்' அமைப்பைத் தொடங்கினோம். மற்றபடி யாருடனும் எனக்கு கசப்பில்லை!''

''நீங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதை காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அணி மாறக்கூடும் என்கிறார்களே?''

''இலங்கையில் நடக்கிற போரை காங்கிரஸ் ஒப்புக்கு சப்பாகக் கண்டித்திருக்கிறது. காங்கிரஸ் அதையாவது செய்திருக்கிறது. ஆனால், தமிழினமே மொத்தமாக அழிக்கப்படும் அந்தப் போரை நிறுத்தக் குரல் கொடுக்காத ஒரே புள்ளி நமது அம்மையார்தான். போராடிக் கொண்டிருக்கும் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமாம்! 'போர் நடக்கையில் மக்க ளும் சாகத்தான் செய்வார்கள்' என கொஞ்சமும் கூசாமல் சொல்கிற அவருடைய அரக்க மனதை நினைக்கும்போதே நெஞ்சு தகிக்கிறது. இப்படிப்பட்ட கல்மனதுக்காரருடன் கூட்டணி என்கிற பேச்சுக்கே இடமில்லை!

தமிழின அழிவுக்குத் துணைபோன காங்கிரஸ் தலைவர்களையும், தமிழர்களின் சாவை நக்கலடித்த ஜெயலலிதாவையும், அரசியல் பேரம் படியாததால் திடீர் ஞானோதயம் வந்தவராக ஈழ சோகம் பற்றிப் பாடும் விஜயகாந்த்தையும் ஈழ துரோகிகளாகவே நினைக்கிறோம். இப்போது வரை நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடரத்தான் நினைக்கிறோம். ஆனால், காங்கிரஸின் வற்புறுத்தலுக்கு ஆளாகி தி.மு.க. எங்களின் விரல்களை விட்டுவிடுமேயானால், அதையும் மகிழ்வோடு எதிர் கொள்வோம். எங்கள் கூட்டணி குறித்து முடிவெடுக்கிற பொறுப்பை கலைஞ ரிடமே விட்டுவிட்டோம். அவர் என்னவிதமான முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடுகிற நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.''

''அமைச்சர் ஆற்காடு வீராசாமி, 'பேருந்துகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிறுத்தைகள்தான் ஈடுபட்டார்கள்' என சட்டமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார். முதல்வரும் உங்கள் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறாராமே?''

''இதுநாள் வரை நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் நீடிக்கிறோம். ஆனால், எங்களுக்கு எதிராக போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நான் மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழகம் முழுக்க எங்கள் கட்சியினர் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளை மக்கள் அறிவார்கள். சமீபத்தில் கூட ஈரோடு மாவட்டம் நம்பியூரில் எங்கள் தம்பிகள் ஏழு பேரை கைது செய்த போலீஸ், அவர்களின் ஆணுறுப்பை நசுக்கி 'சிறுத்தைன்னு இனிமேல் சொல்லுவீங்களாடா?' என வெறியாட்டம் நடத்தி இருக்கிறது. இத்தகைய கொடுமைகளை எல்லாம்நாங்கள் கலைஞரிடம் முறையிட்டு... நீதி கேட்டுக் கெஞ்சியதில்லை. அவர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது மூன்று முறை நேரில் போய்ப் பார்த்தேன். ஆனால், 'முரசொலி'யில் அந்த செய்தி வெளியிடப்படவேயில்லை. ஆனாலும், இப்போது வரை கூட்டணி தர்மத்தோடுதான் இயங்குகிறோம். ஈழத்தையே அழிக்கத் துடிக்கும் ராஜபக்ஷேவுக்கு ராணுவ உதவி வழங்கும் காங்கிரஸை கண்டித்ததைத் தவிர நாங்கள் என்ன இடைஞ்சலை செய்துவிட்டோம்? உதிர உறவுகளுக்காக அழுவது இடைஞ்சலும் அல்ல. அதற்கான பரிசாக நல்லவர்களைப் பிரிய நேர்ந்தால், மௌனத்தைத் தவிர எந்த பதிலையும் என்னால் சொல்ல முடியாது.'' - பேசி முடித்த திருமா மெல்லிதாக சிரிக்கிறார். அந்த சிரிப்பில் வலியும் தீர்க்கமும் நிலைகுத்தி இருந்தது!

- இரா.சரவணன்