கனவு பலிக்குமா?

ராமநாதபுரத்தை குறிவைக்கும் திருநாவுக்கரசர்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டுவிட்டாலும் எந்தக் கட்சி, எந்தக் கட்சியின் தோள்களைக் கூட்டணிக்காகத் தழுவப் போகிறதென்று இன்னும் தெளிவாகவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தயாராகி விட்டார் திருநாவுக்கரசர்!

பி.ஜே.பி-யின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

''இப்போதையை நிலவரப்படி தென் சென்னை, வட சென்னை, கோவை, நீலகிரி,

திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பதினைந்து தொகுதிகளில் போட்டியிட எங்கள் கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்திருக்கிறது. மற்ற தொகுதிகளில் ஒருவேளை வெற்றிவாய்ப்பு நழுவிப் போனாலும், தனித்த செல்வாக்குகொண்ட திருநாவுக் கரசர் ஜெயிப்பது உறுதி என நம்புகிறோம்.

ராமநாதபுரம் தொகுதியில் யார் போட்டியிடலாம் என்பது குறித்து மாவட்டத்தின் 72 நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 65 பேர் திருநாவுக்கரசரைத்தான் முன்மொழிந்திருக்கிறார்கள். மாற்றியமைக்கப்பட்ட ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அறந்தாங்கி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருச்சுழி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகள் வருகின்றன. திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதிக்காரர் என்றாலும் அவர் படித்தது... வளர்ந்தது எல்லாம் திருவாடானை தொகுதிக்குள்தான். எனவே, இந்த இரண்டு தொகுதிக்குள்ளும் அவருக்கு நிறைய செல்வாக்கு உண்டு. பரமக்குடியில் பி.ஜே.பி-க்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. ஏற்கெனவே திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வை நடத்தியபோது கடலாடி, முதுகுளத்தூர்

பகுதிகளில் அவருக்கு கணிச மான செல்வாக்கு இருந்தது. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் அவருடைய கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முருகன் அ.தி.மு.க. கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி விட்டு இரண்டாம் இடத்துக்கு வந்தார். அப்போது திருநாவுக்கரசரை ஆதரித்த பலரும் இன்றைக்கு பல கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்'...' என்றவர்கள் செமத்தியான நம்பிக்கையோடு அடுத்து சொன்னது இதுதான்-

''மத்தியில் அடுத்து வரப்போவது பி.ஜே.பி. ஆட்சிதான். திருநாவுக்கரசர்தான் அடுத்த மத்திய உள்துறை அமைச்சர். ஒருவேளை, அவர் தோற்கி றார் என்று

வைத்துக் கொண்டால்கூட அவரை ராஜ்யசபா எம்.பி-யாக்கி நிச்சயம் அமைச்சராக்கி விடுவார்கள்! அந்த வகையில் பார்க்கும்போது, நிச்சயம் அமைச்சராகப் போகும் ஒருவரை ராமநாதபுரம் தொகுதி பெற்றுக் கொள்ளப் போகிறதா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி..!'' திருநாவுக்கரசருக்காகத் தொகுதிக்குள் ஆதரவு திரட்டி வரும் பி.ஜே.பி-யின் தேசியக்குழு உறுப்பினர் முரளிதரனிடம் பேசினோம். ''ராமநாதபுரத்தில் திருநாவுக்கரசர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியில் அறுபது சதவிகித வேலைகள் முடிந்துவிட்டன. சமீபத்தில் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி டெல்லி போனார்கள். அவர்களை ராமநாதபுரம் எம்.பி.யோ, நாகை எம்.பி-யோ கண்டுகொள்ளவே இல்லை. திருநாவுக்கரசர்தான் சம்பந்தப்பட்ட அமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைத்திருக்கிறார். தமிழகத்திலிருந்து யார் போனாலும், அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் திருநாவுக் கரசர்.

இந்தத் தொகுதிக்குட் பட்ட ஏகப்பட்ட பேருக்கு இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார். இதெல்லாம்

அவருக்குப் பெரிய பலம். பி.ஜே.பி. என்றாலே மதவாதக் கட்சி என்ற மாயையை(?) ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், திருநாவுக்கரசருக்கு அனைத்து மதத்தினரின் ஆதரவும் இருக்கிறது!'' என்றார்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் ராமநாதபுரம் பற்றி திட்டமிட்டபடிதான் இருக்கின்றன. மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, மலைச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர்

சுந்தரபாண்டியன் போன்ற தலைகளை வேட்பாளர் பரிசீலனையில் அ.தி.மு.க. தரப்பு வைத்திருப்பதாகச் சொல் கிறார்கள். தி.மு.க. தரப்பிலோ, தற்போதைய எம்.பி-யான பவானி ராஜேந்திரன், தமிழச்சி தங்கபாண்டியன் இவர்களோடு ஜே.கே.ரித்தீஷின் பெயரையும் சொல்லி வருகிறார்கள். இந்தத் தொகுதியை வாங்கும் வெறியோடுதான் திருமங்கலம் இடைத்தேர்தல் களத்தில் ரித்தீஷ் பணமழை பொழிந்ததாகவும் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், 'திருநாவுக்கரசருக்கு சிவகங்கை மீதுதான் முதல் கண். அப்படிப் போட்டியிட்டால், ப.சிதம்பரத்துக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார்' என்போரும் இருக்கிறார்கள்.

திருநாவுக்கரசரிடமே கேட்டுவிட்டோம்.

''என்னுடைய புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி உடைக்கப்பட்டு திருச்சி, கரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளோடு இணைக்கப்

பட்டுவிட்டது. எனவே, இந்த ஐந்து தொகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் நான் போட்டியிடலாம். ஆனால், ஆறு முறை நானும் இரண்டு முறை என் னால் நிறுத்தப்பட்ட வேட்பாளரும் வெற்றிபெற்ற என்னுடைய சொந்த சட்டமன்ற தொகுதியான அறந்தாங்கி இப்போது ராமநாதபுரம் தொகுதிக்குள் வருகிறது. எனவே, அதுதான் என்னுடைய முதல் சாய்ஸ். எனினும் கட்சி சொன்னால், சிவகங்கையில் போட்டியிடவும் நான் தயார்!'' என்றார்.

எப்படியோ... அரசர் முகாமில் தேர்தல் பேரிகை கொட்ட ஆரம்பிச்சாச்சு!

-- குள.சண்முகசுந்தரம்
படங்கள் உ.பாண்டி