தேர்தல் களத்தைக் கணிக்கிறார் வைகோ!

''நேற்று... இன்று... நாளை!''

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஈழப் பிரச்னைக்காக இருபத்தெட்டாவது முறையாக சிறைக்குப் போய்த் திரும்பி இருக் கிறார்.

அனல்மின் நிலைய அடிக்கல்நாட்டு விழாவுக்காக தூத்துக்குடிக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்டியதுதான்

தற்போதைய கைதுக்குக் காரணம். ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கிய வைகோ, பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார். சிறை செல்வதற்கு சில மணிகளுக்கு முன்பாக அவருடன் பேசினோம்.

''காங்கிரஸ்காரர்கள், 'வைகோ சிறைக்குப் போவதன் மூலம் இலங்கைப் பிரச்னை தீர்ந்துவிடுமா? போகாத ஊருக்கு அவர் வழி தேடிக் கொண்டிருக்கிறார்' என சொல்லிவருகிறார்களே?''

''போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருப்பவன் நானல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தி.மு.க. தலைவர் கலைஞரும்தான். ஈழத்தில் போர் உச்ச கட்டத்தை அடைந்துகொண்டிருந்த நேரத்தில் முதுகுவலி என்று சொல்லி மருத்துவமனையில் ஒதுங்கிக்கொண்டார் கலைஞர். 'ஒரு மாதம் ஒதுங்கியிருங்கள். புலிகளோடு தமிழர்களையும் கொன்று குவித்துவிட்டுச் சொல்லி அனுப்புகிறோம். வீடு திரும்புங்கள்!' என்ற டெல்லி யின் குரலுக்கு செவிசாய்த்துப் படுக்கையில்

சாய்ந்து கொண்டார். என்ன நடந்தது..? புலிகளை அழிக்க முடிந்ததா? அழிந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப் பாற்றிக் கொண்டிருப்பதே புலிகள்தான். அவர்களின் வெற்றியையும் தமிழீழம் அமைவதையும் கலைஞர் பார்க்கத்தான் போகிறார். போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, கொழும்பு சென்று வயிறு முட்ட விருந்துண்டு, ஒப்புக்குச் சப்பாணி யாக தூத்துக்குடியில் மேடையில் நின்று போர்நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அவருக்கு கறுப்புக்கொடி காட்டிய எங்களை சிறையில் தள்ளி சந்தோஷப்படுகிறார் கலைஞர். இதே பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கடந்த 91-ம் ஆண்டும் ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு அடைக்கப்பட்டேன். அது, அன்று கலைஞரின் ஆட்சியை மத்திய சர்க்கார் கலைத்ததை எதிர்த்து ஆர்ப் பாட்டம் நடத்தியதற்காக! ஆனால் இன்று, 'வைகோவை உள்ளே தள்ளிவிட்டேன். இனி ஒரு பயல் ஈழத்தைப் பற்றிப் பேச முடியாது' என்று காங்கிரசுக்கு பாதபூஜை செய்கிறார் தமிழனத் தலைவராக தன்னை விளித்துக் கொள்ளும் கலைஞர்!''

''நீங்கள் கறுப்புக்கொடி காட்டுகிறீர்கள். உங்கள் கூட்டணித் தலைவி ஜெயலலிதாவோ காங்கிரஸ் கட்சியைக் கூட்டணிக்கு அழைக்கிறார். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?''

''ஈழப் பிரச்னையில் எங்கள் நிலைப்பாடு என்றுமே மாறாது. அதைப் பலமுறை சொல்லிவிட்டோம். அதே பிரச்னையில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன

என்பது உலகத்துக்கே தெரியும். மாறுபட்ட கொள்கையுடைய இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திப்பது புதிதல்ல. தேர்தல் கால அரசியலில் தினம் தினம் நிலைப்பாடு மாறும். அ.தி.மு.க., காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தது நேற்று. 'தி.மு.க-வோடுதான் கூட்டணி' என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது இன்று. தமிழகத்தில் காங்கிரஸோடு சேர்ந்து மக்களை சந்திக்க வரும் தி.மு.க-வையும் சேர்த்துப் படுதோல்வி அடையச் செய்வார்கள் தமிழர்கள். அது நாளை! இந்தக் கூட்டணியோடு சேரும் ஒவ்வொரு கட்சிக்கும் அதுதான் நடக்கும். தேர்தலில் காங்கிரஸை காணாமல் செய்யும் பணிதான் இனி ம.தி.மு.க-வின் தலையாய பணி. அ.தி.மு.க. தலைமையிலான அணி, தமிழர் விரோதக் கட்சிகள் அடங்கிய கூட்டணியை ஓரம் கட்டுவது நிச்சயம்! முத்துக்குமார் உடல் கிடக்கிறது சென்னையில்... முதலமைச்சரின் மகனுக்கு பிறந்தநாள் விழா மதுரையில்! முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. மகனுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார் கலைஞர். இன்னொரு மகனை அனுப்பி 'கேக்' ஊட்டுகிறார். தமிழன் பார்த்துக் கொண்டிருக்கிறான் கலைஞரே! தேர்தலில் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது!''

''உங்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரித்திருக்கிறாரே முதல்வர்?''

''புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடாவில் சிறையில் இருந்த என்னை வெளியில் கொண்டுவந்து தேர்த லில் வெற்றிபெற கலைஞர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணக்குப் போட்டார். இந்த முறை அதே இலங்கைப் பிரச்னைக்காக என்னை உள்ளே தள்ளி முடக்கிவிடக் கணக்குப் போடுகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்காக நான் குரல் கொடுத்ததை ஏற்றுக்கொண்ட கலைஞர் இப்போது எதிர்க்கிறார். எனக்கும் சட்டம் தெரியும். கறுப்புக் கொடி காட்டுவது நேரு காலத்திலேயே அனுமதிக்கப்பட்ட ஒன்று...''

''இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இருக்கிறதா? நீங்களும் நெடுமாறனும் மட்டும்தான் அதில் இருப்பது போல் தெரிகிறதே?''

''அந்த இயக்கத்தைக் கரைத்துவிட கலைஞர் கணக்குப் போட்டுக் காய் நகர்த்துகிறார். அதற்கு டாக்டர் ராமதாசும், திருமாவளவனும் பலியாக மாட்டார்கள். பிரணாப் முகர்ஜிக்கு கறுப்புக்கொடி காட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களும் வந்திருந்தார்களே!'' என்று நிறுத்திய வைகோ,

''2004-ல் வேலூர் சிறை வாசலில் என் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தேன். தி.மு.க. கூட்டணிக்கு நாற்பதும் வசப்பட்டது. இன்னும் இரண்டொரு நாளில் இங்கே, பாளையங்கோட்டை சிறை வாசலில் தொடங்கிவிடும் என் பிரசாரம். அதே நாற்பது இம்முறை அ.தி.மு.க. அணிக்கு வாய்க்கும்...''

''சரி, பிரபாகரன் எங்கே இருக்கிறார்? போர் முனையிலா..? அல்லது இலங்கை ராணுவம் வெளியிடுவது போன்ற ஏதேனும் ஒரு சொகுசுப் பதுங்கு குழியிலா?''

''அவர் சொகுசாக வாழ்வதாக சிங்கள ராணுவம் காட்டும் பொய்ப் பிரசாரப் படங்களை நம்பி சில மீடியாக்கள் வெளியிடும் செய்திகளால் விளைந்தது உங்கள் கேள்வி. மரத்திலும், பலகையிலும் படுத்துத் தூங்குபவர் பிரபாகரன். எனக்குத் தெரியும், அவர் தேனீர்கூட அருந்த மாட்டார். ஆனால், சிங்கள ராணுவ வெறியன் பிராந்தி பாட்டிலைக் காட்டி, அது அவர் பருகியது என்கிறான்.

சிங்கள வீரர்களைப் புலிகள் கைதுசெய்தால், அவர்களுக்கு மூன்று வேளையும் சோறு போட்டு நாகரிகமாக நடத்துவார்கள். ஒரு முறை சிங்களப் பெண்ணொருத்தி கொழும்பிலிருந்து கிளம்பிவந்து மிகுந்த சிரமங்களுக்கிடையில் பிரபாகரனை

தனியாக சந்திக்கிறாள். 'சண்டை நடந்தபோது ராணுவத்துக்குத் தெரியாமல் என் கணவர் ஒரு முறை வீட்டுக்கு வந்தார். இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டுப் போனார். இதை வெளியில் சொன்னால் கணவர் மீது நடவடிக்கை பாயுமென்று ரகசியமாக வைத்துவிட்டேன். இப்போது நான் கர்ப்பமாகி விட்டேன். ஆனால், நான் நெறிகெட்டு விட்டதாக இப்போது என் உறவினர்கள் தவறாகப் பேசுகிறார்கள். இப்போது என் கணவர் உங்கள் பிடியில்! என் கணவரை விடுவித்து அனுப்பினால் அவர் வந்து உறவினர்களிடமும் ஊராரிடமும் சொல்வார்' என்று கதறுகிறார் அந்தப் பெண். அடுத்த கணம் பிரபாகரன், அந்த சிங்கள சிப்பாயை விடுவித்து, பத்திரமாக அனுப்பி வைத்தார்.

எந்த சிங்களப் பெண்ணையாவது புலிகள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று எங்காவது ஒரு நிகழ்ச்சியை ஆதாரத்தோடு காட்டச் சொல்லுங்கள்... அதன் பிறகு, நான் ஈழத் தமிழர்களைப் பற்றி இனிமேல் பேச மாட்டேன். மறுபடி சொல்கிறேன்... ஈழத் தமிழர் மீதான மிருகவெறித் தாக்குலின் பழியிலிருந்து, பிரபாகரன் பற்றி அவதூறு கிளப்புவதன் மூலம் சிங்கள அரசு தப்பித்துவிட முடியாது!''

- எஸ்.சரவணகுமார்
படங்கள் எல்.ராஜேந்திரன்