குமரி நோக்கி புதிய பயணம்

செயல் புயல் கிளப்பும் கயல் புயல்!

'மதுரை தொகுதியில் அண்ணன் போட்டியிடுவது உறுதி!' என திடமாக நம்பிக் கொண்டிருக் கிறார்கள் அழகிரியின் விசுவாசத் தம்பிகள். ஆனால், அழகிரியின் முடிவில் நாளுக்கொரு மாற்றம் வந்துபோய்க் கொண்டிருப்பதாகச் சொல்லும் அவருக்கு நெருக்கமான வட்டத்தினர், ''இப்போது அண்ணனின் கவனம் கன்னியாகுமரிப் பக்கம் திரும்பியிருக்கிறது!'' என்று புது குண்டைத் தூக்கிப்போடுகிறார்கள்.

''அழகிரி அண்ணன் இப்போதைக்கு எலெக்ஷனில் நிக்க வேண்டாம்கிறதுதான்

காந்தி அண்ணியோட அட்வைஸ். ஜாதக சம்பிரதாயங்களை அதிகமா நம்புற அவங்க, பிரபல ஜோதிடர்களிடம் கணிப்புக் கேட்டுட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்காங்க. ஆனா, அதிலெல்லாம் அண்ணனுக்குநம்பிக்கை இல்லை. சமீபத்துல சீர்காழிக்கு அருகில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயில் போயிருந்த காந்தி அண்ணி, அண்ணனுக்கு ஏடு பாத்திருக்காங்க அதுல 'இப்போதைக்கு தேர்தலில் நின்னு ஜெயிச்சாலும் சோபிக்கிறது கஷ்டம். தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்'னு வந்திருக்கு. இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்காம கட்சிக்காரங்களோட ஆர்வம் குறையாதபடி பார்த்துக்கிட்டு இருக்காரு அண்ணன்.

காங்கிரஸ் தரப்புல ஜி.கே.வாசனுக்காக ஒதுக்கியிருக்கிற மூணு ஸீட்டுல ராம்பாபுவுக்காக மதுரை தொகுதியை ஒதுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால, 'நம்ம வீட்டுல இருந்து யாருமே இந்தத் தேர்தல்ல நிக்க வேண்டாம்பா'னு தலைவரே அண்ணன்கிட்ட பேசினதாவும் சொல் றாங்க. அதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு மதுரை தொகுதிக்குள்ள தனக்கு நெருக்கமான சிலரை விட்டு சர்வே எடுக்க வச்சாரு அண்ணன். அதோட நிக்காம, அவரே டெலிபோன்

டைரக்டரியை எடுத்து குத்துமதிப்பா சில நம்பர்களுக்கு போன் போட்டு, 'ஏங்க மதுரை தொகுதியில கருணாநிதியோட மகன் அழகிரி நிக்கிறதாச் சொல்றாங்களே... அவருக்கு நீங்க ஓட்டுப் போடுவீங்களா'னு கேட்டு மக்களோட மனசை அறியப் பாத்துருக்காரு. அதில் அவருக்கு என்ன 'ஃபீட்பேக்' கிடைச்சுதுன்னு தெரியலை. இப்ப மதுரையை ரெண்டாம் பட்சமா வச்சுட்டு கன்னியாகுமரி பக்கம் அவரோட பார்வை திரும்பிடுச்சு.

ஒருவேளை, மதுரையைக் கூட்டணிக்குவிட்டுக் கொடுக்க வேண்டிய இக்கட்டு வந்தால், அதுக்குபதிலா கன்னியாகுமரி தொகுதியில தன் மகள் 'கவிதாயினி' கயல்விழியை நிறுத்தலாம்ங்கிறது அண்ணனோட பிளான். கயல்விழியோட மாமனார் டாக்டர்சந்திரசேகர னோட பூர்வீகம் நாகர்கோவில்தான். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், நாடார் ஓட்டுகளும் சிறுபான்மையினர் ஓட்டுகளும் மகளுக் குச் சாதகமா இருக்கும்னு அண்ணன் நெனைக்கிறாரு. இப்ப கன்னியாகுமரி தொகுதிக்குள்ள இருக்கிற ஆறு சட்டமன்றத் தொகுதிகள்ல ரெண்டுல தி.மு.க-வும் ரெண்டுல காங்கிரசும் ரெண்டுல கம்யூனிஸ்ட்களும் உறுப்பினர்களை பெற்றிருக்கு. அதுமட்டுமல்ல, தொகுதில அ.தி.மு.க. படுவீக்கா இருக்கு.

இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டுத்தான் அண்மையில் நாகர்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்துல அழகிரி அண்ணன் பேசுறப்ப, 'இந்த முறை கன்னியாகுமரி தொகுதியை தி.மு.க-வுக்கு ஒதுக்கச் சொல்லி தலைமையிடம் மன்றாடிக் கேட்பேன்'னு சொல்லியிருக்காரு. ஏற்கெனவே இந்தத் தொகுதிக்காக கயல்விழி பேருக்கு தலைமையில் பணம் கட்டின நாகர்கோவில் எம்.எல்.ஏ-வான ராஜனும், 'கன்னியாகுமரி தொகுதியில கயல்விழி போட்டியிடணும்'னு பேசியிருக்காரு. இந்தக் கூட்டம் முடிஞ்ச கையோட, 'கன்னியாகுமரியில கயல்விழி போட்டியிடணும்'னு தி.மு.க. தரப்புல தீர்மானமே போட்டுட்டாங்க!'' என்கிறார்கள் அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

அழகிரி தரப்பில் இப்படியரு மூவ் நடப்பது தெரிந்துதான் குமரி மாவட்ட காங்கிரஸார், தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக்கோரி அவசரத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ஆக, இதுவரை மதுரையை மையம் கொண்டிருந்த அழகிரி புயல், இப்போது குமரியை நோக்கியும் நகர ஆரம்பித்திருக்கிறது!

- குள.சண்முகசுந்தரம்
படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி