திருச்சியை வலம் வரும் திருவாளர்கள்...!

'நாங்க நின்னா வெற்றி உறுதி..'

'வந்தாரை வாழவைக்கும்' பெருமை யுடைய தொகுதி திருச்சி. தலித் எழில்மலை, ரங்கராஜன் குமார மங்கலம், எல்.கணேசன் என திருச்சிக்கு சம்பந்தமில்லாமல் வேறு ஊர்களில் இருந்து வந்து போட்டியிட்டவர்களை ஜெயிக்க வைத்தது திருச்சி. இதனாலேயே இந்த முறையும் இங்கு ஸீட் பிடிக்க வெளிமாவட்டத்து ஆட்கள் போடும் போட்டா போட்டியால் அனல் பறக்கிறது!

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் திருச்சி தொகுதியிலிருந்த லால்குடி, முசிறி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியுடன்

இணைக்கப்பட்டு விட்டன. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு பழைய சட்டமன்றத் தொகுதிகளுடன் கலைக்கப் பட்ட புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை(தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் தற்போதைய சீரமைப்பின்படி திருச்சி தொகுதியாக உருவாக்கம் பெற்றிருக்கிறது. கள்ளர் சமூகம்தான் தொகுதியின் மெஜாரிட்டி வாக்கு வங்கியாக இருக்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது தலித்கள். மேலும், வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளும் இங்கு அதிகம். இது தவிர முத்தரையர், உடையார் ஆகிய சமூகத்து வாக்குகளும் ஓரளவுக்கு இருக்கின்றன.

தற்போது வனத்துறை அமைச்சராக இருக்கும் செல்வ ராஜ்தான், கடைசியாக திருச்சி தொகுதியில் ஜெயித்த தி.மு.க எம்.பி. 1980-ல் ஜெயித்த அவர், 1984-ம்

வருடம் காங்கிரஸின் அடைக்கல ராஜிடம் தோற்றுப் போனார். அதன் பிறகு, கடந்த தேர்தல் வரை தி.மு.க நேரிடையாக இங்கு களமிறங்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கேதொகுதியை ஒதுக்கிவிடுகிறது. ஆனால், இந்த முறை தொகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட தி.மு.க-வினர் முழுமூச்சாக மோதுகிறார்கள். அதிலும் புதுக்கோட்டை தொகுதி கலைக்கப்பட்டு விட்டதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க-வினர் வெகு முனைப்புடன் இருக்கிறார்கள்.

மு.க. அழகிரியின் ஆதரவு பெற்ற மத்திய அமைச்சர் ரகுபதி, தொகுதியைக்

கேட்டு வலியு றுத்திக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ண அரசு தொகுதி தனக்குத்தான்என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இவர்களைத் தவிர, லோக்கல் அமைச்சர் கே.என்.நேரு தன் விசுவாசியான துணை மேயர் அன்பழகனுக்கு ஸீட் கொடுக்கவேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறாராம். ஆனால், கட்சிக்காரர்களில் சிலர், 'தொகுதி காங்கிரசுக்கு ஒதுங்கிவிடும்' என்கிறார்கள்.

ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சாருபாலா, கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர். இரண்டாவது முறையாக திருச்சி மேயராக இருந்துவரும், சாருபாலா தொகுதியைப் பெற தீவிரமாக முயன்று வருகிறார். இவர்களைத் தவிர, ஜி.கே.வாசனின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் ஆனந்தராஜா, முன்னாள் எம்.பி-யான அடைக்கல

ராஜின் மகன் ஜோஸப் லூயிஸ், 'ஜி.கே.வாசன் எஸ்டேட்ஸ்' நிறுவனத்தின் ரவிமுருகையா ஆகியோரும் காங்கிரஸில் தீவிரமாக ஸீட் கேட்கிறார்கள். இவர்கள் தவிர, டெல்லி காங்கிரஸ் தலைவர்களோடு நெருக்கமாக வலம் வரும் சுப.சோமு என்பவரும் வேட்பாளர் ரேஸில் இருக்கிறாராம்.

அமைச்சர் நேருவிடம் பேசினோம். ''திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க-விடம் இருப்ப தால்... எங்களுக்குத்தான் இந்தத் தொகுதி சாதகமாக இருக்கும். அதனால கடந்த காலங்களை எல்லாம் பார்க்காமல் இந்த முறை திருச்சியை தி.மு.க-வுக்குத்தான் ஒதுக்கணும்னு தலைவர்கிட்ட கேட்போம். அது முடியாத பட்சத்தில், தலைவர் யாரைச் சொல்றாரோ... அவரைஜெயிக்க வைப்போம். எப்படி இருந்தா லும், திருச்சி தி.மு.க. கோட்டை என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜித மாகும்!'' என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வாண் டையார் பெயர்தான் பிரதா னமாக அடிபடுகிறது. வாண்டை யாரும் தன் தரப்பு ஆட்களை அனுப்பி, முதல் கட்டப் பணிகளைத் தொடங்கி விட் டாராம். அதே போல, புதுக்கோட்டை தொகுதியின் விஜயபாஸ்கர், ஆசிரியர் ஆர்.மதியழகன் ஆகியோரும் தங்களை வேட்பாளராக்குவார்கள் என்கிற கனவில் இருக் கிறார்கள். இவர்களைத் தவிர்த்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானும்

தீவிரமாக முயற்சி பண்ணுவதாகச் சொல்கிறார்கள். மாநகர் மாவட்டச் செய லாளர் மனோகர், முன்னாள் மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்ட 52 பேர் திருச்சி தொகுதிக்காக மோதுகிறார்கள்.

இன்னொரு பக்கம் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க-வோ, 'திருச்சி ஏற்கெனவே எங்களி டம் இருந்த தொகுதி, அதனால் திருச்சியை எங்களுக்கு விட்டுக் கொடுங்கள்!' எனக் கேட்கிறார்களாம். அப்படி அவர்களுக்கு ஒதுக்கப் பட்டால், வைகோவின் நெருங் கிய நண்பரான இன்ஜினீயர் ஷேக் முகமதுவுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்கிறார்கள்.

திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருச்சி தொகுதி பொறுப்பாளருமான கே.கே.பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ''கலைஞர் குடும்பம் ஊர்ஊரா பிரிச்சு வைச்சுக் கிட்டு... கூத்தடிச்சுக்கிட்டு இருக்காங்க. இலங்கை விஷயத்துல அம்மா இருந்த உண்ணா விரதம் எல்லா தரப்பு மக்களையும் சுண்டி இழுத்துருக்கு. அதுவுமில் லாமல், தி.மு.க. ஆட்சியில் அவங்க

செஞ்சிருக்கற அடாவடிகளால மக்கள்கிட்ட ரொம்பகெட்ட பெயர் இருக்கு. அதனால நாங்க ரொம்ப ஈஸியா ஜெயிச்சுடுவோம். திருச்சி யில வித்தியாசம் அதிகமாக இருக்கும்...'' என்கிறார் நம்பிக்கையாக.

''அதெல்லாம் சரிங்க... அப்புறம் என்னத்தை எதிர்பார்த்து எல்.ஜி. மறுபடியும் தி.மு.க-வுக்கே வந்து சேர்ந்திருக்காரு..? திருச்சியில் மறுபடி அவருக்கு ஸீட் கொடுக்குறது விஷப் பரீட்சைனு தலைமைக்குத் தெரியும். வேறு எங்கேயும் கொடுக்காட்டி எல்.ஜி. சும்மா இருப்பாரா?''

- இது திருச்சி நகர தி.மு.க. உடன் பிறப்புகளின் மண் டையைக் குடையும் கேள்வி!

டெயில் பீஸ் மார்ச் 26-ம் தேதியன்று தே.மு.தி.க-வின் திருச்சி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பூர்வீகம் திருவாரூர். பல வருடங்களாக திருச்சியில் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். விஜயகாந்த்தின் தூரத்து உறவுக் காரர் இவர்.

- மு.தாமரைக்கண்ணன்
படங்கள் என்.ஜி.மணிகண்டன்