ரிசல்ட் முன்னே.... வாக்கெடுப்பு பின்னே!

''சரியாக ஐந்து வருடமும் ஒரு மாதமும் ஆகிறது... அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ம.க-வின் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட்டுப் பேசினார் நிறுவனர் ராமதாஸ்... 'அ.தி.மு.க-வுடன் இனி எந்தக் காலத்திலும் பா.ம.க. கூட்டு வைத்துக்கொள்ளாது. இதை பத்திரத்தில் வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்!' என்று அவர் சொன்னார். ஆனால், பத்திரமாக அவர் எழுதித் தரவில்லை!'' என்று சொல்லிக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார்...

''பரவாயில்லை. அதுதான் பத்திரமாக உம் ஞாபக அடுக்கில் அப்படியே இருக்கிறதே...'' என்றபடி, இந்த 'ஏப்ரல்-1' தேதி இதழுக்கான கழுகார் செய்திகளை குறிப்பெடுக்கத் தயாரானோம்.

''இன்னொன்றும் அப்போது சொல்லியிருந்தார் ராமதாஸ்... 'பி.ஜே.பி. இருக்கும் அமைச்சரவையில் இனி பா.ம.க. ஒருபோதும் சேராது!' என்று! ''தேர்தலுக்குப் பின் னால் அதுபற்றி நாம் பேசுவோம்!'' என்று கழுகார் சிரிக்க... நாம் ஸ்பெஷல் அல்வா நீட்டினோம் அவருக்கு!

''பொதுக்குழு வாக்கெடுப்பு எப்படியிருக்கும் என்று கடந்த இதழ்

முத்தாய்ப்பிலேயே உமக்கு நான் கோடி காட்டியிருந்தேன். அதில் ஒரு எக்ஸ்ட்ரா சுவாரஸ்யம். வாக்கெடுப்பு முடிந்த பிறகு முதலில் பரவிய செய்தி 'அ.தி.மு.க-வுக்கு 2,453 மற்றும் தி.மு.க-வுக்கு 111' என்று! அவசரமாக இது தி.மு.க. வட்டாரம் வரை எட்ட, 'திட்டமிட்டே இந்த நம்பரை வரவழைத்திருக்கிறார்கள். நமக்கு அவர்கள் நாமம் போடுவதாக கேலிச் செய்தி பத்திரிகைகளில் வரவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள்!' என்று அறிவாலய ஏரியாவில் உறுமல் ஒலித்தது. அதற்குள், 'தி.மு.க-வுக்கு விழுந்தவை 117' என்று பொதுக்குழு மண்டபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு... 'நாம' சலசலப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது!''

''சென்டிமென்ட் பிரியர்களுக்கு இதிலும் ஒரு வேடிக்கை இருப்பதை நீர் கவனித் தீரா?'' என்று நாம் கேட்டோம். கழுகார் புரியாமல் பார்க்க...

''தி.மு.க-வுக்கு பா.ம.க. நிர்வாகிகள் போட்ட ஓட்டுகளைக் கூட்டிப் பார்த் தால், அ.தி.மு.க-வுக்கு ராசியான 9 வருகிறது. அதே சமயம், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் போட்டதைக் கூட்டி னால், தி.மு.க. தன்னுடைய அடையாளமாக விரல் விரித்துக் காட்டும் 5 வருகிறது!''

''நான் உமக்கொரு சென்டிமென்ட் சொல்கிறேன்... ஆதரவு-எதிர்ப்பு விகிதங்களைச் சொல்லி முடித்துவிட்டு, அன்று மாலையே போயஸ் தோட்டம் போய் 'அன்புச் சகோதரி' கூட்டணியில் ஐக்கியமாவதுதான் டாக்டரின் திட்டம். நிறைந்த அமாவாசை என்பதால் அன்றே தன் முடிவை முழுமைப்படுத்திவிட எண்ணியிருந்தார். ஆனால், சகோதரியோ, வேறு சில காரணங்களுக்காக சந்திப்பை 28-ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார் என்று பொதுக்குழு மண்டபத்தில் பேசிக்கொண்டார்கள்.''

''ஆனால், கழுகாரே... 27-ம் தேதி சந்தித்தால், அம்மை யாரின் ராசித் தொகை 9 வந்துவிடுமே...''

''அமாவாசைக்கு அடுத்த நாள் 'பாட்டிமை' என் பார்கள். அன்றைக்கு செய்கிற எதுவும் சரிவராதுஎன்பது ஜோதிட உலகப் பொது நம்பிக்கையாச்சே! பார்ப்போம்... நீர் சொல்கிறபடியேகூட நடக்கலாம் சந்திப்பு!'' என்ற கழுகார், ஏதோ நினைத்தார். விழுந்து விழுந்து சிரித்தார்.

''நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே இந்தப் பிரிவுச் செய்திக்கான டிரெய்லரை இரு கட்சிகளும்போட ஆரம்பித்துவிட்டன. முக்கியமாக ஆற்காட் டாரின் அபிமான 'எதிரொலி'யில், 'கொட்டுவது தேளின் குணம்; குரைப்பது நாயின் குணம்; இரண்டும் சேர்ந்தது பா.ம.க. ராமதாஸின் குணம்' என்று 'புகழ்ந்து' தள்ளியிருந்தார்கள். அதேபோல், 'தெரியாதா..? ஓட்டெடுப்பு முடிவு இப்படித்தான் இருக்கும்' என்றும் முன்னோட் டமாகவே நக்கலடித்திருந்தார்கள்! தி.மு.க-வைப் பொறுத்தவரை, ஒரு வாரத்துக்கு முன்பாகவே அ.தி.மு.க-வுடன் பேசி முடித்துவிட்டது பா.ம.க! அடுத்த நாட்களில் நடந்ததெல்லாம் வெறும் நாடகம். பொதுக்குழு வாக்கெடுப்பு ரிசல்ட் டெல்லாம் அதற்காகவே முன்கூட்டி முடிவு செய்யப்பட்டதுதான்..!''

''அது சரி... ஆகாது என்று முடிவான பிறகு அடித்துத் தள்ளுவதுதானே அரசியல்!''

''இலங்கை விவகாரத்தில் ராமதாஸை தாக்கி செம நக்கலாக கருணாநிதி எழுதியிருந்த கேள்வி-பதிலுக்கு ராமதாஸ் கொடுத்த சாட்டையடி பதிலும் ஓட்டெடுப்புக்கு முன்பே வெளியாகிவிட்டது. 'கள்ளத்தோணி ஏறி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற இவர்கள் போகட்டுமே... சந்தோஷமாகக் கையாட்டி அனுப்பி வைக்கி றோம்!' என்று கருணாநிதி சொல்ல... 'நாட்டின் இறையாண்மை பற்றிப் பேசுகிற - ஒரு மாநிலத் தின் முதல்வரா கள்ளத்தோணிக்கு ஏற்பாடு செய்வது?' என்று நறுக்கென்று குட்டியிருந்தார் ராமதாஸ்!''

''ரெண்டு கட்சியும் நடத்திய கூட்டுக் குடும்பத்தின் உள் விவகாரமெல்லாம் இனி வரிசையாக வெளியில் வருமாக்கும்...'' என்றோம்.

''அது மட்டுமல்ல... பா.ம.க. பெல்ட்டில் அவர் களைத் தோற்கடிக்க வேண்டிய அசைன்மென்ட் தி.மு.க-வில் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நால்வருக்கும் போதுமான அளவு லட்சுமி கடாட்சமும், காவல் துறையின் காபந்தும் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யப்படுமாம். அடுத்த இரண்டு வாரத்துக்குள் ம.தி.மு.க. பாணியில் தி.மு.க-வுக்கு ஆட்கள் வந்து சேர்ந்தாலும் ஆச்சரியப்படாதீர். அதே போல், காடுவெட்டி குரு உள்ளிட்ட பலர் மீது பதிவாகித் தூங்கிக்கொண்டிருக்கும் வழக்குகளும் பட்ட வர்த்தமானமாகப் பாயப்போகிறது!''

''அது சரி... 'ஏக் மார்... தோ டுக்டா' காலமாச்சே இது... கூச்சநாச்சம் பார்த்தால் அரசியல் பண்ண முடியுமா?'' என்று சிரித்தோம்.

''இதையும் கேளும்... 'வன்னியர்களுக்கு ராம தாஸ் செய்த துரோகம்' என்று மறைந்த வாழப் பாடியார் போட்ட புத்தகம் அறிவாலயக் கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறது. மறுபதிப்பாக அதை லட்சக் கணக்கில் அச்சடித்து விநியோகிக்க அவர்களிடம் பணமா இல்லை! அதே போல், இலங்கைப் பிரச்னை குறித்து ஜெயலலிதா எழுப்பப் போகும் கேள்விக்கெல்லாம், 'எங்களோடுதானே பா.ம.க-வும் டெல்லியில் இருந்தது. அவர்களைக் கேட்டாலே அம்மையாருக்கு விளக்கமாக பதில் கிடைக்குமே...' என்று ஸ்டாண்டர்டான நக்கல் பதிலையும் கைவசம் வைத்திருக்கிறார் கறுப்பு-சிவப்பு கட்சி தலைவர்!''

''போச்சுடா...''

''இன்னொரு முக்கியமான தகவலும் அறிவாலய வட்டாரத்தில் உலா வருகிறது. அந்தச் செய்தி - 'பாட்டாளி மக்கள் கட்சியை தி.மு.க. கூட்டணியிலேயே இருத்தி

வைக்க வேண்டும் என்பதற்காக திருமா வளவன் தொடர்ந்து கருணாநிதியை சந்தித்தார். அப்போதுகூட டாக்டர் ராமதாஸ் ஒரு கோரிக்கையை திருமாவளவன் மூலமாக முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றக் கேட்டுக் கொண்டாராம். அப்போது முதல்வரும் 'நான் செய்து கொடுக்கிறேன். ஆனால், ராமதாஸ் எப்படியும் அ.தி.மு.க. பக்கம் போய்விடுவார். அப்படிப் போனால், நான் செய்து கொடுக்கும் இந்த விஷயம், நிச்சயம் அம்பலத்துக்கு வந்துவிடும்' என்று சொல்லியே குறிப்பிட்ட அந்த காரியத்தை முடித்துக் கொடுத்தார். தற்போது முதல்வர் ஏற்கெனவே எதிர்பார்த்தது போலவே ராமதாஸ் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டதால், அந்தச் செய்தி விரைவில் அம்பலமாகும்...' என்பதுதான்...'' என்று சொன்ன கழுகார்,

''சோனியா காந்தி அமேதி தொகுதியில் நின்றுகொண்டு, வருண் காந்தி விவகாரம் குறித்து பிரியங்கா காந்தி அளித்த சூடான சாட்டிலைட் பேட்டியைப் பார்த்தாராம் தி.மு.க. தலைவர். அவர் மூளைக்குள் சுறுசுறு... முதுகு வலி காரணமாக, தான் அதிகம் பிரசாரப் பயணம் மேற்கொள்ள முடியாத குறையை, பிரியங்கா காந்தி மூலம் ஈடு செய்ய முடியுமே என்று யோசித்தாராம். சோனியா காந்திக்கு ஸ்பெஷல் வேண்டுகோள் வைத்திருக்கிறார் - புத்திரிக்கு தமிழகத்தில் நாள் ஒதுக்கிக் கொடுக்கும்படி!''

''சரி... அ.தி.மு.க-வில் ஸீட் கேட்கும் படலம் எப்படியிருக்கிறது?''

''ஜோதிடத்தையும் ஜாதகத்தையும்நம்பினா லும், இந்த முறை தி.மு.க. பாணியில்பழைய தலைகளை களத்தில் இறக்க முடிவெடுத்திருக் கிறதாம் தலைமை. அந்த வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கும் பழைய கட்சிக்காரர்களின் லிஸ்ட் அம்மாவின் டேபிளில் அமர்ந்திருக்கிறது. கடலாடி சத்தியமூர்த்தி, ஈரோடு முத்துசாமி, பொன்னையன், சின்னசாமி, நயினார் நாகேந் திரன், பி.ஹெச்.பாண்டியன், ராஜகண்ணப்பன் என்று நீளும் அந்த லிஸ்ட்டில் மாஜி மந்திரி கே.ஏ.கே-வின் மகன் முகில், காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை என வாரிசு களின் பெயரும் இருக்கிறதாம். தகவல் அரசல்புரசலாகக் கசிந்ததில் அவர்களுக்கு உற்சாகம்...''

''இவர்களுக்கு உற்சாகம் என்றால்... அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சோகத்தில் உச் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள், தெரியுமா?''

''ஏன் தெரியாது? 'தேர்தல் நிதியாக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஒரு கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும்...' என்று அம்மாவின் ஆணை வந்ததால், அவர்கள் 'உச்'தானே கொட்டுவார்கள்? 'ஆட்சியில் இருந்தாலும் அள்ள அள்ள வரும். பவர்இல்லாத நிலையில் எவர் தருவார்கள்?எப்படி வசூல் செய்வது?' என்பதுதான் அவர்களின் குழப்பம். தலைமையோ, ஆர்டர் போட்டதோடு மட்டுமல்ல... 'கட்சிக் காரர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத் தால், அவர்களுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டு ஒரு கடிதம் அனுப்புவார். ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், நேரில் வந்து ஜெயலலிதாவோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்' என்றெல்லாம் நிறைய ஆஃபராம்.''

''அம்மாவை நேரில் ஒரு தடவை பார்க்க நினைக்கும் கட்சிக்காரர்களால் ஒரு லட்சம் தர முடியாதா என்ன?''

''இப்படி நிதி வசூல் மட்டுமல்ல... தி.மு.க-வோடு அதிருப்தியில் இருக்கும் சின்னச் சின்னத் தலைவர் களையும் கவர் பண்ண வேண்டும் என்றும் அடிஷனல்

உத்தரவும் வந்திருக்கிறதாம். அந்த வகையில், விஜய டி.ராஜேந்தர், நடிகர் கார்த்திக் போன்றவர்களிடம் அ.தி.மு.க-வின் பிரசாரத்துக்கு வருமாறு பேச்சுவார்த்தை நடக்கிறதாம். டி.ஆரை சந்தித்து சில அ.தி.மு.க. புள்ளிகள் பிரசாரத்துக்கு அழைக்க... 'நான் சும்மாவெல்லாம் பிரசாரம் பண்ண மாட்டேன். என்னுடைய கட்சிக்கு மூன்று ஸீட் கொடுத்தால் வருகிறேன்...' என்றாராம். சிரிப்பை அடக்கமாட்டாத புள்ளிகள் 'அம்மாவிடம் பேசிட்டுச் சொல்றோம்' என்று நழுவல் பதில் சொல்லி இருக்கிறார்கள். கொங்கு பெல்ட்டில் உதித்த புதுக் கட்சியான 'கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை'யோடும் அ.தி.மு.க. பேசிக் கொண்டிருக்கிறது.''

''அங்கே எப்படி பேரம்?''

''ஏற்கெனவே ஜெயலலிதாவை அந்த கட்சிப் பிரமுகர் கள் சந்தித்துப் போனார்கள். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி சென்னை ராஜ் பார்க் ஹோட்டலில் பேரவையின் முக்கியஸ்தர் தேவராஜன் அ.தி.மு.க. தரப்பினரோடு பேசி இருக்கிறார். 'எங்களுக்கு மேற்கு மண்டலத்தில் ஆறு தொகுதிகள் வேண்டும்...' என்று கொங்கு முழங்க... அங்கும் இதே நழுவல் பதில்தானாம். பேச்சுவார்த்தை முடிந்து கிளம்பிய துக்கடா தலைவர்கள், மீண்டும் அந்த அ.தி.மு.க. புள்ளிகளை தொடர்புகொண்டால்... அவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்களாம்! இதற்கிடையில், அமைச்சர் நேரு மூல மாக தி.மு.க. தரப்போடும் அதே ஆறு தொகுதி கோரிக்கையோடு பேச்சு வார்த் தையில் இருக்கிறார்களாம் கொங்கு தரப்பினர்...''

''ஆறு மனமே ஆறு...''

''நெல்லை மாவட்டத்தின் தி.மு.க. பொறுப்பாளரான கருப்பசாமி பாண்டியனுக்கும்

மு.க.அழகிரிக்கும் உண்டான உரசல்தான் தெரியுமே... லோக்கல் அ.தி.மு.க-வினர் தொடர்ந்து கானாவுக்குக் கொக்கி போட... ஆரம்பத்தில் அவர் களிடம் பிடிகொடுத்துப் பேசிய கானா, 'இப்போது வேணா' என சொல்லிவிட்டாராம். இந்த திடீர் மாற்றத் துக்குக் காரணம், தன் மகனோடு அவர் நடத்திய ஆலோசனைதானாம். 'தி.மு.க-வில் என்னதான் பிரச்னை என்றாலும், இன்றளவிலும் மாவட்டச் செயலாளர் அளவில் பதவி கொடுத்து வைத்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ-வாக்கி இருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் அமைச்சர்கூட ஆக்குவார்கள். அறுபது வயதைக் கடந்த பிறகு, இனி கட்சி மாறி அரசியல் செய்வது உசிதம் இல்லை!' என மகன் போட்ட போட்டுக்கு தலையாட்டிவிட்டாராம்!''

''பிள்ளை சொல் மிக்க மந்திரமில்லை யாக்கும்!''

''சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் நிற்கப் போவது தெரிந்த சங்கதிதான். ஆனால், அங்கே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நிற்கப்போவதும் உறுதியாகி விட்டது. நேற்று வரை ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்த இரண்டு கட்சிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் தொகுதியாகிவிட்டது சிதம்பரம். இந்த நிலையில், சிதம் பரத்தில் திருமாவளவனை ஜெயிக்க வைப்பதற்காக பா.ம.க. சார்பில் பலம் குறைந்த வேட்பாளரைப் போட்டுவிடக் கூடும் என்றொரு குபீர் பேச்சைக் கிளப்பிவிடுகிறார்கள் சிலர்! இதற்கெல்லாம் சான்ஸ் இல்லை என்றாலும் பா.ம.க-வின் சிட்டிங் எம்.பி-யான பொன்னுசாமி சற்று கிலியில்தான் இருக்கிறாராம்...''

''வேறு என்ன எலெக்ஷன் கூத்து?''

''தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் ஜெயித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காதர் மொய்தீன்) கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் சமீபத்தில் கூடியது. அதில் பேசிய பலரும், 'தி.மு.க. கூட்டணியில், நமக்கு ஒரு ஸீட்தானாம். ஆனா, புதிதாக இணைந்திருக்கும் 'மனித நேய மக்கள் கட்சி'க்கு ரெண்டு ஸீட்டாம். அப்படி கொடுத்தா, நம்ம ரெண்டு

எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்வோம்' என பேசியிருக்கிறார்கள்...'' என்ற கழுகார், அதே ஸ்பீடில்...

''அமெரிக்க சின்னத்திரை விருதுகளில் ஒன்றான 'எம்மி அவார்ட்ஸ்' அறிமுக விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. கவிஞர் வைரமுத்துவுக்கு அழைப்பு போயிருந்தது. அவருக்கு பதிலாக வந்தவர், அவரது துடிப்பான இளைய மகன் கபிலன். ஓரிரு வார்த்தைகள் அவரைப் பேசச் சொன்னபோது... அமெரிக்க துணை தூதர் ஆன்ரூ சிம்சினைப் பார்த்து, 'உங்களுக்கு தேர்தல்னா என்னனு தெரியுமா?' என்று ஆரம்பித்து சொடக்குப் போட்டு சில வார்த்தைகளைப் பேச... மேடையில் இருந்தவர்களே கொஞ்சம் அசந்துதான் போனார்களாம். அதோடு, பத்திரிகையாளர்கள் பற்றிய தனது கருத்தை செமகாட்டமாகச் சொல்லி, முன் வரிசையையும் அதிர வைத்தார் கபிலன். விழாக்குழுவினருக்கு 'ஏன்தான் பேச வைத்தோமோ?' என்றாகிப் போனதாம்...''

''போகப் போக வரட்டும் பக்குவம்!'' என்று சொல்லி அனுப்பி வைத்தோம் கழுகாரை!