மற்ற தொகுதிகள் போல் இல்லாமல், மதுரையின் ரிசல்ட்டை நிர்ணயிக்கப் போகிற ஒரே மையப் புள்ளி மு.க. அழகிரிதான்! ப்ளஸ்சும் அவரே... மைனசும் அவரே!

அழகிரியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மோகன். இந்த முறை இவர் வென்றால், ஹாட்ரிக் சாதனை மட்டுமல்ல... 'சர்வபல முதல்வர் மகன், தென் மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளரை மண் கவ்வச் செய்தவர்' என்று மாநிலம் தாண்டிய மீடியா வெளிச்சம் கிடைக்கும். இதனால் மாய்ந்து மாய்ந்து உழைக்கிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்! ஆனால், திடீரென்று உடல்நலம் குன்றி சென்னையில்

போய் ஆஸ்பத்திரியில் மோகன் படுத்துக் கொண்டபோது அவருடைய கட்சி மேலிடமே கொஞ்சம் கலங்கித்தான் போனது.ஆக்ஸிஜன் மாஸ்க் மாட்டியபடி ஆஸ்பத்திரியில் இருந்த மோகன், இறுதிக் கட்ட பிரசாரத்துக்காகதொகுதிக்குள் மறுபடி வந்தார். ஆக, மதுரையின் ப்ளஸ் - மைனஸ் எல்லாவற்றுக்குமே மையப்புள்ளி அழகிரிதான்!

தி.மு.க. தரப்பில், மூன்று மாதங் களுக்கு முன்பே பக்கா பிளான் போட்டு... 'இந்தா பிடி, இது உனக்கு... இது எனக்கு' என்ற ரீதியில் ஒவ்வொரு ஏரியாவும் ஒவ்வொருவரிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது. தினமும் வீடு வீடாக ஏறி, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து... முறைக்க வேண்டிய இடத்தில் முறைத்து... கொடுக்க வேண்டியபடி கொடுத்து, ஓட்டுகளை குருவி கணக்காக சேர்த்து வைத்தார்கள் உடன்பிறப்புகள். ஆளுங்கட்சி என்ற அதிகார பொம்மை கையில் இருப்பதால், அழகிரி ஓட்டுக் கேட்டு போகும்போதே கோரிக்கை மனு குவியும் பந்தாவெல்லாம் நடந்தது. அவற்றுக்கு ஜெட் வேகத்தில் அழகிரி தந்த ரியாக்ஷன் வாக்காளர்களை அசர வைத்தது.

'அழகிரி ஜெயித்தால் அவர் சும்மா இருந்தாலும் அவரைச் சுற்றி இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மதுரையே தாங்காது. கடந்த பத்தாண்டுகள் மோகன் எம்.பி-யாக இருந்திருக்கிறார். அவரோலோ எங்களாலோ மக்களுக்கு எந்த விதத்தி லாவது இடைஞ்சல் ஏற்பட்டது உண்டா?' என்று மோகனுக்காக ஆதரவு கேட்டு, தோழர்கள் நடத்திய பிரசாரத்துக்கு ரெஸ்பான்ஸ் நிறையவே இருந்தது. தலைவி போட்ட ஸ்பெஷல் கட்டளையால், ஜூட்டாகவே அ.தி.மு.க-வும் மோகனைத் தாங்கிப் பிடிக்கிறது. அழகிரி அடிப்பொடிகளோ, ''கண்டிப்பா அண்ணே ஜெயிக்கிறாரு; டெல்லிக்குப் போயி உள்துறைக்கோ, தரைவழி போக்குவரத்து துறைக்கோ அமைச்சரா பொறுப்பேத்துக்குவாரு!'' என்று 'ஜெயிக்கிற குதிரை'யாக வாக்குகளை ஈர்க்கப் பார்க்கிறார்கள்.

தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமுதாயத்தினருக்கு தோதான ஒரே தொகுதி மதுரைதான். அந்த சமூகத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் பேர் மதுரைக்குள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதர வை பெறுவதற்காகவே அழகிரி டி.எம்.எஸ்-சுக்கு பாராட்டு விழா வெல்லாம் எடுத்தார். ஆனால், அழகிரியே களத்துக்கு வந்ததைப் பார்த்து, 'பன்னிரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தங்களுக்கு இனி எக்காலத்திலும் எம்.பி-யாகும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை' என்று கலங்கு கிறார்கள் சௌராஷ்டிரா மக்கள். மோதிலால் என்பவரை தங்கள் வேட்பாளராகவும் நிறுத்தி விட்டனர். இதனால், அழகிரிக்கு சாதகமான அந்த சமுதாயத்து ஓட்டுகளில் ஒரு பகுதி திசைமாற வாய்ப்பிருக்கிறது.

விஜயகாந்த்தின் சொந்த ஊரே மதுரை என்றாலும் இங்கே நடக்கிற அதகள யுத்தத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் கவியரசு பின்னுக்குப் போய்விட்டார். அதென்னவோ... பேட்டியிலும் அறிக்கையிலும் தொடர்ந்து அழகிரியை வறுத்துக்கொண்டிருந்த விஜயகாந்த்தே இங்கு ஸ்பெஷல் ரிஸ்க் எடுக்க வில்லை!

தேர்தல் நாளன்றும் சரி... ரிசல்ட் நாளன்றும் சரி... அழகிரி பெயர் தலைப்புச் செய்தி ஆவதற்குத்தான் அதிகபட்ச வாய்ப்பு!