கடலோரத் தொகுதியான ராமநாதபுரத்தில் தி.மு.க-வின் நடிகர் ரித்தீஷ், அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, பி.ஜே.பி-யின் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோருக்கிடையில் போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது.

இது சிட்டிங் தொகுதி என்பதால், தி.மு.க-வுக்கு சவால்கள் கொஞ்சம் ஜாஸ்தி! அதுவுமில்லாமல், கட்சிக்குள் இருக்கும் பலமுனை எதிர்ப்புகள் வேறு... இதையெல்லாம் சமாளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வேட்பாளர் ரித்தீஷ்.

தன் மகனுக்கு ஸீட் கிடைக்காத விரக்தியில் இருந்த அமைச்சர் சுப.தங்கவேலன்,

தலைமையே கூப்பிட்டுக் கண்டித்த பிறகு, ரித்தீஷின் வெற்றிக்காக உழைக்க ஆரம்பித்தார். ஆனாலும், அவருடைய விசுவாசிகள் பல இடங்களில் குறிப்பறிந்து, அமைதியாக இருக்கிறார்கள். போதாக்குறைக்கு தங்கவேலனின் உள்கட்சி எதிரிகள் வேறு ரித்தீஷை தோற்கவைத்து தங்கவேலனின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து உண்டாக்கத் துடிக்கிறார்கள். 'வள்ளல்' ரித்தீஷ§க்கு இதெல்லாமே வலி..! தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளும் தி.மு.க. கூட்டணி வசம் இருப்பது ரித்தீஷின் கூட்டல் கழித்தலில் நிம்மதி தருகிறது. என்றாலும், தற்போதைய எம்.பி-யான பவானி ராஜேந்திரன் மீது மொத்தமாக இருக்கும் அதிருப்தி அலை, அந்தக் கணக்கில் பெரிய மைனஸ் போட்டு பயமுறுத்துகிறது. அள்ளித் தெளித்த மகராசன் ஒருகட்டத்தில் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

அமைச்சராக இருந்தபோதும் சரி, எம்பி-யாக இருந்தபோதும் சரி... பெரிய அளவில் தொகுதிக்காக எதையும் சாதித்துக் கொடுக்கவில்லை என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியமூர்த்தியும் மொத்தமாக தன் கட்சியின் மகத்துவத்தை நம்பியே களத்தில் நிற்கிறார். சொந்தக் கட்சியினரிடம் மட்டுமில்லாமல், தொகுதிவாசிகளிடமும் கரடுமுரடாக நடந்து கொள்பவர் என்பதால், சாண் ஏறினால் முழம் வழுக்குகிறது சத்தியமூர்த்திக்கு. கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் இவர், அ.தி.மு.க-வின் நிரந்தர வாக்கு வங்கியும், ராஜகண்ணப்பன் வரவால் கிடைத்திருக்கும் யாதவர் ஓட்டுகளும் தன்னை ஜெயிக்க வைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பணப்பெட்டியை இறுக்கிப் பூட்டி வைத்துவிட்டார்.

காபி தண்ணிக்குக்கூட வழியில்லாத ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்முகாமின் வளப்பத்தைக் கண்டு ஏங்கிய காட்சிகளும் உண்டு. ஆளுங்கட்சிக்கு எதிரான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை தாக்குதல்கள் போன்ற சமாசாரங்கள் சத்தியமூர்த்திக்கு நிறையவே சாதகம். ஆனால், அதனால் வரும் ஓட்டுகளை தன் பக்கம் இழுக்க படைபலத்துடன் தயாராக நிற்கிறார் எவர்கிரீன் திருநாவுக்கரசர்.

''அறந்தாங்கியில் ஆறு முறை வென்றவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத மனிதர் என்ற இமேஜ், இல்லை என்று வந்தவர்களுக்கு இயன்றதை செய்யக் கூடியவர்'' என்று செம பில்டப் கொடுக்கிறார்கள் இவரது ஆதரவாளர்கள். கூட்டணி பலம் இல்லாதபோதும், திருநாவுக்கரசரை ஒருபடி உயர வைத்துத்தான் பார்க்கிறார்கள் ஊர் மக்கள். அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வில் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி கொண்டிருக்கும் வி.ஐ.பி-க்கள் பலரும்கூட இவருக்காக மறைமுகப் பிரசாரத்தில் இருக்கிறார்கள்.

அறந்தாங்கி தொகுதியில் அசைக்க முடியாத வாக்கு வங்கியை வைத்திருக்கும் அரசருக்கு திருவாடானை, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருச்சுழி தொகுதிகளிலும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. சரத்குமார் பி.ஜே.பி. அணியில் இருப்பதால், இங்குள்ள நாடார் இனத்தாரின் ஆதரவும் இவர் பக்கம் திரும்பக்கூடிய வாய்ப்பு.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லா கான் உள்ளிட்ட மேலும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் நிற்பதால், தே.மு.தி.க-வின் சிங்கை ஜின்னாவுக்கு படுதிண்டாட்டம்; ஜான் பாண்டியனின் மனைவி பிரிஸில்லா பாண்டியன் களத்தில் இருப்பதால், ரித்தீஷ§க்கு போக வேண்டிய தலித் ஓட்டுகளில் சரிவு!

தாமரையை மூடி மறைப்பது இலைக்கும்... சுட்டெரித்துக் கருக்குவது சூரியனுக்கும் அத்தனை சுலபமில்லை இங்கே!