நிதித்துறை இணையமைச்சர் மறுபடி களம் காணும் தஞ்சைத் தொகுதிக்குள் வாக்காளர் களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் யோகம்தான். எட்டாவது முறையாக இங்கு தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார் பழனிமாணிக்கம். இவரை எதிர்த்து ம.தி.மு.க. சார்பில் எளிமைக்குப் பேர் போன 'து.பா.கி.' என்ற துரை.பாலகிருஷ்ணன் நம்பிக்கையோடு நிற்கிறார். முரசு முழக்கத்துக்கு தே.மு.தி.க-வின் டாக்டர் ராமநாதன்!

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியும் தி.மு.க. கூட்டணியும் ஆளுக்கு மூன்றை கைவசம் வைத்திருக்கின்றன. ''தஞ்சைத் தொகுதியில் நாலு தடவை ஜெயிச்சு

மந்திரியாவும் இருந்துட்டாரு பழனிமாணிக்கம். ஆனால், தொகுதியில் அதுக்கான சாயல் கொஞ்சமாவது இருக்கா?'' என்று கேட்கும் நடுநிலையாளர்கள், ''விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிற எங்களுக்கு விவசாய சம்பந்தமான தொழிற்சாலைகள் உட்பட உருப்படியா ஒண்ணும் அமைச்சுக் கொடுக்கலை. ஆனா, தேர்தல் நேரத்துல நாக்கில் தேன் தடவி ஓட்டுகளை வாங்கி டலாம்னு நெனைக்கிறாரு. இந்தத் தடவை கொடுத்ததை ஜனங்க வாங்கிக்கிட்டாலும்... அவர் நினைச்சது நடக்காது!'' என்று எச்சரிக்கை மணியடிக்கிறார்கள். மேலும், உட்கட்சி தேர்தலில் பழனிமாணிக்கத்தின் மீது கோபமடைந்த தி.மு.க. தீவிர விசுவாசிகள் பலரும் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டாமல் கப்சிப்பாகிக் கிடக்கிறார்கள். ஆனாலும், தளராத நம்பிக்கையோடு 'ஒரு ரூபாய்க்கு அரிசி... இலவச டி.வி.' என்று சாதனைகளைச் சொல்லி சுற்றி வந்தார் பழனிமாணிக்கம்.

ஆனால்... இலங்கைப் பிரச்னை, மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட வேதனைகள் பலமாகவே சுழன்றடிக்கிறது. ''முதல் வரிசையில் நிற்கும் மூன்று முக்கிய வேட்பாளர்களுமே கள்ளர் இனத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும்... து.பா.கி ரொம்ப நல்ல மனுஷர். கட்சிப் பாகு பாடு இல்லாம பலரும் அவருக்காக வேலை பாக்குறாங்க. து.பா.கி.க்கு உறவுமுறையிலும் ஓட்டு அதிகம். ஆனாலும், தஞ்சைப் பகுதியில் செல்வாக்கான சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் சைலண்டாக இருந்தது, து.பா.கி-க்கு பின்னடைவை உண்டாக்கலாம்னு சொல்றாங்க. ஆனா, கடைசிக் கட்ட வேலைகள்ல மகாதேவன் இறங்கிட்டாராம்...'' என அ.தி.மு.க. தரப்பில் நம்பிக்கை பாடுகிறார்கள்.

வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லாவின் சொந்தத் தொகுதியான தஞ்சாவூர் நகரத்தில் அவருடைய பங்களிப்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லை. தி.மு.க.,

எம்.எல்.ஏ-வான துரை. சந்திர சேகரனால் திருவையாறு பகுதியில் தி.மு.க-வின் இமேஜ் பலவீனமா கிக் கிடக்கிறது. முன்பு புதுக் கோட்டை தொகுதிக்குள் இருந்த பேராவூரணி, பட்டுக் கோட்டை பகுதிகள் இப்போது தஞ்சையில் இருப்பது பழனி மாணிக்கத்துக்கு ஆறுதல். அங்குள்ள மீனவர்களுக்கு மத்திய அமைச்சர் ரகுபதி செய்துவைத்த நன்மைகள் உதயசூரியனுக்குக் கைகொடுக்கின்றன.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதியான ஒரத்தநாடு பகுதிதான் தே.மு.தி.க வேட்பாளர் ராமநாதனுக்கும் சொந்த பூமி. எனவே, இங்கு அ.தி.மு.க. வாக்குகளை ராமநாதன் பிரிக்கலாம்.

பழனிமாணிக்கத்தின் அரசியல் அனுபவமும் நான்கு முறை தேர்தலில் வாகை சூடியதும் பண பலமும்அவருக்குப் ப்ளஸ் என்றால்... தேசிய - மாநில அளவிலான அரசியல் நிலவரத்தை வைத்து கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர் அணி செய்கின்ற துறுதுறு பிரசாரத்தால் 'து.பா.கி' ஒரு இழை முன்னால் நீட்டிக்கொண்டு நிற்கிறது.