Published:Updated:

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

தேர்தல் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் திருவிழா

செ.சல்மான், கே.குணசீலன், மு.கார்த்திக், மு.இராகவன், ஜெ.முருகன், துரை.வேம்பையன், இரா. குருபிரசாத், எம்.திலீபன், இ.நவீன், லோகேஸ்வரன்.கோ, அ.கண்ணதாசன், இ.கார்த்திகேயன், ஜீவ கணேஷ்;

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

செ.சல்மான், கே.குணசீலன், மு.கார்த்திக், மு.இராகவன், ஜெ.முருகன், துரை.வேம்பையன், இரா. குருபிரசாத், எம்.திலீபன், இ.நவீன், லோகேஸ்வரன்.கோ, அ.கண்ணதாசன், இ.கார்த்திகேயன், ஜீவ கணேஷ்;

Published:Updated:
தேர்தல் திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல் திருவிழா

படங்கள்: தி.விஜய், தே.தீட்ஷித், எல்.ராஜேந்திரன், உ.பாண்டி, க.தனசேகரன், ம.அரவிந்த், ஈ.ஜெ.நந்தகுமார், நா.ராஜமுருகன், ச.வெங்கடேசன்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கான அரசியல் பகிர்வில் பாலின சமத்துவத்தை உறுதி செய்ய, இது மிக முக்கியமான நகர்வு. தேர்தல் களத்தில் பெண் முகங்கள் களைகட்டியிருக்கின்றன. 75 வயதுப் பாட்டி, 2கே கிட், கல்லூரிப் பேராசிரியர் எனப் பலதரப்பட்ட பெண்கள் வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கே...

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

படிச்ச பொண்ணுன்னு மதிக்கிறாங்க!

கோவை மாநகராட்சி 83-வது வார்டில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் ஸ்நேக மால்யா, 22 வயதாகும் 2கே கிட். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். “பி.எஸ்சி படிச்சிருக்கேன்; எம்.பி.ஏ, எம்.டெக் கரஸ்பாண்டன்ஸ்ல படிக்கிறேன்; ஐ.ஏ.எஸ்தான் இலக்கு. கொரோனா காலத்துல மக்கள் சிரமப்பட்டதை பார்த்து ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. தேர்தல்ல ஜெயிச்சு நம்மாள முடிஞ்சதை மக்களுக்குப் பண்ணுவோம்னு இறங்கிருக்கேன். படிச்ச பொண்ணுங்கறதால எல்லா இடத்துலயும் மரியாதையா நடத்துறாங்க, வரவேற்பு இருக்கு. நான் ஜெயிச்சா வார்டுக்கு இலவச தனி ஆம்புலன்ஸ் முதல் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் வரை நிறைய திட்டங்கள் இருக்கு."

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

மக்கள் நிப்பாட்டுற வேட்பாளர் நான்!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி போடி நாயக்கன்பட்டி 14-வது வார்டில் 21 வயது பொறியியல் பட்டதாரி அபர்ணாவை, சுயேச்சை வேட்பாளராக ஊர் மக்களே நிறுத்தியிருக்கிறார்கள். ‘`எங்க வார்டில் இதுவரை கட்சி சார்பா ஜெயிச்சவங்களால எந்த நன்மையும் இல்லைனு, விஷயம் தெரிஞ்ச ஒருத்தரை சுயேச்சையா நிறுத்த முடிவு செஞ்சோம். ஆனா, எங்க பகுதி மக்களும் இளைஞர்களும் என்னை சந்திச்சு, தேர்தல்ல நிக்க சொல்லிக் கேட்டாங்க. முயன்று பார்க்கலாம்னு நாமினேஷன் பண்ணிட்டேன். எங்க குடும்பத்துல யாரும் அரசியல்ல இல்ல. வெற்றி பெற்றால், மக்கள் என் மேல வெச்ச நம்பிக்கையை செயல்படுத்திக் காட்டுவேன்.’’

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

நான் அப்போவே எஸ்.எஸ்.எல்.சி!

மயிலாடுதுறை நகராட்சித் தேர்தலில் 17-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிருக்கிறார் 75 வயது சொர்ணாம்பாள் பாட்டி. ‘`நான் அந்தக் கால ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. நாம் தமிழர் கட்சியில் ஏழு வருஷமா இருக்கேன். மகளிர் பாசறை மற்றும் ஆன்றோர் பேரவை தலைவியாவும் இருக்கேன். எங்க வார்டுல சுமார் 1,650 வாக்குகள் இருக்கு. எளிமையா வாக்கு சேகரிக்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்.’’

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

முனைவர் வேட்பாளர், முன்மாதிரி வார்டு ஆக்குவேன்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் 17-வது வார்டில் போட்டியிடும் முனைவர் ராணி செல்லபாண்டியன் எம்.ஏ, பி.எட்., எம்.ஃபில், முனைவர் பட்ட ஆய்வாளர் எனப் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர். ‘`20 வருஷமா அ.தி.மு.கவில் இருக்கேன். சின்ன வயசுல இருந்தே அரசியல்ல ஆர்வம். வெற்றிபெற்றா, என் வார்டை முன்மாதிரி வார்டாக்கணும்; எல்லா இடங்களிலும் சாலை, குடிநீர், தெரு விளக்கு, பாதாள சாக்கடை வசதிகளை செய்து கொடுக்கணும்; என் படிப்பை மக்களுக்காகப் பயன்படுத்துவேன்.”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

உற்சாகமா இருக்கேன்!

75 வயதாகும் கமலா தர்மலிங்கம், தி.மு.க சார்பாக நாமக்கல் நகர்மன்ற 35-வது வார்டில் போட்டியிடுகிறார். ‘`இந்த வயசுல இது தேவையானு சிலர் கேக்குறாங்க. என்னளவில் உடலளவிலும், உள்ளத்தளவிலும் என்னை திடமா, உற்சாகமா உணர்றேன். நான் ஜெயிச்சா, எங்க வார்டில் இருக்குற எலெக்ட்ரிசிட்டி பிரச்னை, சாலை வசதினு எல்லாத்தையும் சரிபண்ணுவேன். வார்டில் உள்ள பெண்களின் முன்னேற்றம், வளர்ச்சிக்கு நிச்சயமா ஏற்பாடு பண்ணுவேன்.’’

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

வீடு வீடா போவேன்!

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு சுயேச்சை வேட்பாளர், திருநங்கை ஆர்த்தி. ‘`பன்னிரண்டாவது படிச்சிருக்கேன். என் தோழிகள் மூணு பேருடன் வாக்கு சேகரிக்கிறேன். சில இடங்கள்ல கேலி, கிண்டல் எல்லாம் இருக்குதான் என்றாலும், பொதுச்சமூகத்திடம் இருந்து இனியும் விலகியிருக்கத் தேவையில்லைனு நினைக் கிறேன். நான் ஜெயிச்சா, வீடு வீடா போய் அரசின் நலத்திட்டங்கள் அவங்களுக்கு சேர செய்வேன். என் ரோல்மாடல், கர்மவீரர் காமராசர்.’’

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

ஆன்லைன்ல புகார் கொடுப்பேன்!

சென்னை மாநகராட்சியின் 42-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடும் பொறியியல் பட்டதாரி ரேணுகா. “சாலைகள் அமைப்பது, மின் விளக்கு அமைப்பது போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் ஆன்லைன்ல புகார் கொடுக்குறது என் வாடிக்கை. அந்த ஆர்வமும் முன்னெடுப்பும்தான், இப்போ என்னை தேர்தல் களத்துல கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. மக்கள் படிச்ச பொண்ணு மாற்றத்தை கொண்டுவரும்னு நம்புறாங்க. செய்வோம்!”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

பெண்களுக்கு தைரியம் கொடுப்பேன்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 10-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார், நிலோபர் நிஷா பேகம். ‘`பத்தாவது வரை படிச்சிருக்கேன். பெண்கள் வீட்டை விட்டு வெளிய வரத் தயங்கும் கீழக்கரையில, மக்கள் பணி செய்றதுக்காக நான் தைரியமா வந்திருக்கேன். என்னைப் போல இன்னும் பல பெண்கள் வர, நான் உதாரணமா இருப்பேன். அவங்களுக்கு தைரியம் கொடுக்குறது தான் என்னோட முதல் நோக்கம்.”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

வெற்றி வாய்ப்பு இருக்குனு நம்புறேன்!

சேலம் மாநகராட்சி 55-வது வார்டு பா.ஜ.க., வேட்பாளராக 21 வயதேயான இளம்பெண் செளந்தர்யா. எம்.பி.ஏ முதலாமாண்டு மாணவி. தந்தை பாகேஸ்வரன் ஆட்டோ டிரைவர். ‘`மூணு வருஷத்துக்கு முன்னாடி பா.ஜ.கவுல சேர்ந்தேன். பேட்டரி வண்டி மூலமா வீடு வீடாகச் சென்று ரெகுலராக குப்பைகளை அகற்றுவோம், சாக்கடையை தூர் வாரி, தெரு விளக்கை எல்லா இடத்துலயும் போட்டு, சிசிடிவி கேமரா வசதி செஞ்சுக் கொடுப்போம்னு சொல்லி ஓட்டுக் கேட்டுட்டு இருக்கேன். இளம்பெண்ணான எனக்கு நிச்சயமா மக்கள் ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன்.”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

நலப்பணிகளைத் தொடர்வேன்!

சீர்காழி நகராட்சி 21-வது வார்டு ம.தி.மு.க. வேட்பாளர் முழுமதி இமயவரம்பன். ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்க்கோனியின் தாய். ‘`என் கணவர் இமயவரம்பன் ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர், வர்த்தகர் சங்கத்தலைவர், கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர்னு பல பதவிகளை வகிச்சவர். எனக்கு 70 வயசாகுது. எங்க குடும்பம், கல்வித்துறை அலுவலகம் கட்ட ரூ.20 லட்சம் பொருமானமுள்ள இடம் நன்கொடை, சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகத் துக்கு ரூ.50 லட்சம், கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு ரூ.30 லட்சத்துக்கு உதவினு செஞ்சிருக்கோம். தேர்தல்ல ஜெயிச்சு, மக்கள் நலப்பணிகளை மேலும் தொடர்வோம்!”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

பெண்கள் வீட்டையும் சுமந்துட்டேதான் ஓடி ஜெயிக்குறோம்!

கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சி 8-வது வார்டின் விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் 26 வயது சரண்யா நாகேந்திரன். நர்சிங் படிப்பை முடித்துள்ளார். ‘`என் கைக்குழந்தையையும் தூக்கிட்டு ஓட்டுக் கேட்கப் போனா... இது தேவையா உனக்குனு கேட்குறாங்க. ஆண்கள் பொதுப்பணிக்கு வரும்போது, வீட்டை வாசலோட உதறிட்டு வந்துடுறாங்க. அதுவே பெண்கள் வரும்போது, வீட்டையும் சுமந்துட்டே வரவேண்டியிருக்கு. அப்படியும் ஜெயிச்ச பல பெண்கள் இங்க இருக்காங்கதானே? ஜெயிப்போம். இளைஞர்களுக்கு மைதான வசதி முதல் சுடுகாட்டுக்குப் பாதை வரை திட்டங்கள் பல இருக்கு ஜெயிச்சதும் நிறைவேற்ற!’’

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

களம் சவாலா இருக்கு!

கரூர் மாநகராட்சி, 12-வது வார்டின் காங்கிரஸ் வேட்பாளர், பி.எஸ்சி பட்டதாரி, 24 வயது கிருத்திகா பாலகிருஷ்ணன். தற்போது எல்.எல்.பி படித்து வருகிறார். ‘`சிறு பிள்ளை விவசாயம் வீடு வந்து சேராதுனு சிலர் சொல்றாங்க. ஆனா, உங்கள மாதிரி பொண்ணுங்கதான் வரணும்னு பலர் சொல்றாங்க. தேர்தல் களம் சவாலா இருக்கு. ஜெயிச்சா, தினக்கூலி வேலைக்குப் போகும் குடும்பப் பெண்களுக்கு சுயதொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தை யும் அவங்களுக்கு அறிமுகப்படுத்தி, தொழில்முனைவோர்களாக மாற்றுவேன்!”

களத்தில் 50% பெண்கள்... தேர்தல் திருவிழா முகங்கள்!

அரசியல் எங்களுக்கு ஏத்த வேலையில்லையா?

திருச்சி மாநகராட்சி 22-வது வார்டு மக்கள் நீதி மய்ய வேட்பாளர், 24 வயதாகும் எம்.ஏ., எம். ஃபில் பட்டதாரி, பிஎச்.டி ஆய்வாளர் பவதாரணி. ‘`படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையைப் பாரும்மானு சொல்றாங்க சக வேட்பாளர்கள். அரசியல் எங்களுக்கு ஏத்த வேலை இல்லைனு யார் சொன்னா? எங்க பகுதியிலுள்ள வடூவூர், வாமடம், தூக்குமேடை பகுதிகள்ல வசிக்கும் குடும்பங்கள் ரொம்ப பின்தங்கியிருக்கு. இதுவரை வேட்பாளர்களை அவங்களை வாக்கு வங்கியா மட்டுமே பயன்படுத்துறாங்க. ஜெயிச்சா, நான் அவங்க பிரச்னையை சரி செய்வேன். அடுத்த தலைமுறைக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் ட்யூஷன் முதல் இலவச பயிற்சி மையம் வரை ஏற்படுத்துவேன்.’’