''கிராமங்களில்தான் அதிக மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலருக்குத் தரமான மருத்துவ வசதி கிடைப் பதில்லை. அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்க மருத்துவ சமுதாயம் உதவ வேண்டும்.'' - கோவையில் நடந்த அறுவை சிகிச்சை நிபுணர்களின் 69-வது மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் உதிர்த்த வார்த்தைகள் இவை. மருத்துவ சமுதாயம் உதவுவது இருக்கட்டும் காந்திசெல்வன் தொகுதி மக்களுக்கு உதவியது என்ன?

மருத்துவக் கல்லூரி விவகாரம்தான் பிரதானமாக எதிரொலிக்கிறது. ''காந்திசெல்வன், சுகாதாரத் துறை அமைச்சர் ஆனதும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். மத்திய அரசின் சுகாதாரத் துறை மூலம் நாமக்கல்லில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்துவிடுவார் என நினைத்தோம். ஒரு நர்சிங் கல்லூரியைக்கூட அவரால் கொண்டு வரமுடியவில்லை. இங்கே இருக்கும் மாவட்டத் தலைமை மருத்துவனையையாவது தரம் உயர்த்தியிருக்கலாம். வயல்களில் பாம்பு கடிக்கு ஆளாகி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வருடத்துக்கு 600 பேர் வருகின்றனர். இதில் ஐந்து சதவிகிதம் பேர்

இறந்துவிடுகிறார்கள். விஷமுறிவுக்காக டயாலிசிஸ் கருவி கொடுத்தார். ஆனால், சிறுநீரக மருத்துவர்கள்தான் இல்லை. அப்புறம் எதற்காக இந்த மருத்துவமனை?'' என்று கேட் கின்றனர் மக்கள்.

கோழிப் பண்ணைகள் மற்றும் லாரிகளுக்கு பாடி கட்டும் தொழிலால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது நாமக்கல். இதுபற்றி பேசியவர்கள் ''தேர்தல் வாக்குறுதியாக, 'அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த நகரைச் சுற்றி ரிங் ரோடு அமைப்பேன்’ என்றார். ரிங் ரோடு அமைக்க நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடைபெற்றதோடு சரி. திருச்செங்கோட்டில் 154 கோடியில் ரிங் ரோடு அமைக்க தி.மு.க. ஆட்சியில் திட்டம் தீட்டினர். அதுவும் கிடப்பில் கிடக்கிறது'' என்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலுக்கு மிகமுக்கிய காரணம், நகரின் மையத்தில் நெருக்கடியாக அமைந்துள்ள பேருந்து நிலையம்தான். இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் வலியுறுத்தினர். ''எங்கெங்கோ சொல்லி கடைசியில் முதலப்பட்டி என்ற இடத்துக்கு பேருந்து நிலை யத்தை மாற்ற முடிவு செய்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். ஆனால், ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணிகள் ஏறிச்செல்வதற்கு வசதியாக அங்கே பேருந்து நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். தங்கள் வசதிக்காகவும் ஆதாயத்துக்காகவும் சிலர் பேருந்து நிலையத்தை வேறுஇடத்துக்குக் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள். 'பேருந்து நிலையத்தைப் போக்குவரத்து நெருக்கடியில்லாத வேறுபகுதிக்கு மாற்றம் செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்று தேர்தலில் வீறாப்பாகப் பேசிவிட்டுப் போனார் காந்திசெல்வன். போனவர் போனவர்தான். எதுவுமே நடக் கவில்லை'' என்றனர் நாமக்கல் வியாபாரிகள்.

சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, பயணிகள் ரயில்கள் நாமக் கல்லில் நின்று செல்கின்றன. நாமக்கல்லில் இருந்து சென் னைக்கு புதிய ரயில்விட வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ''அகல ரயில்பாதை வருவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் புதிய ரயில்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. சேலம் டு சென்னை செல்லும் ரயிலை யாவது நாமக்கல்லில் இருந்து இயக்க காந்திசெல்வன் முயற்சி எடுத்திருக்கலாம். அதைக்கூட அவர் செய்யவில்லை. நாகர்கோவில் டு பெங்களூரு புதிய ரயில் அறிவிப்பும் கிடப்பில்தான் இருக்கிறது. நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு படு மோசமாக இருக்கிறது. ஸ்டேஷனில் இறங்கும் பயணிகள் அங்கிருந்து செல்வதற்கு ஆட்டோ வசதிகூட இல்லை. பெயருக்குதான் ரயில்வே ஸ்டேஷனாக காட்சி அளிக்கிறது'' என்கின்றனர் ரயில் பயணிகள்.

லாரி பாடி கட்டும் தொழிலுக்குப் புகழ்பெற்றது நாமக்கல். இந்த நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான லாரி பட்டறைகள் உள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தவிர்க்க, ஆட்டோ நகர் அமைக்கப்படும் என 1990-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. ''லாரித் தொழில் தொடர்பான அனைத்து பணி மனைகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் 75 ஏக்கர் நிலத்தில் ஆட்டோ நகர் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு, தனி சங்கமும் தொடங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த அரசுகள் ஆட்டோ நகருக்காக எந்த அக்கறையும் காட்டவில்லை. சாலை, குடிநீர், மின்சாரம், தெரு விளக்குகள் என அடிப்படை வசதிகள் எதையும் செய்துதரவில்லை. இதனால் அங்கே நாங்கள் போக முடியவில்லை. 'பரமத்தி சாலையில் தொடங்கப்பட்ட ஆட்டோ நகர் திட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்பணியாக ஆட்டோ நகர் திட் டத்தைச் செயல்படுத்துவேன்’ என்று சொல்லி காந்திசெல்வன் ஓட்டு வாங்கினார். வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் இருந்தது. ஆனால், அதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை'' என்றனர் லாரி உரி மையாளர்கள் சங்கத்தினர்.

''லாரிகள் அதிகம் உள்ள நாமக்கல்லில் லாரிகள் தொடர்பாக நிறைய உபதொழில்களைக் கொண்டுவந்திருக்கலாம். முட்டை அதிகம் உற்பத்தியாகும் இங்கே முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற் சாலையைக் கொண்டுவந்திருக்க முடியும். அமைச்சர் பதவியைக் கையில் வைத்திருந்தும் அவர் எதையும் செய்யவில்லை'' என்ற குமுறல்கள் கேட்கின்றன.

இங்கே இருக்கும் 700 கோழிப் பண்ணைகள் மூலம் தினமும் மூன்று கோடி முட்டைகள் உற் பத்தி ஆகின்றன. இந்தியாவில் எங்கே பறவைக் காய்ச்சல் தாக்கினாலும் நாமக்கல்லில் முட்டை மற்றும் கோழி விற்பனை சரிந்துவிடும். இதைத் தவிர்க்க, 'மத்திய அரசின் மூலம் கோழிப் பண் ணைகளை தனித்தனி மண்டலங்களாகப் பிரித்து அறிவிப்பேன்’ என்று தேர்தலில் காந்திசெல்வன் கொடுத்த வாக்குறுதி பஞ்சர் ஆகிக்கிடக்கிறது. ''கோழி தொடர்பான மூலப் பொருட்கள் கிடங்கு அமைத்தனர். வசதிகள் இல்லாததால் அது எங்களுக்குப் பயன்படவில்லை. கோழிப் பண்ணை தொழில் நசிந்து வருகிறது. வீணாகும் அரிசி, கோதுமை போன்றவை யாருக்கும் பயன்படாது. அதை, இந்திய உணவுக் கழகம் சார்பில் கோழிப் பண்ணைகளுக்கு வழங்கினால் நசிந்து வரும் இந்தத் தொழில் மேம்படும். குளிர் பதனக் கிடங்கு அமைக்க பத்து கோடியில் திட்டம் போட்டனர். அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காந்திசெல்வன் முயற் சிகள் எடுத்திருக்கலாம்'' என்றனர் கோழிப் பண்னை உரிமையாளர்கள்.

நாமக்கல்லைச் சுற்றி திருமணிமுத்தாறு ஓடிக் கொண்டிருக்கிறது. காவிரியின் உபரிநீரை இந்த ஆற்றில் விட வேண்டும் என்று, காலகாலமாக கேட்டு வருகிறார்கள் விவசாயிகள். இந்தத் திட்டத்தால் பல பகுதிகள் பாசன வசதி பெறும். இந்தக் கோரிக்கையும் கிடப்பில்தான் இருக்கிறது. 'கொல்லி மலைப் பகுதியில் புதிய அணை கட்டப்படும்’ என்று அவர் கொடுத்த வாக்குறுதியும் புஸ்வானம்தான்.

''தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மோகனூர் - வாங்கல் பாலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலை யில் இன்னும் திறக்கப்படவில்லை. இந்தப் பாலம் அமைந்தால் 20 கிமீ தூரத்துக்குச் சுற்ற வேண்டிய நிலை ஏற்படாது. தி.மு.க. ஆட்சி இருந்தபோதே இந்தப் பால பணியை முடித்து திறந்து இருக்கலாம். ஆட்சி மாறிய பிறகு இப்போது அதற்காகப் போராட்டம் நடத்துகிறார்'' என்று பொருமுகிறார்கள் தொகுதிவாசிகள்.

''காந்திசெல்வனுக்கு, தொகுதியில் கெட்ட பெயர் எதுவும் இல்லை. அவர் நல்லதும் செய்யவில்லை. கெட் டதும் செய்யவில்லை. அவரை யார் வேண்டுமானாலும் அணுக முடியும். பேச முடியும். பெரிதாக அவர் மீது குற்றச்சாட்டும் கிடையாது'' என்றும் தொகுதிவாசிகள் சொல்கின்றனர்.

காந்திசெல்வன் என்ன சொல்கிறார்? ''மருத்துவக் கல்லூரி அமைக்க முயற்சி எடுத்த நிலையில் ஆட்சி மாறிவிட்டது. கொல்லிமலையில் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க 20 கோடி திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தேன். இடம் ஒதுக்குவது, கோப்புகள் காணாமல் போனது காரணமாக அது நிலுவையில் இருக்கிறது. வீடுகளிலேயே மூலிகை வளர்க்க மத்திய அரசின் மூலம் 5 கோடியில் திட்டம் கொண்டு வந்தேன். நீண்ட வருடக் கோரிக்கையான சேலம் - கரூர் அகல ரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்தி நாமக்கல்லுக்கு ரயில் விட்டிருக்கிறோம். பெங்களூரு ரயில், சீக்கிரமே இயக்கப்படும். ஆட்டோ நகருக்கு பிளாட் பிரித்தபோது ரோடுகள் பிரித்துக் கொடுக்காததால் தாமதம் ஏற்பட்டது. முயற்சிகள் மேற்கொள்வதற்குள் ஆட்சி மாறிவிட்டது.

லாரிகள் மூலம் அல்லாமல் ஆகாய வழியாகவும் நோய் பரவும் என்பதால் கோழிப் பண்ணைகளை தனி மண்டலங்களாகப் பிரிப்பதும் தாமதம் ஆகிறது. இதுபற்றி ஆராய்ந்து வருகிறார்கள். விரைவில் இது நிறைவேறும். கொல்லிமலைக்காக மட்டும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறேன். அங்கே விரைவில் மாற்றுப்பாதை அமைக்கப்படும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி பெற்றுத் தந்தேன். நிலம் கிடைக்காததால் அது நிலுவையில் இருக்கிறது. ஆட்சி மாறியதால் ரிங் ரோடு திட்டத்துக்கு தடை ஏற்பட்டு விட்டது. இது எல்லாவற்றையும்விட எனக்கு மனநிறைவு அளித்த விஷயம் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது ஒரு லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ உதவியை 5 ஆயிரம் பேருக்கு வாங்கிக் கொடுத்ததுதான். ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், பரமத்தி வேலூரில் பஸ் ஸ்டாண்ட், போதமலைக்கு மின்சார வசதி, துணை மின்நிலையங்கள் என நிறைய விஷயங்களை செய்து கொடுத்திருக்கிறேன்'' என்றார்.

மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாகத்தான் இருக்கப் போகிறது.

- எம்.பரக்கத் அலி