Published:Updated:

தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்
தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கிறது. இப்படி ஓட்டு போடும் வயதை அடைந்த அனைவரும் தவறாமல் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்ற விழிப்பு உணர்வோடு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் நடைபெற்றது. 

தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் துவக்கிவைத்த விழிப்பு உணர்வு பிரசார பேரணியில் மாணவ மாணவியர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 

சிவகுமார்.V

தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் விழிப்பு உணர்வு தின பேரணி ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. பேரணியை வட்டாட்சியர் ரமேஷ் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர், பொதுமக்கள் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக வந்தனர். 

உ.பாண்டி

லக்கானிக்கு தேசிய விருது

தேசிய வாக்காளர் தினம்: தமிழகத்தில் நடந்த விழிப்பு உணர்வு நிகழ்வுகள்

வன்முறை இல்லாமல் தேர்தல் நடத்தியதைப் பாராட்டி தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு விருது வழங்கப்படுகிறது. டெல்லியில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் சார்பில் நடக்கும் தேசிய வாக்காளர் தின விழாவில் தேசிய விருது வழங்கப்படுகிறது. குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்குகிறார். 

இ.கார்த்திகேயன்