Published:Updated:

உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல்...

Vikatan Correspondent
உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல்...
உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல்...
உத்தரப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் இறுதிக்கட்ட தேர்தல்...

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வட இந்தியாவின் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக உத்தரப்பிரேதேசத்தில், 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அந்த மாநிலத்தில், இன்று 7-வது மற்றும் கடைசிக்கட்ட தேர்தல் நடைபெற்றுவருகிறது.

அதேபோல, மணிப்பூர் மாநிலத்தில், 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்துவருகிறது.  உத்தரப்பிரதேசத்தில் 40 தொகுதிகளுக்கும் மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியாக வாரணாசியில் இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்களும் இன்று நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட, 1.4 கோடி பேர் இன்று உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கடைசிக்கட்ட தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள், வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படும்.