Published:Updated:

இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு அதிர்ச்சியளித்த மணிப்பூர் தேர்தல்

விகடன் விமர்சனக்குழு
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு அதிர்ச்சியளித்த மணிப்பூர் தேர்தல்
இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு அதிர்ச்சியளித்த மணிப்பூர் தேர்தல்

மணிப்பூர் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்நிலையில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து போராடி வந்த நிலையில், புதுக்கட்சி துவங்கி இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தவுபால் தொகுதியில் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார்.

இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு அதிர்ச்சியளித்த மணிப்பூர் தேர்தல்


இதையடுத்து, இரோம் ஷர்மிளா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். குறிப்பாக, எந்த பகுதியாக இருந்தாலும், சைக்கிளில் சென்றே அவர் மக்களை சந்தித்து வந்தார். இந்நிலையில்,  தபுபாலில் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். அவர் 15,000-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரோம் 100 வாக்குகளை விட குறைவாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  அதேபோல், இரோம் ஷர்மிளா குராய் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். அந்த தொகுதியின் நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.