Published:Updated:

2019 மக்களவைத் தேர்தல்! கேரளாவைக் குறிவைக்கும் அமித் ஷா!

2019 மக்களவைத் தேர்தல்! கேரளாவைக் குறிவைக்கும் அமித் ஷா!
2019 மக்களவைத் தேர்தல்! கேரளாவைக் குறிவைக்கும் அமித் ஷா!

2019 மக்களவைத் தேர்தல்! கேரளாவைக் குறிவைக்கும் அமித் ஷா!

பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித் ஷா, கேரள மாநிலத்தில் மூன்று நாள் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அவர், கட்சியை வலிமைப்படுத்துவதற்கும் 2019-ம் ஆண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலின்போது, கேரளாவில் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்தச் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க, கேரளாவில் மொத்தம் இருக்கும் 140 தொகுதிகளில் ஒரேயொரு தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலின்போது அமித் ஷா, '2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 70 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெரும்' என்று நம்பிக்கைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கேரள மாநிலத்திலுள்ள 20 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி கூட பா.ஜ.க.வின் கைவசமில்லை.

இந்நிலையில் கொச்சியில் பேசிய அமித் ஷா, '2019 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.வின் வெற்றிக்குக் கேரளா முக்கிய பங்கு வகிக்கும்' என்று பேசியுள்ளார்.  

அடுத்த கட்டுரைக்கு