பொது மேடைகளில் மணிக்கணக்கில் பக்கம் பக்கமாகப் பேசி தாங்களும் டயர்டு ஆகி நம்மையும் டயர்டு ஆக்கிய அரசியல் தலைவர்கள், இப்போது ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இரண்டே வரிகளில் ஸ்டேட்டஸ் போட்டு மிரளவைக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை, 100 மில்லியன் வாக்காளர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இயங்குகிறார்கள். மற்ற ஊடகங்கள், மேடைப் பேச்சுகளை விட, சிறந்த பிரசார தளம் இந்த வலைதளங்கள்தான். மேலும், எல்லா கட்சிகளைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் யாருக்கும் பயப்படாமல் ப்ளஸ், மைனஸ்கள் விவாதிக்கப்படுகின்றன. கருணாநிதி போடும் ஸ்டேட்டஸுக்குக் கீழேயே, தொண்டர்கள் தங்கள் கருத்துகளையும் கமென்ட்களாகப் போடுகின்றனர். இது, ஆரோக்கியமான விஷயம்தானே!

வட இந்திய சில கீழ்மட்ட தலைவர்கள்தான் முதலில் ஃபேஸ்புக்கில் காலடி எடுத்துவைத்தனர். அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து வியந்துபோனவர்கள், பெரிய தலைகளையும் ஃபேஸ்புக்குக்கு வம்படியாக இழுத்துவந்துவிட்டனர்.

இதைக் கவனித்த தமிழகத் தலைவர்களும், ஃபேஸ்புக் பக்கம் தலைக்காட்டத் தொடங்கிவிட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோதான். 2012 ஜனவரி 1-ம் தேதியே தனது புகைப்படத்தைப் போட்டு தனது கணக்கைத் தொடங்கிவிட்டார். ஆனால், அப்போது யாரும் அவரைச் சீண்டாமல், அவர் போடும் ஸ்டேட்டஸையும், போட்டோவையும் 'ஜஸ்ட் லைக் தட்’டாக எடுத்துக்கொண்டு 'லைக்’ பண்ணாமல் கடந்துபோனார்கள். இப்போது 'பூரண மதுவிலக்கே நம் இலக்கு’ என தனது மேடைப்பேச்சின் வீடியோ கிளிப்பிங்ஸை இணைத்தும், 'சிட்டுக்குருவிகள், வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வந்தே தீரும்’ என கவர் போட்டோ போட்டும் சிரிக்கிறார் வைகோ. இரண்டு வருட காலமாக முட்டிமோதி 66 ஆயிரம் லைக் பெற்று மெள்ள மெள்ள நடைபோட்டு வருகிறார் வைகோ.

'வங்கிகளில்கூட கணக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், முகநூலில் கணக்கு இல்லை என்றால், முகம் வாடிப்போகிறது’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்திலேயே ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு பரபரவென இயங்கிவருகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ட்விட்டர், ஃபேஸ்புக் கடலில் தன் கட்டுமரத்தை மிதக்கவிட்டார். ஆனால், அவர் போட்ட ஸ்டேட்டஸுக்கு கழுவிக் கழுவி ஊற்றிய கமென்ட்களால், கட்டுமரமே மூழ்கப்போனது. ஆனாலும் சளைக்காமல், 'என்னடா இது லைக்குக்கு வந்த சோதனை’ என யோசித்தவர், பல அதிரடி யுக்திகளில் இறங்கினார். லேப்டாப்பிலும், ஐ-போனிலும் தான் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதுபோல புகைப்படங்களை எடுத்து, அதை ஃபேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் அள்ளினார். அடுத்து, 'புறப்பட்டுவிட்டேன் திருச்சி மாநாட்டுக்கு’ என்று, தனது கார் முன் எடுத்த புகைப்படத்தைப் போட்டு புன்னகைப் பூத்தார். இப்போதெல்லாம் மின்னல் வேக அப்டேட் கருணாநிதியிடம் இருந்துதான் வருகிறது. முரசொலியில் கேள்வி - பதில் எழுதியவர், இப்போது முகநூலிலும் எழுதத்தொடங்கிவிட்டார்.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியோடு போட்டிப் போடுபவர் அவரது அன்பு மகன் ஸ்டாலின்தான். 'இணையத்திலும் நமது பணி சிறக்கும் வகையில் இணையத் தோழர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும். அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ஸ்டேட்டஸ் போட்டு வருகிறார். எது எப்படியோ... ஃபேஸ்புக்கில் யார் அதிக லைக்ஸ் வாங்குகிறார்கள் என்ற போட்டா போட்டி அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே சத்தமே இல்லாமல் நடந்துவருகிறது.

இவை தவிர ராமதாஸின் கைப்பிள்ளைகளும், கேப்டனின் ரசிகர்களும் என, தங்கள் தலைவர்களின் போட்டோவை புரொஃபைல் பிக்சராக வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் வலம்வருகின்றனர். ஃபேஸ்புக்கில் குரூப்பாக ஆட்களைத் திரட்டி வைத்துக்கொண்டு யாராவது தங்கள் தலைவரை விமர்சித்து ஸ்டேட்டஸ் போட்டால், அவர்களை காதுகூசும் வார்த்தைகளால் வூடு கட்டி அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஃபேக் ஐ.டி. அடிக்கடி ஃபேஸ்புக்கில் உலாவருகிறது. அ.தி.மு.க-வினர் சிலர் மட்டும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க... 'ஓரமா போய் விளையாடுப்பா...’ என்று அவர்களை தலையில் தட்டி விரட்டுகிறார்கள்.

நீங்கள் லிஸ்ட் போட்டு ஊர் ஊராகப் பிரசாரம் செய்து ஆதரவுத் திரட்டுவதைவிட, ஏ.சி. அறையில் உட்கார்ந்துகொண்டு நுனி விரலில் ஃபேஸ்புக்கில் நீங்கள் சொடுக்கும் கருத்துகளுக்கு இன்று வலிமை அதிகம் தலைவர்களே!

- நா.சிபிச்சக்கரவர்த்தி