தி.மு.க-வுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக சொன்ன, ஆதித்தமிழர் பேரவையும், மனிதநேய மக்கள் கட்சியும் 'தென்காசி தொகுதியில் மட்டும் நாங்கள் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராகக் களமிறங்குவோம்!’ என்று அறிவித்திருப்பதால், என்ன செய்வதென புரியாத குழப்பத்தில் இருக்கிறார் கிருஷ்ணசாமி!

டாக்டர் கிருஷ்ணசாமியை எதிர்ப்பது ஏன் என்று ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சங்கரிடம் கேட்டோம். ''அருந்ததிய சமூகம் இன்னும் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. எங்கள் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது மூன்று சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதுபோதாதுதான். அதனால், கூடுதலாக எங்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அந்த இட ஒதுக்கீட்டை ஆறு சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்திவருகிறோம்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரான நீலவேந்தன் தீக்குளித்து உயிரிழந்தார். திருச்சியில் நவம்பர் 26-ம் தேதி ராணி என்கிற பெண் தோழரும் தீக்குளித்து இறந்தார். இந்தச் சம்பவங்களால் எங்கள் சமூகத்தினரிடம் உள் ஒதுக்கீடு கோரிக்கை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தங்கள் உயிரை மாயத்துக்கொண்டவர்களின் அஸ்தியுடன் நாங்களும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து பரப்புரை செய்தோம்.

இந்த நிலையில், எங்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சியான தி.மு.க-வுக்கு தேர்தலில் ஆதரவு கொடுப்பது என முடிவு செய்தோம். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டது. எங்களின் இட ஒதுக்கீட்டுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி எப்போதும் எதிராக இருக்கிறார். அதனால், அவருக்கு தென்காசி தொகுதியில் எங்கள் சமூகத்தினர் வாக்களிக்க

மாட்டார்கள். தென்காசி தொகுதியில் எங்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டுவோம். எங்கள் வாக்குகள் ஒருபோதும் அவருக்குக் கிடைக்கப்போவது இல்லை. அவரைத் தோல்வியடைய வைப்போம்'' என்றார் ஆவேசத்துடன்.

ஆதித்தமிழர் பேரவைத் தலைவரான அதியமான், ''டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்தார். இடையில் என்ன நடந்ததோ... தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசிவந்தார். அதோடு நிற்காமல் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இந்தச் சம்பவங்கள் எங்கள் சமூகத்தினரிடம் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாதம் நாங்கள் தென்காசியில் மாநாடு நடத்தினோம். அப்போது என்னிடம் பேசிய பலரும், 'டாக்டர் கிருஷ்ணசாமி நமக்கு எதிராக இருப்பதால் அவருக்கு தேர்தலின்போது நாம் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது’ என்பதை வலியுறுத்தினார்கள். அதனால், கிருஷ்ணசாமி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதனை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே, அவருக்கு தேர்தலில் எங்கள் மக்கள் வாக்களிப்பார்கள். இல்லாவிட்டால், எதுவும் செய்ய முடியாது'' என்றார் காட்டமாக.

தென்காசி தொகுதியில் 11-ம் தேதி நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும் ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டனர்.

இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு, தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் அளவுக்குப் போயிருக்கிறது. 'நாங்கள் தி.மு.க கூட்டணியை ஏற்க மாட்டோம். கட்சியின் கொடியை நாங்கள் பயன்படுத்துவோம். நாங்கள் அ.தி.மு.க-வை ஆதரிப்போம்’ என்று நெல்லை மாவட்டத்தில் நீக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதுவும் கிருஷ்ணசாமிக்கு சிக்கலை உருவாக்கி இருக்கிறது.

ஆனால், இவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் கிருஷ்ணசாமி தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். இதுபற்றி நம்மிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியினர், ''உள் ஒதுக்கீட்டால் பட்டியல் வகுப்பில் இருக்கும் பிற சமூகங்கள் அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் மட்டுமே நாங்கள் அதனை எதிர்க்கிறோம். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் முடிவை நாங்கள் ஏற்போம். இந்தத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி சராசரியாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகளை தனித்து நின்றே வாங்கியிருக்கிறார். இப்போது கூட்டணிக் கட்சியின் ஒத்துழைப்புடன் அவர் எளிதில் ஜெயித்துவிடுவார். இதை உணர்ந்துகொண்ட எதிர்க்கட்சிகள், அந்த வயிற்றெரிச்சலில் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை'' என்கிறார்கள் காட்டமாக.

ஸ்... இப்பவே கண்ணைக் கட்டுதே!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்