டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு, பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கலந்துரையாடல், சென்னையில் மன ஆறுதலுக்காக ரஜினியுடன் மீட்டிங், அப்படியே விசுவாசிகளிடம் நலம் விசாரிப்பு, இடையிடையே மீடியாக்களிடம் சிலபல பிட்டுகள்... என அழகிரியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது தலை கிறுகிறுக்கிறது.

பரபரப்புப் பயணங்களை முடித்துவிட்டு கடந்த 15-ம் தேதி மதுரை வந்து சேர்ந்தார் அழகிரி. அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் அளவோடுதான் வந்திருந்தனர். அவருக்காக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜுவும் மதுரை வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும் கைகளில் பொக்கேயுடன் வேகவேகமாக வந்தனர். இதைப் பார்த்த அழகிரி ஆட்கள், ''என்னடா இது... அண்ணன் சென்னையில இருந்து கிளம்பிவர்ற இடைப்பட்ட நேரத்துக்குள்ள அ.தி.மு.க-வுக்கு ஆதரவுன்னு அறிவிச்சுட்டாரா?'' என்று குழம்ப... பிரசாரத்துக்காக தனி விமானத்தில் மதுரைக்கு வந்து தூத்துக்குடிக்குச் செல்ல ஹெலிகாப்டர் மாறும் ஜெயலலிதாவை வரவேற்க அவர்கள் வந்தார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அழகிரி முகத்தில் மகிழ்ச்சி. எப்போதும் டென்ஷனாக நிருபர்களைக் கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச்செல்லும் அவர், இப்போதோ, 'ஏதாவது கேளுங்கப்பா’ என்று சொல்வதுபோல் வந்துகொண்டிருந்தார். இருந்தாலும் பிகு பண்ணிக்கொண்டுதான் பேசினார். நாம் கேட்ட சில கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் இதோ...

''புதிய தகவல்கள் ஏதாவது..?''

''அதான் எல்லாத்தையும் பார்த்திருப்பீங்களே... வேற புதுசா என்னத்த சொல்ல?''

''அடுத்தத் திட்டம் என்ன?''

''மதுரை என் ஊர். மதுரை மீனாட்சியை மாற்ற முடியுமா? அதுபோலத்தான் நானும். 17-ம் தேதி என் ஆதரவாளர்கள் கூட்டம் போட்டிருக்கோம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ... அதன்படி செய்வேன்.''

''உங்கள் டெல்லி சந்திப்புக்குப் பின் தி.மு.க. தலைமையில் இருந்து யாராவது பேசினார்களா?''

''தலைமையில் இருந்து யாரும் பேசவில்லை. தலைமையே எங்களைத் தடுத்தாக்கூட அங்குதான் இருப்போம்.''

''இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று தமிழக அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் குற்றம் சுமத்தும்போது, காங்கிரஸ் ஆட்சி நன்றாக இருந்தது என்றும், மக்களுக்கான பல திட்டங்களை கொண்டுவந்தார்கள் என்றும் பேசியுள்ளீர்களே?''

''நாங்க அந்த ஆட்சியில் இருந்தோம்ல... அப்புறம் நல்ல ஆட்சின்னு சொல்லாம கெட்ட ஆட்சின்னா சொல்ல முடியும்? எங்களைப் பொறுத்தவரைக்கும் பிரதமர் நல்லது செஞ்சாரு. நாட்டு மக்களுக்கு அதன்மூலமா நான் நல்லது செஞ்சேன். அதனாலதான் பிரதமரைப் பார்த்து நன்றி சொல்லிட்டு வந்தேன்.''

''உங்களைப் பற்றிய கேள்விக்கு, தேவையில்லாத செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்லியுள்ளாரே?''

''அவரே எனக்குத் தேவையில்லாதவர்தானே!''

''மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பேரை வைக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளீர்களே... அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டதா?''

''இப்போது தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், அறிவிக்கத் தாமதமாகிறது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் கருத்து கேட்டுவிட்டு ஒப்புதல் அளிப்பார்கள்.''

''மதுரை தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி உங்களிடம் ஆதரவுக் கேட்டு வரப்போவதாகக் கூறியுள்ளாரே?''

''வரட்டும், பார்க்கலாம். அப்ப நீங்களும் வாங்க!''

- இப்படி ஜாலி பேட்டிக்கு பதில் சொல்வதுபோல கூறிவிட்டுக் கிளம்பினார்.

அன்று மாலை தேனி சிட்டிங் எம்.பி-யான ஆரூண், அழகிரி வீட்டுக்கு வந்தார். அரை மணி நேரம் அழகிரியுடன் பேசினார். அதன்பின் மகிழ்ச்சி பொங்க வெளியில் வந்த ஆரூணிடம் பேசினோம். ''கடந்த முறை நான் தேனியில் வெற்றிபெற அண்ணன் அழகிரி அவர்கள் பிரசாரம் செய்தார். அதற்கு நன்றி சொல்லவும், வருகிற தேர்தலில் அதுபோல ஆதரவு தர வேண்டும் என்றும், எங்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்ததற்கு நன்றி சொல்லவும் வந்தேன்'' என்றார்.

இதற்கிடையே கலைஞர் தி.மு.க-வின் பொதுச்செயலாளரே என்று அழகிரி படத்தைப் போட்டு போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித்திருந்தனர் அழகிரி ஆதரவாளர்கள். 17-ம் தேதி நடக்கப்போகும் ஆதரவாளர்களின் கூட்டத்தை, தி.மு.க-வினர் மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

17-ம் தேதி அழகிரி வீட்டுக்கு அருகேயுள்ள தயா மகாலில் தென் மாவட்ட ஆதரவாளர்கள் குவிய ஆரம்பித்தார்கள். இன்று தனிக்கட்சி அறிவிப்பு வரப்போகிறது என்று தொண்டர்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஜே.கே.ரித்தீஷ், மாலைராஜா, முகவை சேக், சவுந்திரபாண்டியன், விருதுநகர் அமுதன், தேனி ஞானகுருசாமி ஆகியோர் ஆட்களைத் திரட்டிவந்திருந்தனர்.

மைக் பிடித்த அழகிரி, ''நாம என்ன தப்பு செய்தோம். தென் மாவட்டத்தில் ஒன்பது எம்.பி. தொகுதிகளிலும், பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி தேடிக் கொடுத்தோம். அப்படிப்பட்ட என் தொண்டர்களை எனக்கு போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காகக் கட்சியை விட்டு நீக்குவதா? இதற்காக நியாயம் கேட்கத்தான் சென்னைக்குப் போனேன். தலைவரிடம் சொல்லிவிட்டு வெளிநாடு போய் வருவதற்குள், இன்னும் ஐந்து பேரை நீக்கியிருந்தார்கள். தலைவரிடம் ஆவேசமாக எல்லாம் பேசவில்லை. நியாயம் கேட்டேன். அதற்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

இன்னைக்கு தி.மு.க-வில் அண்ணாவைத் தெரியாதவர்களும், கட்சி மாறி வந்தவர்களும் வியாபாரிகளும்தான் இருக்கிறார்கள். எதிரிகளைவிட துரோகிகள்தான் தலைவரைச் சுற்றி இருக்கிறார்கள். கருப்பசாமி பாண்டியனுக்கு அண்ணாவைத் தெரியுமா? விருதுநகர் வேட்பாளர் ரத்னவேலுக்குத் தெரியுமா? பொன்முத்து ம.தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்தவர். அவருக்கு தேனியைக் கொடுத்திருக்கிறார்கள். அவர் ஜெயிப்பதற்காக நிற்கவில்லை. கமிஷனுக்காகத்தான் நிற்கிறார். அவருக்கு எலெக்ஷன் என்றாலே கலெக்ஷன்தான். ராமநாதபுரத்தில் கட்சித் தேர்தல் நடைபெறும் முன்பாகவே, செயலாளர்களை நியமித்த சுப.தங்கவேலனுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டுகிறார்கள். ரித்தீஷ் எம்.பி. மீது பொய் வழக்குகள் தங்கவேலன் போட்டார். இதற்கு ஏன் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை? எனக்கு இருக்கும் பயமெல்லாம் கட்சியைக் காப்பாற்றுவதைவிட, முதலில் தலைவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். அருகில் இருப்பவர்களால் அவருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள்தான் அவரை ஆட்டுவிக்கிறார்கள். எனக்கு அண்ணாவுக்கு அடுத்து எப்போதும் தலைவர் கலைஞர்தான். வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீபத்தில் விமான நிலையத்தில் வைகோ சந்தித்தார். என்னையும் தலைவரையும் நலம் விசாரித்தார். அவர் தலைவர் மேல் இன்னும் மரியாதை வைத்திருக்கிறார். 'இருந்தாலும் உங்களை கலைஞர் இப்படி செய்திருக்கக் கூடாது’ என்று வருத்தப்பட்டார். ஸ்டாலினால் அவரும் பாதிக்கப்பட்டவர்தான். பின்னர் என்னைச் சந்திக்க வருவதாகக் கூறினார். வாங்க என்றேன்.

தலைவரிடம் மன்னிப்புக் கேட்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். தலைவரிடம் மன்னிப்புக் கேட்பது ஒன்றும் தப்பில்லை. ஆனால், என்ன தப்புக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? என் தொண்டர்கள் சொன்னால் நான் மன்னிப்புக் கேட்கிறேன் (தொண்டர்கள் வேண்டாம் என்று கோஷமிடுகிறார்கள்). தென் மாவட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். அதனால்தான் நான் அழைத்ததும் இங்கு வந்திருக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். விரைவில் தேர்தல் சம்பந்தமாக அறிவிப்பேன்'' என்றார் ஆவேசமாக.

ஆக, அழகிரி அனல் இப்போதைக்குத் தணியாது!

- செ.சல்மான்,

டி.பி.ஜி.சாமுவேல் டேவிட் டில்சன்

படம்: பா.காளிமுத்து

'தகுதியானவர்கள் வெளியில் இருக்கிறார்கள்!’

மதுரையில் 17-ம் தேதி அழகிரியின் கூட்டம் முடிந்த பிறகும் அவரிடம் பேசினோம். ''தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு பலம் என்று எதுவுமே இல்லை. எல்லோருமே பலவீனம்தான். அவர்களில் யாருமே தலைவர் வேட்பாளர் இல்லை. தகுதியான வேட்பாளர்கள் எல்லோரும் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது தலைவருக்கும் தொண்டனுக்கும் தெரியும். தனிக்கட்சி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது!'' என்று மட்டும் சொன்னார்.

- சண்.சரவணக்குமார்