கூட்டணி இல்லாத நிலையிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் வேகமெடுத்துவிட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் ப.சிதம்பரம் பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க-வை வறுத்தெடுத்தனர் வி.ஐ.பி-க்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ''தமிழகத்தில் கொள்கை இல்லாத, நன்றி கெட்ட அரசியல் நடக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை அனுதாப அலையால் ஜெயலலிதா முதன்முதலாக 1991-ல் ஆட்சியைப் பிடித்தார். விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கறுப்புப் பூனை பாதுகாப்பைக் கேட்டு வாங்கினார். ஆனால், இப்போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார். அவருக்கு, ஈழத்தின் மீது திடீர் பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியால் அரசியல் வாழ்வைத் தேடிக்கொண்ட ஜெயலலிதா இன்று வாய்க்கு வந்தபடி வசைபாடுகிறார்.

தி.மு.க. நம்மோடு 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தேர்தல் நேரத்தில் கூட்டணியைவிட்டு வெளியேறினர். அவர்களுக்கு, கேட்டதையெல்லாம் காங்கிரஸ் செய்துகொடுத்தது. ஆனால், இன்று நன்றி மறந்துவிட்டனர். அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மாறி மாறி காங்கிரஸுக்குத் துரோகம் செய்கிறார்கள். நண்பனையே கொன்ற புரூட்டஸுக்கும் திராவிட கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. திராவிட கட்சிகள் நவீன புரூட்டஸ்கள்.

கேப்டனாக இருந்த விஜயகாந்த், ஜெயலலிதாவிடம் கூட்டுசேர்ந்து சிப்பாய் ஆகி சிப்பந்தி ஆகிவிட்டார். இப்போது, பி.ஜே.பி. பக்கம் சென்றுள்ளார். கேப்டன் இனி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் காக்கிச் சட்டை போட்ட சவுக்கிதார் ஆகிவிடுவார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதை தடுத்த பி.ஜே.பி-யுடன் வைகோவும் கூட்டு வைத்துள்ளார். சேது சமுத்திரம் திட்டமே வேண்டாம் என்கிறது பி.ஜே.பி. ஆனால், அந்தத் திட்டம் வேண்டும் என்கிறார் வைகோ. இவர்களின் கூட்டணியில் கொள்கைக்கும் நியாயத்துக்கும் சம்பந்தம் இல்லை. திராவிட கட்சிகளைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு மனச்சாட்சிப்படி பேச முடியாது. எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள் இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது'' என்று விளாசி முடித்தார்.

மாநிலத் தலைவர் ஞானதேசிகன், ''தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தது யார்? அதை பி.ஜே.பி. ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது ஏன் வாங்கவில்லை? கூட்டணியில் இருந்ததால் இதைக் கேட்க முடியவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தை சோனியாவும் மன்மோகன் சிங்கும் தந்தார்கள் என்பதை இனி தமிழகம் முழுவதும் உரக்கச் சொல்வோம். இந்தத் தேர்தலில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை மக்களிடையே சொல்வோம். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்தால் உடனே எனக்குத்தான் போன் வருகிறது. நாங்கள்தான் பிரதமரிடம் சொல்லி அவர்களை மீட்கிறோம். ஆனால், முதல்வர் ஜெயலலிதா அவரே மீட்டுவந்ததாக போலி விளம்பரம் தேடிக்கொள்கிறார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை வைத்தே இங்கே சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன. எங்கிருந்தோ வரும் பணத்துக்காக சில அமைப்புகள் விசுவாசத்தைக் காட்டுகின்றன. இலங்கைப் பிரச்னை, தமிழகத்தில் எடுபட்டு இருந்தால், வைகோ எப்போதோ தமிழக முதல்வர் ஆகி இருப்பார். இலங்கைப் பிரச்னைக்கும் தமிழக அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. திராவிட கட்சிகளின் சகாப்தத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடித்துவைக்க முடியும். அதற்கு விதை போடுவோம். விளைச்சலை அறுவடை செய்வோம்'' என்றார்.

மந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ''10 ஆண்டுகளாக நம்மோடு இருந்தவர்களும் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும் காங்கிரஸ் ஆட்சியில் நாடு சீரழிந்துவிட்டது என்கிறார்கள். ஆனால், இந்திய பொருளாதாரம் வலுவானது என்பது உலகத்துக்குத் தெரியும். நம்முடைய சாதனைகளை மக்களிடம் சொல்லாதது மிகப்பெரிய குறை. அதனால்தான், நம்மை குறை கூறுபவர்கள் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறவு, இந்த தேர்தலில் அறுந்து போய் இருக்கலாம். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டால் அவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று கலைஞர் சொல்ல வேண்டும். சொல்வார் என்று உளமாற நம்புகிறேன்.

ஜெயலலிதா நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடியோடு சேரமாட்டார் என்று சொல்ல முடியுமா? ராமர் கோயில் கரசேவைக்கு ஆதரவாக செங்கல்களையும் மனிதர்களையும் அனுப்பினார். 'ராமர் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது?’ என்று கேட்டவர் அவர்.

கம்யூனிஸ்ட்களை கழற்றி விட்டுவிட்டு, இப்போது தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறார் ஜெயலலிதா. அவர், எந்த ஆட்சியில் அங்கம் வகிக்கப்பொகிறார் என்று சொல்ல வேண்டும். தமிழக காங்கிரஸ் எம்.பி-க்கள் ஒரு சிலரையாவது டெல்லிக்கு அனுப்புங்கள். மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் தமிழகத்தின் பங்கு இருக்க வேண்டும். தமிழகத்தில், பலமுனை போட்டி நிலவும் சூழ்நிலையில் காங்கிரஸ் ஜெயிக்கவே முடியாது என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் நிச்சயம் ஜெயிக்கும்'' என்று நம்பிக்கையூட்டி முடித்தார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: ஜெ.வேங்கடராஜ்