முன்கூட்டியே பிரசாரத்தை ஆரம்பித்து காஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி சிங்கிளாக கிளம்பிவிட்டது ஜெயலலிதாவின் அ.தி.மு.க. எக்ஸ்பிரஸ். அடுத்து, தி.மு.க-வின் பிரசார வாகனம் கூட்டணிக் கூட்டங்களையும் ஏற்றிக்கொண்டு கடந்த 14-ம் தேதி அன்று கிளம்பிவிட்டது. கன்னியாகுமரி டு டெல்லி என புது ரூட்டில் கிளம்பியிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி.

களியக்காவிளையில் மாலை 4 மணிக்கு வாகனப் பிரசாரத்தைத் தொடங்குகிற ஸ்டாலின், தக்கலையில் வாகனப் பிரசாரத்தை முடிக்கிறார். அதையடுத்து மாலையில் நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தி.மு.க. வேட்பாளர் எஃப்.எம்.ஆர்.ராஜரத்தினத்துக்கு வாக்கு சேகரிக்கிறார். இதுதான் அறிவிக்கப்பட்ட ஸ்டாலினின் பிரசார ரூட்.

கடந்த 9-ம் தேதி நாகர்கோவிலில் ஜெயலலிதா பிரசாரத்தை முடித்த நிலையில், அடுத்த சில தினங்களிலேயே முடிவானது ஸ்டாலினின் நாகர்கோவில் மீட்டிங். அதனால், அ.தி.மு.க-வை விட அதிக கூட்டத்தைக் கூட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கழக உடன்பிறப்புகள் கூடுதல் உற்சாகத்தோடு களியாக்காவிளை ஜங்ஷனில் காத்திருந்து மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்புக் கொடுத்தனர்.

'சேது சமுத்திரத் திட்டத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு, தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை, விஷமாக உயர்ந்துவரும் விலைவாசி’ என ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை சளைக்காமல் பேசத் தொடங்கியவர், ''தேர்தலுக்கு முன் 2010-ல் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா, 'கர்த்தரின் ஆசி இருந்தால், உங்கள் சகோதரி ஆட்சி அமைத்தால், பட்டா நிலங்களில் கிறிஸ்தவ ஆலயம் அமைக்க அனுமதி தருவேன். அதை யார் தடுப்பார்’ என்றாரே... செய்தாரா?'' என்று சிறுபான்மையினருக்கு எதிரானவராக ஜெயலலிதாவைச் சித்திரித்து, தாக்கத் தொடங்கினார்.

கடந்த வாரம் நாகர்கோவிலில் பேசிய ஜெயலலிதாவும், ''சிறுபான்மையினர் நலனுக்காக இட ஒதுக்கீடு பெற மூலக்காரணமே எனது தலைமையிலான அரசுதான். கருணாநிதி சிறுபான்மையினர் நலனுக்கு எதிரானவர்'' என்று குமரி மக்கள் மத்தியில் பேசிச் சென்ற தடம்கூட மாறாத நிலையில், தொடர்ந்து அதே வசனங்களையே களியக்காவிளை முதல் தக்கலை வரை தனது பிரசாரத்தில் பேசினார் ஸ்டாலின்.

தக்கலையில் வாகனப் பிரசாரத்தை முடித்ததும், நாகர்கோவில் ரூட்டில் பறந்துசென்றது ஸ்டாலினின் வாகனம். பொதுக்கூட்டத்தில்தான் ஸ்டாலின் வாகனம் நிற்கும் என்று நினைத்த நேரத்தில், தனது ரூட்டை மாற்றினார் ஸ்டாலின்.

கோட்டாறு மறைமாவட்ட (ஆர்.சி) கிறிஸ்தவ பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் இல்லத்துக்கு ஸ்டாலின் வாகனம் செல்ல... 'தளபதி புது ரூட்ல போகிறாரே?’ என்று அவருக்குப் பின்னால் வந்த தி.மு.க. தொண்டர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். அவரது இல்லத்தில் நுழைந்த மு.க.ஸ்டாலின், வேட்பாளர் எஃப்.எம்.ஆர்.ராஜரத்தினம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் ஆகியோரை வரவேற்று உபசரித்தார் ரெமிஜியூஸ். கால் மணி நேரம் தனிமைப் பேச்சை முடித்துவிட்டு, ஆயரின் சிறப்பு ஆசிப்பெற்றுக் கிளம்பினர்.

மீண்டும் படுவேகத்தில் சென்ற ஸ்டாலின் வாகனம், குமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பிஷப் தேவகடாட்சத்தின் இல்லத்தில் போய் நின்றது. பின்தொடர்ந்த அனைவருக்கும் அடுத்தடுத்த 'ஷாக்கை’க் கொடுத்தது இந்த புது ரூட்கள். சி.எஸ்.ஐ. ஆயருடனும் சில நிமிடங்கள் கலந்துரையாடிய பின் புறப்பட்டது ஸ்டாலின் அணி.

குமரியில் பலம்வாய்ந்த இரு கிறிஸ்தவ ஆயர்களைச் சந்தித்ததால், குமரியில் அன்றே ஜெயித்துவிட்டது மாதிரியான தெம்புடன் காட்சியளித்தார் ஸ்டாலின். அதே உற்சாகத்துடனே நாகராஜா கோயில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். ''குமரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பற்றி எதுவும் பேசாத ஜெயலலிதா, ஏதோ ஒருசில திட்டங்களைக் கூறி, 'அதை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்... எடுத்துவருகிறது’ என உறுதியற்ற வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார். நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி கூறினாரா? நாங்கள் குமரிக்குச் செய்த திட்டங்களைப் பட்டியலிடலாம். திருவள்ளுவர் சிலை ஒன்று போதும், எங்கள் புகழ் பரப்பிட'' என்று ஜெயலலிதாவின் நாகர்கோவில் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்தவர்,

''கலைஞரே சிறுபான்மையினர் நலனில் என்றும் அக்கறைகொண்டவர். சிறுபான்மையினருக்கு வேலைவாய்ப்பில் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர். இன்று பிரசார மேடைகளில் மத்திய அரசைப்பற்றி, காங்கிரஸைப்பற்றி, தி.மு.க-வைப்பற்றி பேசுகிறாரே... சிறுபான்மையிரை வஞ்சித்துவரும் பி.ஜே.பி-யைப்பற்றி, மோடியைப்பற்றி பேசியது உண்டா? பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான கட்சியைப்பற்றி பேசுவதற்கே தயங்குகிறார் அம்மையார். காரணம்... அவர் மோடியை ஆதரித்து இந்தியாவை இருண்ட காலத்துக்குத் தள்ளப்போகிறார் என்பதுதான் உண்மை. இதில் இருந்தே சிறுபான்மையினர் நலனில் அக்கறைகொண்டவர் என கூறிக்கொள்ளும் ஜெயலலிதாவின் முகமூடி கிழிந்துவிட்டது. ஆகவே மதச்சார்பற்ற ஆட்சி அமைந்திட, கலைஞர் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றிபெற வைத்து மத்திய அரசை தீர்மானிப்போம்'' என்று முடித்தார்.

சிறுபான்மையினரைக் குறிவைத்து ஸ்டாலின் போட்ட ரூட் சக்சஸ் ஆகுமா?

- ச.காளிராஜ், படங்கள்: ரா.ராம்குமார்