விஜயகாந்த்தின் ராசி எண் 5. கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 (4 1=5) தொகுதிகளில் போட்டியிட்டார். மார்ச் 5-ம் தேதிதான் பி.ஜே.பி-யுடன் கூட்டணி என உறுதி செய்தார். பிரசாரம் தொடங்கியிருப்பது மார்ச் 14 (இதன் கூட்டுத்தொகையும் ஐந்துதான்!).

14-ம் தேதி மாலை 5 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கியவர், அன்றே அதிரடியாக 5 வேட்பாளர்களையும் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் மோடி பற்றியோ கூட்டணி கட்சித் தலைவர்கள் பற்றியோ விஜயகாந்த் வாய் திறக்கவே இல்லை.

''தமிழகத்தில் சாலைகள் சரியில்லை. சாலையில் நடந்து வருபவர் திடீரென்று குள்ளமாகிவிடுகிறார். பஸ்சில் ஒருவரின் செல்போன் இன்னொருவரின் பாக்கெட்டில் போய் விழுகிறது. என்னுடைய பேச்சை கேட்குறீங்க... பலமா கைதட்டுறீங்க. ஆனால், ஓட்டை மட்டும் மாத்தி போடுறீங்க. சட்டமன்றம் ஜால்ரா மன்றமாகிடுச்சு. அந்தம்மா பெங்களூரு கோர்ட்ல வாய்தாவுக்கு மேல வாய்தா வாங்கி வாய்தா ராணியாக வலம் வராங்க!'' என்று ஜெயலலிதாவை வறுத்தெடுத்தார்.அதன் பிறகுதான் கூட்டணி உறுதியானது. 15-ம் தேதி அரக்கோணத்தில் பேசியவர் நரேந்திர மோடி பெயரை உச்சரிக்க ஆரம்பித்தார்.

16-ம் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார் விஜயகாந்த். அங்கே பி.ஜே.பி. கொடிகளும், ம.தி.மு.க. கொடிகளும் கூட்டத்துக்குள் நிறையவே இருந்தன. ''இவ்வளவு பெரிய ஊருக்கு ரயில் வசதி கிடையாது. உங்க தொகுதி எம்.பி. சுகவனத்துக்கு, ஸ்டாலின் பின்னாடி குடை பிடிச்சிட்டு சுத்தவே நேரம் சரியா இருக்குது. அப்புறம் எங்கே அவரு மக்கள் பிரச்னையைக் கவனிக்கப் போறாரு? நரேந்திர மோடி பிரதமரானால் நமக்கு நல்லது நடக்கும். நானோ, நரேந்திர மோடியோ அடுத்த இரண்டு வருடத்தில் உங்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால், என் சட்டையைப் பிடித்துக் கேளுங்கள் மக்களே!'' என்றபோது கூட்டத்தில் பலத்த கைதட்டல்.

அடுத்து தர்மபுரி. ''ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ன ஆனது. ஸ்டாலின் வந்தார் குழிவெட்டிட்டு சிங்கப்பூர் சென்றார். பிறகு ஜப்பான், கொரியா போனார். எதுவும் நடக்கலை. தர்மபுரி மக்களுக்குக் கண்ணீர்தான் வருகிறது. தண்ணீர் வந்தபாடில்லை. அவுங்கதான் அப்படின்னா ஜெயலலிதா வந்தும் தண்ணீர் வரவில்லை. யாராவது கேள்வி கேட்டால், அவங்களை உள்ளே புடிச்சிப் போட்டுர்றாங்க. இங்கே இருக்கும் ஜி.ஹெச்-க்கு தினமும் 2,000 ரூபாய்க்குத் தண்ணீர் வாங்குறாங்க மக்களே!

இப்போ நான் சொல்லப்போறதை கவனமா கேளுங்க... எம்.ஜி.ஆர். கட்டிய வீட்டுக்குள் புகுந்த கருநாகம்தான் ஜெயலலிதா. அண்ணா கட்டிய வீட்டுக்குள் குடிபுகுந்த கருநாகம் கருணாநிதி. இந்த ரெண்டு பேரையும் பார்த்துதான் இப்போ நாடே நடுங்கிக்கிட்டு இருக்கு. இதையெல்லாம் கேட்டு கைதட்டிட்டுப் போயிடாதீங்க. ஓட்டுப்போடுங்க மக்களே!

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாமல் நாம பார்த்துக்கலாம். இந்தியாவை ஊழல் இல்லாமல் நரேந்திர மோடி பார்த்துக்குவார். தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் நிறைய நல்லது பண்ணுவார். நம்மையெல்லாம் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவார். ஏழைகளைப் பணக்காரர் ஆக்குவார். மோடி ஜெயிப்பார். நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இப்போ மறக்காம நம் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டுப் போடுங்க. 2016-ல் நான் பார்த்துக்குறேன்!'' என்று மோடி புராணத்தை முடித்தவர், அடுத்து மன்மோகன் மேட்டருக்குத் தாவினார்.

'' 'தமிழ்நாட்டுல எந்தப் பிரச்னை என்றாலும் 20 எம்.எல்.ஏ-க்களைக் கூட்டிகிட்டு நீங்களே நேரில் வர்றீங்க. உங்க முதல்வர் வந்தால் நல்லா இருக்குமே?’ என்று பிரதமர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்டு எனக்கு வருத்தமா இருக்கு. நாம என்ன பண்ண முடியும் சொல்லுங்க. இந்தப் பிரச்னைக்கெல்லாம் முடிவு கட்டணும்னா நம்ம மோடி பிரதமர் ஆகணும். அதுக்கு உங்க கால்ல விழுந்து கேட்குறேன் மக்களே... நம்ம கூட்டணிக்கு ஓட்டுப் போடுங்க.

ராஜ்நாத் சிங்கோடு நான் போன்ல பேசினதா சொல்றாங்களே... நான் எந்த மொழியில பேசப் போறேன். நான் பேசுறது அவருக்கு எப்படி மக்களே புரியும்? எனக்கு கிட்னியில பிரச்னைன்னா இங்கே வந்து உங்ககிட்ட நின்னு மணிக்கணக்குல பேச முடியுமா?'' என்று பேசியபடி இருக்க... கூட்டத்தில் ஒரு இளைஞர் உற்சாக மிகுதியில் விஜயகாந்த்தைப் பார்த்து கை ஆட்டியபடியே இருந்தார். அந்த இளைஞரைப் பார்த்து டென்ஷன் ஆன விஜயகாந்த், ''டேய்... உனக்கு அறிவில்ல... என் கையிலதான் மூணு மைக் கொடுத்துட்டாங்க இல்ல... நான் கைகாட்ட முடியாதுங்குறேன். நீ கை ஆட்டிகிட்டே இருக்கே...'' என்று ஓப்பன் மைக்கில் கத்த கூட்டம் அமைதியானது.

'நீ பொட்டு வெச்ச தங்கக் குடம்

ஊருக்கு நீ மகுடம்

நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்

ஜோரான தங்கரதம்!’ - என்ற பாடல் ஹைபிட்ச்சில் ஒலிக்க, கிளம்புகிறது கேப்டன் வண்டி!

- எம்.பரக்கத் அலி, வீ.கே.ரமேஷ் படம்: க.தனசேகரன்