கண்ணைப் பறிக்கும் கலர் சட்டை போட்டு திரையில் கதாநாயகனாகக் கலக்கிய ராமராஜன், இப்போது பிரசாரத்திலும் கலக்கிவருகிறார். தனது நையாண்டி பேச்சுகளால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு புறப்பட்டுவிட்டார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அன்வர் ராஜாவுக்கு வாக்கு கேட்டுப் பிரசாரம் செய்ய வந்தார்.

அப்போது, ''இந்தத் தேர்தல்தான் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவைப் பிரதமராக்க நடைபெறும் தேர்தல். அம்மா பிரதமரானால்தான், தமிழுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாடியே துணிச்சலாக வேட்பாளர்களை அறிவித்துப் பிரசாரத்தையும் தொடங்கியவர் புரட்சித் தலைவி அம்மாதான். ஆனா பாருங்க, இன்ன தேதி வரை சில கட்சிகள் ஒண்ணு இங்கிட்டு போகுது... ஒண்ணு அங்கிட்டு போகுது. தி.மு.க-வில் ஸ்டாலின் எங்கள் கூட்டணி கதவு மூடியாச்சுனு சொன்னார். ஆனா, கொல்லைப் பக்கமா கதவைத் திறந்து வெச்சு வாங்க வாங்கனு கம்யூனிஸ்ட்ட கூப்பிடுறார்.

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அம்மாவை எதிர்த்துத் தனியாகச் சந்திக்க எந்தக்

கட்சிக்கும் தைரியம் இல்லை. தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கு. பெரிய கட்சி, சிறிய கட்சி, பக்கோடா கட்சி, துக்கடா கட்சிலாம் இருக்கு. ஆனா, எந்தக் கட்சிக்கும் ஒரு பெண் தலைவரா இருக்காங்களா? அ.தி.மு.க-வில் மட்டும் அம்மா தலைவராக இருக்காங்க.

வட நாட்டு தலைவர்களே அம்மா பிரதமர் ஆவாங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. பி.ஜே.பி-யைச் சேர்நத அத்வானி, 'வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. பி.ஜே.பி-யும் ஆட்சிக்கு வராமல் போனால் ஒரு மாநில தலைவர்தான் ஆட்சிக்கு வருவார்’ என்று சொல்லி இருக்கார். அந்த மாநிலம் தமிழகம்தான் எனச் சொல்லாமல் சொல்லிவிட்டார். பத்திரிகையாளர் சோ சொல்றார்... 'மோடிக்குப் பிரதமர் பதவி கிடைக்கலைனா அந்தப் பதவி அம்மாவுக்குத்தான் கிடைக்கும்’னு.

இந்தியாவில் உயரிய பதவி இரண்டுதான். ஒண்ணு ஜனாதிபதி, அடுத்தது பிரதமர். நம்ம நாட்டைச் சேர்ந்த(?) வெங்கட்ராமன் ஜனாதிபதியா இருந்தார். அதுக்கு அப்புறம் நம்ம ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதியா இருந்தார். ஆனா, பிரதமர் பதவிக்கு நம்ம நாட்டைச் சேர்ந்த(?) யாரும் இருந்தது இல்ல. இப்ப அந்த வாய்ப்பு வந்திருக்கு.

கர்நாடகத்தைச் சேர்ந்த தேவகவுடா 23 எம்.பி-யை வெச்சு பிரதமர் ஆகும்போது 40 எம்.பி-யை வெச்சு அம்மா பிரதமராவதை எல்லாரும் டி.வி-யில பாக்கத்தான் போறீங்க. 99-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினரா இருந்தேன். அப்ப நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் பேசிக்கிட்டு இருந்தார். இந்தி தெரியாத நானும் அவர் பேச்சைக் கேட்டுகிட்டு மண்டையை ஆட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப என் பின்னால் குறட்டைச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவகவுடா தூங்கிட்டு இருந்தார். இப்படி தூங்குறவரா நம்ம நாட்டு பிரதமரா இருந்தார்னு வேதனைப்பட்டேன். அப்படியானால் தூங்காமல் பணியாற்றிவரும் அம்மா ஏன் பிரதமர் ஆகக் கூடாது?

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலை பரிதாபமா இருக்கு. யாரும் போட்டிப் போடவே யோசிக்கிறாங்க. வாசன் சொல்றார்... 40 தொகுதியிலும் பிரசாரம் பண்ணுவேன். ஆனால் நான் நிக்க மாட்டேன்னு சொல்றார். காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே தேர்தல்ல நிக்க பயப்படறாங்க.

அம்மா அரிசி இலவசமா கொடுகறாங்க. கஷ்டப்பட்ட மக்களுக்கு ஆட்டையும் மாட்டையும் கொடுத்தாங்க. ஆடு குட்டி போடும்போது... அது காசு. பசு லிட்டர் கணக்கா பால் கறக்கும். அதுவும் காசு. பால் கறக்கலையா... 'செண்பகமே செண்பகமே’னு பாட்டு பாடுங்க. தன்னால பால் வரும்'' என்று பாடியும் காண்பித்தார்.

''அம்மா கையால லேப்டாப் வாங்குனவுங்க இந்தத் தேர்தல்ல முதல் முறையா கன்னி ஓட்டு போடப்போறாங்க. அவங்க மொத்த ஓட்டும் அம்மாவுக்குத்தான். அம்மா படிக்கும் பிள்ளைகளுக்கு மார்க் போடுறாங்க. ஆனா குஷ்புவும் நமீதாவும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில உக்காந்து மார்க் போடுறாங்க.

ஒரு இட்லி ஒரு ரூபாய்க்குக் கொடுத்து ஏழைகள் வயிறு நிரம்பவைத்தவர் அம்மா. வேணும்னா நீங்களும் ஒரு ரூபாய்க்கு இட்லி போட வேண்டியதுதானே? தமிழகத்தில மின்சார பிரச்னைக்குக் காரணம் கருணாநிதி. அம்மா வந்துதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா சரிசெஞ்சு இருக்காங்க. அம்மா செய்வாங்க. ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டபட்டவர்களை விடுவித்தது அம்மாவின் துணிச்சல். அப்படித் துணிச்சலானவங்க கையிலதான் பிரதமர் பதவி இருக்கணும்'' என்று பேசி முடித்தார்.

கலக்க ஆரம்பித்துவிட்டார் கலர் சட்டைக்காரர்!

- அபுதாஹிர், படம்: சாய் தர்தமராஜ்