இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியனுக்கு வயது 82. அடுத்த வருடம் இந்தப் பதவியில் தா.பாண்டியன் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'கட்சியை தன் சொந்த நலனுக்காக போயஸ்கார்டனில் அடகு வைத்துவிட்டார். தனக்கு வேண்டிய நபர்களை கட்சிக்குள் வளர்த்து உட்கட்சிப் பூசலை உருவாக்குகிறார்’ என்று பல குற்றச்சாட்டுக்கள் அவரை மையப்படுத்திக் கிளம்பின. கடந்த 19-ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் வெளிப்படையாகவே தா.பாண்டியனுக்கு எதிராக கொந்தளித்துவிட்டார்கள் தொண்டர்கள்.

என்னதான் நடக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்?

''கடந்த சில ஆண்டுகளாகவே தா.பாண்டியனுக்கு டெல்லி அரசியல் ஆசை வந்துவிட்டது. எப்படியாவது அ.தி.மு.க. ஆதரவில் ராஜ்யசபா எம்.பி. பதவியை பெற்றுவிட வேண்டும் என்பது அவரது கனவு. அந்தக் கனவை டெல்லி தலைவர்களே தகர்த்துத் தடுத்து, டி.ராஜாவை ராஜ்யசபா எம்.பி-யாக்கி அனுப்பிவைத்தார்கள். அதில் ஏமாற்றம்

அடைந்த தா.பாண்டியன், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் வட சென்னையிலோ, திருப்பூரிலோ போட்டியிடலாம் என்று நினைத்திருந்தார்.

பொதுவாக யார் வீட்டுக்கும் அவ்வளவு எளிதில் சென்றுவிடாத ஜெயலலிதா, தா.பாண்டியனின் வீடுதேடிச் சென்று பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பூங்கொத்துக் கொடுத்தார். குடும்ப சகிதமாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அ.தி.மு.க. கூட்டணி உறுதியாகிவிட்டது என்று தொண்டர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். முதல்வரைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதால், மக்களைப் பாதிக்கும் எந்த திட்டங்கள் தொடர்பாகவும் பேசக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். முதல்வரைப் புகழ்வதை மட்டுமே தன் அரசியல் சேவையாக நினைத்திருந்தார்.

தன் மகன் டேவிட் ஜவஹரை சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்க வேண்டும் என்று முதல்வரிடம் ஒரு கோரிக்கையும் வைத்திருந்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்துக்கு டேவிட் ஜவஹரை துணைவேந்தர் ஆக்கலாம் என்று ஆட்சி மேலிடம் பரிந்துரைத்து இருந்தாலும்கூட, காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் முறைகேடுகள் நடப்பதாக வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அதனால் அவரை துணைவேந்தர் ஆக்குவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் டேவிட் ஜவஹர் சென்னை பல்கலைக்கழத்தின் பதிவாளராகக் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் நியமிக்கப்பட்டார். தா.பாண்டியனோ, கொடுத்தால் துணைவேந்தர்; இல்லை என்றால் பதவியே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார். கூட்டணி கனவில் மண் விழுந்தது. இதற்கு மேல் தாமதித்தால் உள்ளதும் போய்விடும் என்பதால், தன் மகனை உடனே பதிவாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தார். இந்தச் செயல்பாடுகள் கட்சியையும் பாதிக்கிறது'' என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.

திருப்பூரைச் சேர்ந்த தோழர் ஒருவர், ''நீண்ட கால வரலாற்றைக் கொண்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் டீயும் பன்னும் சாப்பிட்டு வளர்ந்த சென்னை தி.நகர் பாலன் இல்லத்தை இடித்துவிட்டு, ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்பது தா.பாண்டியனின் ஆசை. அதற்காக பல கோடி ரூபாய் திட்டத்தில் எட்டு மாடியில் திட்டம் போட்டு அதற்கான ஒப்பந்ததாரரையும் நியமித்தனர். தேவையான தொகையை வங்கிக் கடனாகப் பெற்றது போக, கட்சித் தொண்டர்களிடம் இருந்தும் பல கோடி ரூபாய் நிதியாக வசூலிக்கப்பட்டது. இதுபோக மணல், ஜல்லி, செங்கல் என கொடையாகக் கொடுத்தவர்களும் உண்டு.

ஆனால், கடந்த ஐந்து வருடங்களாக இந்தச் செலவுகளுக்கு எந்தவிதமான கணக்கு வழக்குகளையும் தா.பாண்டியன் கட்சிக்குக் காட்டவில்லை. திருச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்துக்கு சொந்தமான கட்டடத்தை எவருடைய அனுமதியும் இல்லாமல் தா.பாண்டியன் விற்பனை செய்துவிட்டார். இதெல்லாம் எங்கள் தோழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

சென்ற வருடம் செப்டம்பர் 13-ம் தேதி பரதன் தலைமையில் திருப்பூரில் நடந்த மாநிலக் குழு கூட்டத்திலேயே இந்த விவகாரம் வெடித்தது. கடைசியில் மத்திய கமிட்டி தலையிட்டு கட்சிக்குள் பிரச்னை வேண்டாம். தா.பாண்டியன் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், கமிட்டி சொன்னதுபோல அவர் பிரச்னை எதையும் முடிக்கவில்லை.

இப்போது மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கட்சியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்படக்கூடிய சிலரை வேட்பாளராக தா.பாண்டியன் பரிந்துரை செய்திருக்கிறார். சில மாவட்ட நிர்வாகம் அதை எதிர்த்தும் பாண்டியன் தொடர்ந்து அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். தா.பாண்டியனுக்கு இருப்பது ஆசை அல்ல; பேராசை. அது இன்று கட்சியை அழிக்கும் நிலைமைக்குப் போய்விட்டது.

தா.பாண்டியன் திருப்பூரில் போட்டியிடப் போகிறார் என்று பணம் வசூலித்தார்கள். அந்தப் பணத்துக்கு இன்று வரை கணக்கு இல்லை. ஜெயலலிதாவினால் பாண்டியன் அடைந்த ஆதாயத்துக்கு யார் கணக்கு சொல்வது? இனியாவது அவர் இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்!'' என்று நொந்துகொண்டார்.

தா.பாண்டியனைத் தொடர்புகொண்டோம். நாம் சொன்ன அத்தனை குற்றச்சாட்டுக்களையும் நிதானமாகக் கேட்டவர், ''கதை எழுதுவது எழுத்தாளர்களின் உரிமை... எழுதுங்கள். கட்சிக்குள் பயங்கர குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'' என்று இணைப்பைத் துண்டித்தார்.

வர்க்கப் போராட்டத்தில் தொடங்கி, சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராகப் போராடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுயமரியாதை இன்று மற்றவர்களால் கிண்டல் அடிக்கும் இடத்துக்கு வந்துவிட்டது என்பதே ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழர்களின் வேதனையாக இருக்கிறது.

- டி.அருள் எழிலன்

பாண்டியன் பாணி தனி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடந்துவரும் பிரச்னைகள் பற்றி அந்தக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மகேந்திரனிடம் பேசினோம். ''அ.தி.மு.க-வை நாங்கள் கண்மூடித்தனமாக எப்போதும் ஆதரித்தது கிடையாது. எங்கள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கண்மூடித்தனமாக அ.தி.மு.க-வை ஆதாரித்தார் என்று சொல்வது தவறான புரிதல். ஒவ்வொரு தலைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதில் ஒரு பாணி இருக்கும். அதுபோல், ஒரு தனித்த பாணியில் தோழர் தா.பாண்டியன் கட்சியின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி வந்தார். அதை அ.தி.மு.க-வின் சார்பு நிலை என்று புரிந்து கொண்டது அவர்களின் தவறு. அண்மையில் நடந்த கூட்டத்தில் தா.பாண்டியன் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது என்பதும், அவரை எதிர்த்து கோஷம் போட்டார்கள் என்று சொல்வதும் பொய். அப்படி ஒன்று நடக்கவே இல்லை. தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்வோம்'' என்றார்.

- ஜோ.ஸ்டாலின்