கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. டெல்லிக்கும் சென்னைக்கும் அலையவில்லை. இந்தத் தொகுதி வேண்டாம்... அந்தத் தொகுதி வேண்டும் என இழுபறி ஏதும் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி எந்த சிக்கலும் இல்லாமல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி. ஆனால், 'வாரிசுகளுக்கு இடம் இல்லை’ என்று சொல்லி வந்த ராகுல் அறிவித்த பட்டியலில் வாரிசுகள் வரிசையாக அணிவகுத்து நிற்கிறார்கள்.

தனித்துப் போட்டி என்றவுடன் முக்கியத் தலைவர்கள் பலர் போட்டியிடத் தயங்க, வேட்பாளர் என்ற கௌரவத்தை இழந்துவிடக் கூடாது என்று ஒருசிலரும், மரியாதையான வாக்குகளைப் பெற்று தன் பலத்தைக் காட்ட வேண்டும் என ஒருசிலரும் போட்டியிட தயாராகினர். போட்டியிட விரும்பாத சிலர், தொகுதியை வேறு சிலருக்கு இழக்காமல் இருக்க, தங்களது வாரிசுகளை களம் இறக்கியுள்ளனர். எந்தத் தேர்தலிலும் இல்லாமல் இந்தத் தேர்தலில் 30 வேட்பாளர்களில் ஆறு பேர் தலைவர்களின் வாரிசுகள்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி, நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை தான் தேர்தலில் போட்டியிடவில்லை என ப.சிதம்பரம் அறிவிக்க, 'தோல்வி பயத்தால் ஒதுங்குகிறார் ப.சிதம்பரம்’ என பி.ஜே.பி-யில் இருந்து அ.தி.மு.க. வரை எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன. ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், சிவகங்கை தொகுதியில் தனது மகனை களம் இறக்கியுள்ளார் ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சியில் எந்தப் பதவிகளும் இல்லாவிட்டாலும் இவருக்கென கோஷ்டியை வைத்துக்கொள்ளும் அளவுக்கு, அரசியல் தெரிந்தவர் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் போட்டியிட்டால், இவர்தான் தேர்தல் பணிகளைக் கவனிப்பார். இப்போது தனக்காக அந்த வேலைகளை கவனித்து வருகிறார்.

'சிவகங்கை தொகுதியில் எனது தந்தை ஒன்பது முறை போட்டியிட்டுள்ளார். அதில் ஏழு முறை வென்றுள்ளார். இரு முறை தோற்றுள்ளார். எனவே தோல்வி பயம் கண்டு அவர் போட்டியிடவில்லை என்பதை ஏற்க முடியாது. என் தந்தையின் உழைப்பால் சிவகங்கை தொகுதி முழுமையான வளர்ச்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி பலத்தில் நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்'' என்கிறார் கார்த்தி சிதம்பரம்.

சேலம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம். நேரு குடும்பத்துக்குப் பிறகு தலைமுறை தலைமுறையாக அரசியலில் ஈடுபட்டுவரும் குமாரமங்கலம் குடும்பத்தின் இளைய வாரிசு இவர். இவரது குடும்பத்தில் அரசியலுக்கு வரும் நான்காவது தலைமுறை இவர். ''எனது தந்தை ரங்கராஜன் குமாரமங்கலம் அமைச்சராக இருந்தபோது, சேலத்துக்கு பல திட்டங்கள் கிடைத்துள்ளன. என் தாத்தா, அப்பாவைப்போல பணியாற்ற முடிவுசெய்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்'' என்கிறார் மோகன் குமாரமங்கலம்.

ஆரணி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார் விஷ்ணுபிரசாத். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வான இவர், 2011-ல் தோல்வியடைந்தார். இப்போது முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். 'செய்யாறு தொகுதியில் நான் செய்த பணிகள் எனக்கு வலுசேர்க்கும்' என்கிறார் நம்பிக்கையுடன். இவரது அக்கா சௌமியாவைத்தான் அன்புமணி திருமணம் செய்துள்ளார்.

முன்னாள் எம்.பி. அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்குகிறார். இவர் ஏற்கெனவே இருமுறை எம்.எல்.ஏ-வுக்கு போட்டியிட்டுள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் வெற்றிபெற்றவர் இவர். 2011-ல் அதே தொகுதியில் போட்டியிட்ட இவரை, காங்கிரஸ் கட்சியினரே போட்டி வேட்பாளரை நிறுத்தி தோல்வியடைய வைத்தனர். இப்போது இவர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் தொகுதியில், முன்னாள் எம்.பி. ஜெயமோகனின் மகன் விஜய் இளஞ்செழியன் போட்டியிடுகிறார். இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவரான இவர், கடந்த முறை ஆம்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார்.

அரக்கோணம் தொகுதியில் நாசே ராமச்சந்திரனின் மகன் நாசே ராஜேஷ் போட்டியிடுகிறார். இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளரான இவர், முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கிறார். நாசே என்ற தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். ''எனது சமூகப் பணிகள் எனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்'' என நம்புகிறார்.

ஆறு பேரில் மூவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள். 'வாரிசு அரசியல் எனக்குப் பிடிக்காது’ என பகிரங்கமாக அறிவித்த ராகுலுக்கு நெருக்கமானவர்கள். தமிழ்நாடு காங்கிரஸிலும் வாரிசு அரசியல் தொடங்கியிருக்கிறது!

- ச.ஜெ.ரவி