''சேலம் அருள் இங்கே வந்திருப்பான். அவனை சேலம் தொகுதி வேட்பாளராக அறிவித்திருந்தேன். அவனுக்கு சேலம் கிடைக்குமா என்று கலக்கமாக இருக்கிறது. அருள் உனக்கு எதுக்கு கலக்கம்? உனக்கு எதுக்கு தயக்கம்? நீ சேலத்தை நோக்கிக் கிளம்பு. மக்கள் உனக்குத் துணைநிற்பார்கள். பாட்டாளிச் சொந்தங்கள் உன்னை வெற்றிபெற வைப்பார்கள். பெரும் ஓசை எழுப்பிப் போ. எட்டு திக்கிலும் மணியோசை கேட்கட்டும்''- அன்புமணியை தர்மபுரி வேட்பாளராக அறிவித்த கூட்டத்தில் இப்படி முழங்கினார் டாக்டர் ராமதாஸ். அருளும் உற்சாகமும் சந்தோஷமும் பொங்க கிளம்பினார். அந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடித்தது.

கூட்டணியில் சேலம் தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட, அருளின் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். சிலர் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். சேலம் தொகுதி முழுக்கவே கடந்த ஐந்து மாதங்களாக வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்துவந்த அருள், இப்போதும் தனது பயணத்தை உற்சாகத்துடன் செய்துவருகிறார். 'அருள் சுயேச்சையாக சேலம் தொகுதியில் களமிறங்கப் போகிறார்’ என்பதுதான் சேலத்தின் டாக் ஆஃப் தி டவுன்.

அருளின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''சேலத்தில் அண்ணன் அருள் வேட்பாளர் இல்லை என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. கடந்த ஐந்து மாதங்களில் ஒரு நாள்கூட அண்ணன் ஓய்வு

எடுத்ததே கிடையாது. வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவரையும் கட்டித்தழுவி ஓட்டுகேட்டு வந்தார். பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு இருந்தாலே நாங்கள் குறைந்தது ஆறு லட்சம் ஓட்டுகள் வாங்குவோம். அபார வெற்றியும் பெற்றிருப்போம். ஒவ்வொரு மேடையிலும் திராவிடக் கட்சிகளோடும், தேசிய கட்சிகளோடும் இனி கூட்டணி

இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது ஏதோ சில காரணங்களுக்காக கூட்டணி வைத்திருப்பதையும், எங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள ஒரு தொகுதியை இழந்திருப்பதையும் ஏற்கவே முடியவில்லை.

வன்னியன் ஓட்டு அன்னியனுக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, இனி எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டுப் போக முடியும்? வேட்பாளரே அறிவிக்காத தர்மபுரியை வாங்கிக்கொண்டு, ஐந்து மாதத்துக்கு முன்பு வேட்பாளர் அறிவித்த சேலத்தை விட்டுக்கொடுத்தது வேதனையாக இருக்கிறது. சின்னய்யாவுக்கு கட்சியைக் காட்டிலும் தன்னுடைய பதவிதான் முக்கியமாகப் போய்விட்டதா? அண்ணன் அருளுக்கு ஆசை காட்டி மோசம் செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம். பசியோடு இருப்பவனுக்கு இலையில் வடை பாயசத்துடன் சோறு போட்டு, சாப்பிடப்போகும் நேரத்தில் எழுந்திருக்கச் சொன்னால் எப்படி இருக்குமோ அந்த மனநிலையில்தான் அண்ணன் அருள் இருக்கிறார்.

தி.மு.க-வைப்போல பா.ம.க-விலும் வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது. ஐயா கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. பா.ம.க. யாருடைய குடும்பச் சொத்தும் கிடையாது. பல லட்சம் மக்களைக் கொண்ட ஒரு சமூக அமைப்பு. இனி கட்சியால் வன்னியர் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவது இல்லை. இந்தத் தேர்தலில் நிச்சயம் நாங்கள் தே.மு.தி.க-வுக்கு ஓட்டுப் போட மாட்டோம். ஓட்டு கேட்கவும் போக மாட்டோம். எங்களின் வலிமையை தலைமைக்குக் காட்டுவதற்காக அண்ணன் அருளை சுயேச்சையாகப் போட்டியிட வலியுறுத்தி வருகிறோம்'' என்று கொந்தளித்தனர்.

இது தொடர்பாக அருளிடம் பேசினோம். ''பள்ளிப் பருவத்தில் இருந்து நான் பா.ம.க-வில் இருக்கிறேன். இந்த கட்சி மீதும் ஐயா மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. என் ஆதரவாளர்களின் கோபத்திலும், ஆதங்கத்திலும் அர்த்தம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். சுயேச்சையாகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. அதே நேரத்தில் கூட்டணி கட்சிக்கு என்னால் வேலை செய்ய முடியாது. நான் அவர்களுக்காக ஓட்டு கேட்டுப் போனால், அது நிச்சயம் அவர்களுக்கும் எதிர்வினையாகத்தான் அமையும். தர்மபுரியில் சின்னய்யா போட்டியிடுகிறார். அதனால் நான் தர்மபுரி சென்று சின்னய்யா வெற்றிக்காக உழைக்கத் திட்டமிட்டிருக்கிறேன். மற்றபடி வேறு எந்தத் திட்டமும் இல்லை!'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

பி.ஜே.பி. கூட்டணியில் களம் இறங்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு அருளின் எதிர்ப்பு பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்கும். அருள் சுயேச்சையாக போட்டியிடாதபட்சத்தில் அந்த ஓட்டுகள் தி.மு.க. பக்கமோ, அ.தி.மு.க. பக்கமோ திசைமாறவும் வாய்ப்பு உள்ளது. சேலம் பா.ம.க-வுக்குள் நடக்கும் விஷயங்களை தே.மு.தி.க-வும் உன்னிப்பாக கவனிப்பதோடு, அன்புமணியிடமும் புகார் வாசித்துவருகிறது. 'நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்குறேன்!’ என்று நம்பிக்கையோடு சொல்லிவருகிறாராம் அன்பு மணி. ஆனாலும் தே.மு.தி.க. யோசிக்க ஆரம்பித்துள்ளது!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்