காசி, வாரணாசியில் இருக்கும் சிவபெருமானை ஹர் ஹர் மஹாதேவ் என்று அழைப்பது வழக்கம். ஆனால், இப்போது வாரணாசியின் ஹர் ஹர் மஹாதேவ் ஆகியிருப்பது நரேந்திர மோடி. பி.ஜே.பி-யினர் மோடியை இப்போது இப்படித்தான் அழைக்கிறார்கள்!

உ.பி. மாநிலம் வாரணாசி, தேர்தல் திருவிழாவுக்காக களைகட்ட ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் மோடிக்கு எதிராக இங்கே களமிறங்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதரவு முக்கியம் என்றால், உ.பி-யில் பிராமணர்கள் ஆதரவு அவசியம் தேவை. வாரணாசி தொகுதியில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பிராமணர்கள் இருக்கிறார்கள். இதே அளவுக்கு இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். கடந்த முறை முரளிமனோகர் ஜோஷிக்கு எதிராகப் போட்டியிட்ட மாயாவதியின் இஸ்லாமிய வேட்பாளர் முக்தார் அன்சாரி இரண்டாவது இடத்துக்கு வந்தார். இந்த முறை பிராமணர் அல்லாத மோடி இங்கே களமிறங்கியிருக்கிறார். அவரை சிவபெருமானுக்கு இணையாக வர்ணித்து பிரசாரம் செய்வதை வாரணாசி பிராமணர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

''வாரணாசி சாதி உணர்வுள்ள மக்கள் அதிகம் வாழும் தொகுதி. இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது பிராமணர்களும், இஸ்லாமியர்களும்தான். இரண்டு சமுதாயத்துக்கும் பொதுவான ஒருவரை காங்கிரஸ் கட்சியோ அல்லது ஆம் ஆத்மியோ இறக்கினால் மோடி பாடு இங்கே திண்டாட்டம்தான். அதுமட்டுமல்ல, மோடிக்கு எதிராக இங்கே எதிர்க்கட்சிகள் பல்வேறு திட்டங்களுடன் களத்தில் குதிக்கத் திட்டமிட்டு வருகின்றது.

அதேபோல இங்கே பனியா இனத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் குறிப்பிட்ட அளவுக்கு இருக்கிறார்கள். அந்த சமுதாயத்தைச் சேர்ந்த விஜய்பிரகாஷ் ஜெஸ்வால் என்பவரைத்தான் மாயாவதியின் கட்சி இங்கே களமிறக்கியுள்ளது. இந்த வேட்பாளர் கடந்த முறை 'நம்ம தால்’ என்ற கட்சியில் போட்டியிட்டு காங்கிரஸுக்கு இணையான வாக்குகளைப் பெற்றார். இதே இனத்தைச் சேர்ந்த மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் செல்வாக்கு உண்டு. அவரும் இந்த மக்களை நம்பித்தான் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியோ இங்கே சாதி ரீதியான பலம் உள்ள ஒருவரையோ அல்லது சினிமா துறையைச் சேர்ந்தவரையோ நிறுத்தத் திட்டமிட்டு இருக்கிறது. ஒருகாலத்தில் வாரணாசி தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது. நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977-ம் ஆண்டு நடந்தத் தேர்தலில் மட்டும் இங்கே காங்கிரஸ் தோற்றுள்ளது. காங்கிரஸ் தலைவராக இருந்த கமலாபதி திரிபாதி போன்றவர்கள் இங்கே இருந்துதான் வெற்றி பெற்றனர். வி.பி.சிங் வெளியேறிய பிறகு இது காங்கிரஸை விட்டு கைமாறிப்போனது. 1989-ல் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி முதன்முறையாக ஜனதா தளத்தின் சார்பாக வெற்றிபெற்றார். அதன் பிறகு இந்தத் தொகுதி பி.ஜே.பி. வசம் ஆனது. 2004-ம் ஆண்டு நடந்தத் தேர்தலில் காங்கிரஸ் இங்கே வென்றது.

''மோட்சத்துக்கான புனிதத் தீ மயானங்கள் பல்வேறு பெயர்களில் கங்கை நதிக்கரையில் இருக்கிறது. இதில் ஹரிச்சந்திரா மயானம் முக்கியமானது. மகாத்மா காந்தி முன் உதாரணமாக எடுத்துக்கொண்ட ஹிரிச்சந்திர மகாராஜா இங்குள்ள ஒரு மயானத்தில்தான் பிணத்தை எரிக்கும் பணியில் ஈடுபட்டார் என்பது புராணக் கதை.

விசுவாமித்திரருக்கு நாட்டை கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சிவனடியாராக பணியாற்ற வந்த ஹரிச்சந்திரா, சிவனுக்குத் தட்சணை கொடுப்பதற்காக இந்த சுடுகாட்டில் வரி வசூலிக்கும் பாதுகாவலராகப் பணியாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஹரிச்சந்திரா புராணப்படி இந்த மயானங்களில் புனிதத் தீ ஏற்றும் பணியாளர்கள் டோம் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் புனிதத் தீக்கு இந்துக்கள் மத்தியில் பயபக்தி நிறையவே உண்டு. மயானங்களில் தீ மூட்டுபவர்களை டோம் ராஜா என்று அழைப்பார்கள். வித்தியாசமான இந்த இனத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரை மோடிக்கு எதிராக நிற்கவைத்தால் என்ன என்று காங்கிரஸ் யோசிக்கிறது. இந்த இன மக்களை வைத்து மோடிக்கு எதிரான புனிதத் தீயை ஏற்றலாமா என்றும் காங்கிரஸ் கணக்குப்போடுகிறது'' என்று சொல்கிறார் வாரணாசியைச் சேர்ந்த மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர்.

மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதி குஜ்ராத் மாநில வதோதரா. இந்தத் தொகுதியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அங்கு அவர் நிச்சயம் வெல்வார் என்கிறார்கள். அப்புறம் எதற்கு வாரணாசி?

- சரோஜ் கண்பத்