''இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இருந்தவரை இந்திய அரசியலில் வலுவான மாற்று சக்தியாகத் திகழ்ந்தோம். சென்னை ராஜதானியிலும் அதிக சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்தோம். 1964-ல் கட்சி இரண்டாக உடைந்த பிறகு, நாங்கள் தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்திக்கவே இல்லை. வரலாறு எங்களை அப்படி வழிநடத்திவிட்டது. எங்கள் கொள்கைகளுடன் உடன்பட்ட கட்சிகள், மக்கள் நலன்களுக்காக நாங்கள் குரல் எழுப்பிய பிரச்னைகளில் எங்களோடு ஒரே கருத்தைக் கொண்டவர்களோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். இதனாலேயே எங்களால், எங்கள் கொள்கைகளை முழுமையாக மக்களிடம் எடுத்துச்செல்ல முடியாமல் போனது. அதற்குக் காரணம் கூட்டணித் தடைகள். இப்போது அந்தத் தடைகள் உடைந்துள்ளன'' என்று தடதடக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.மகேந்திரன்.

அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''அ.தி.மு.க. உங்களுக்கு ஒரு தொகுதியைக்கூட தராமல் போனதுதானே உங்களுக்குத் தனித்துப் போட்டியிடும் நிர்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது?''

''நிர்பந்தம் இல்லாமல் புதிய படிப்பினை, புதிய முயற்சி, புதிய திறப்பு ஏற்படாது. அரசியலில் புதிய முயற்சிகள் அத்தனைக்கும் நிர்பந்தம் அவசியம். இதுபோன்ற நிர்பந்தம் இதற்கு முன் வரவில்லை. இப்போது வந்துள்ளது. இதில் இருக்கும் படிப்பினைகள், சாதகங்கள், பாதகங்களுக்கு ஏற்ப எங்களை வடிவமைத்துக் கொண்டு எங்களின் பாதையை நாங்கள் வகுத்துக்கொள்வோம். எங்களுக்கான தடைகள் உடைந்துள்ளது. இது இந்திய அரசியலில் புதிய திசையை எங்களுக்கு காட்டும் வாய்ப்பாகவே நினைக்கிறோம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், அதன் கொள்கையை ஏற்றுக்கொண்ட தொண்டர்களுக்கும் தனித்துத் தேர்தலை சந்திக்கும் பயிற்சிக் களமாக இந்தத் தேர்தல் இருக்கும். வெற்றி தோல்வியை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணி செய்பவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்கள். அதனால், இந்த நிலை எங்கள் அணிகள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ எந்தவிதமான சோர்வையும் ஏற்படுத்தவில்லை. தமிழகத்தில் 40 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடவில்லை என்றாலும், இரண்டு கம்யூனிஸ்ட்களும் சேர்ந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இது பரவலான எண்ணிக்கைதான். அங்கெல்லாம் நாங்கள் ஆற்றப்போகும் களப்பணி மற்றும் எங்களின் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் விதத்தில் நீங்களே எங்கள் தொண்டர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்.''

''இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வைப் பற்றிய விமர்சனம் எப்படிப்பட்டதாக இருக்கும்?''

''அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்த போதுகூட அவர்களை நாங்கள் விமர்சித்துக் கொண்டுதானே இருந்தோம். கம்யூனிஸ்ட்களின் பலமே அதுதானே? நாங்கள் எப்போதும் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்தது கிடையாது.

சில கொள்கை முடிவுகளின் அடிப்படையில் எங்களோடு உறவாக இருந்த தோழமைக் கட்சிகளையும்கூட, அவர்கள் மக்கள் நலனுக்கு எதிரான செயல்களில் இறங்கும்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளோம். அதை எங்கள் மாநிலச் செயலாளர் தனக்கே உரிய பாணியில் செய்தார். அதைத்தான் ஊடகங்களும் மற்றவர்களும் தவறாகப் புரிந்துகொண்டனர். அப்படிப்பட்ட உறவுதான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.''

''கம்யூனிஸ்ட்களின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?''

''கம்யூனிஸ்ட்களுக்கு இந்தத் தேர்தல் வெற்றி தோல்வி தொடர்புடைய தேர்தல் அல்ல. எங்களின் அரசியல் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவும், தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட்கள் தனித்து இயங்கவும், தனித்து தேர்தலை சந்திப்பதற்குமான அரசியல் தளத்தை அமைத்துக் கொடுக்கும் தேர்தல்தான் இது. அதனால் நாங்கள் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படவும் இல்லை. அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை!''

- ஜோ.ஸ்டாலின்