மோடிக்கு முன் குஜராத் எப்படி இருந்தது?

பிரிட்டிஷ்காரர்களின் காலனி நாடாக இந்தியா இருந்தபோது எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் ஒன்று உண்டு. 1879-ல் இந்தியாவில் இருந்த மொத்த பஞ்சாலைகளின் எண்ணிக்கை 56. இதில் 75 சதவிகித ஆலைகள் மும்பை மாகாணத்தில்தான் இருந்தன. அதாவது, பாம்பே பிரெசிடென்ஸி என்பது இன்றைய குஜராத் மாநிலத்தையும் உள்ளடக்கியதுதான். தனியார் தொழிற்சாலைகளுக்கு அரசு மூலதனம் வழங்க வேண்டும் என்று 1891-ல் புனே தொழில் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரும் அளவுக்கு குஜராத் தொழிலதிபர்கள் அன்றே செல்வாக்கோடு இருந்தார்கள். இந்தியத் துணிகள் மீது கலால் வரி விதிக்கப்பட்டபோது கடுமையாக எதிர்த்தவர்களும் குஜராத்திகள்தான். பாம்பே பிரெசிடென்ஸியில் இருந்த பல நகரங்கள், வளமான தொழிற்சாலைகளை வைத்திருந்தன.

இப்படிப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 1960-ல் குஜராத் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதுவரை பருத்தி வர்த்தகத்தில் பெயர் பெற்ற மாநிலமாக இருந்தது. மோடி காலத்துக்கெல்லாம் முன்பு அம்பானியின் கைங்கரியத்தால் அங்கே பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையும், குரியனின் உழைப்பால் பால் வளத்துறையும் செழித்துவந்தன. கெமிக்கல்ஸ், மருந்து மாத்திரைகள், வைரம், சிமென்ட், ஜவுளி, உப்பு... என்று பல துறைகளிலும் குஜராத் முன்னணியில் இருந்தது. இதை எல்லாம் தாண்டி பங்குச் சந்தை வர்த்தகத்திலும் குஜராத்தின் பங்கு பல படிகள் முன்னணியில் இருந்தது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் 2002-ல் குஜராத் முதல்வர் நாற்காலி மோடிக்கு வந்து சேர்ந்தது.

தொழில் ஆர்வத்தை நோக்கி மோடியைத் திருப்பியவை இரண்டு சம்பவங்கள்!

2001-ல் 20 ஆயிரம் உயிர்களை நசுக்கிய நிலநடுக்கம். 2002-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்த மதக்கலவரம். அடுத்தடுத்து விழுந்த இரண்டு மரண அடிகளால், வர்த்தகத்தையே சுவாசக் காற்றாகக் கொண்ட குஜராத் நிலைகுலைந்தது. அரசியல் சூழலால் குஜராத் மக்கள் மோடியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்தாலும்... 'மாநிலத்தில் வர்த்தகமும் தொழிலும் பழையபடி செழித்தோங்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்றுதான் ஒவ்வொரு குஜராத்தியும் மோடியைப் பார்த்து கேட்டனர்.

பி.ஜே.பி-யின் அஸ்திவாரமே 'பனியாஸ்’ எனப்படும் வணிகர்களின் ஆதரவுதான். இந்த அஸ்திவாரம் ஆடினால், ஆட்சியே ஆட்டம் காணும் என்பதுதான் நிதர்சனம். இந்த நிலையில் 'சி.ஐ.ஐ.’ எனப்படும் தொழிற்சாலைகளின் இந்திய கூட்டமைப்பு, 'சட்டமும் ஒழுங்கும் இப்படிச் சீரழிந்துபோனால் தொழில் வளர்ச்சி முடங்கிவிடும். நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? இப்படி ஒரு பெயரை வாங்கினால் வர்த்தகச் சமூகமான நாங்கள் சிதைந்து, இந்த மாநிலமே முழுமையாக முடங்கிப்போகும்’ என்ற கவலையை வெளிப்படையாகத் தெரிவித்தது. இதுதான் மோடியின் மனமாற்றத்துக்கு காரணமாக அமைந்தது. மும்பையில் நடைபெற்ற சி.ஐ.ஐ-யின் கூட்டத்தில் முதன்முதலாக மோடி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதி ஒருவர், ''நீதியும் சட்டமும் இல்லாத இடத்தில் பொருளாதாரம் வலிமையாக இருக்காது. கையில் ரத்தக்கறையுள்ளவர்களை எல்லாம் இந்தக் கூட்டத்துக்கு ஏன் அழைக்கிறீர்கள்?'' என்று முதல்வர் மோடியின் முகத்துக்கு நேராகவே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களைப் பார்த்து கோபப்பட்டார். மோடிக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியது.

மோடிக்கு ஏற்பட்ட கவலையை போக்குவதற்கு ஒருவர் வந்தார் அவர் தான் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி. இப்படியே போனால் குஜராத்துக்கும் மோடிக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த கௌதம் அதானி, தன்னுடன் தன்னைப் போலவே சிந்தனை கொண்ட நிர்மாவின் கர்சன்பாஜ் பட்டேல், கேடிலா ஃபார்மாவின் இந்திரவதன் மோடி, அஷிமா குழுமத்தின் சிந்தன் பட்டேல் போன்றவர்களைச் சேர்த்துக் கொண்டார். இவர்கள் மோடிக்கு தனியாக டியூஷன் வைத்து தொழில் முதலீட்டு பயிற்சி அளித்தார்கள். இதைத் தொடர்ந்து அதானி குழுமம் குஜராத்தில் அதிகமாக முதலீடுகளைச் செய்தது. (பெட்டிச் செய்தி காண்க!)

மோடிக்கு அப்போது அதிகமாக உதாரணம் காட்டப்பட்ட பெயர், ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு. வறட்சி ஒருபக்கமும் நக்சலைட் வன்முறை மறுபக்கமுமாக இருந்த ஆந்திராவுக்கு பில் கிளின்டன் துவங்கி பில்கேட்ஸ் வரை எல்லாரையும் அழைத்துவந்ததுடன் கோடி கோடியாக அந்நிய முதலீட்டையும் சந்திரபாபு நாயுடுவால் கொண்டுவர முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது?’ என்ற ரீதியில் மோடி சிந்தித்த வேளையில் உருவெடுத்ததுதான் 'வைபரன்ட் குஜராத்’.

2003-ம் ஆண்டு மோடி துவங்கிய இந்த முதலீடு திரட்டும் திருவிழாதான் குஜராத்தின் வளர்ச்சிக்கும் விளம்பரத்துக்கும் மட்டுமல்ல; மோடியின் வளர்ச்சிக்கும் விளம்பரத்துக்கும்கூட பாதைப் போட்டுக் கொடுத்தது. மோடியின் 'வைபரன்ட் குஜராத்’ என்கிற முதல் வைபவத்தில் 80 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது. 66 ஆயிரம் கோடிகளை முதலீடு செய்வதாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. இப்படி வாக்குறுதி கொடுத்த அனைவருமே வந்திருந்தால் குஜராத் அதிகமாக கொழித்திருக்கும். ஆனால், ஒரே வருடத்துக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட 80 பேரில் 33 பேர் பின்வாங்கிவிட்டார்கள். (2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை கையெழுத்தான திட்டங்கள் எத்தனை, அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பதற்கான புள்ளிவிரம் தனியாக பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டு உள்ளது!)

அதேசமயம், வைபரன்ட் குஜராத்தை விடவும் முதலீடுகளை இழுக்கும் முயற்சிக்கு கை கொடுத்த ஒரு விஷயம் உண்டென்றால், அது டாடாவின் நானோ தொழிற்சாலைதான். மலிவான விலையில் 1,100 ஏக்கர் நிலம், நீர், சாலைகள், தடையில்லாத சீரான மின்சாரம்... அனைத்துக்கும் மேலாக 9,750 கோடி ருபாய் கடன்... என்று அனைத்தையும் கொடுத்துதான் மோடி, டாடாவை குஜராத்துக்கு கொண்டுவந்தார். இருந்தாலும் மேடையில் பேசும்போது, 'நானோவை குஜராத்துக்கு கொண்டுவர எனக்கு ஒரே ஒரு ரூபாய்தான் செலவானது. அதாவது ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்-தான் அனுப்பினேன்’ என்ற மோடியின் பிரசாரம் குஜராத்திகளிடையே அவருக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்தது. டாடா தொழிற்சாலையை குஜராத்துக்கு கொண்டுவர தேவையான அத்தனை உரிமங்களையும் மூன்றே நாட்களில் மோடியின் அரசு தயார்செய்து கொடுத்த வேகம், நாட்டில் இருக்கும் எல்லாத் தொழிலதிபர்களின் கவனத்தையும் கவர்ந்தது. அதன் பிறகு ஃபோர்டும் மாருதியும் குஜராத்தை நோக்கி படையெடுத்தன.

இதுபோல தொழிற்சாலை கள் வரிசைகட்டி குஜராத்துக்கு செல்வதற்கு அங்கே மலிவான விலையில் நிலமும், தடையில்லாத மின்சாரமும், தேவையான அளவுக்கு நீரும், ரன்வே போன்ற சாலைகளும், அற்புதமான துறைமுகங்களும்தான் காரணம் என்று தொழிலதிபர்கள் நினைத்தார்கள். ஆனால், ஒரு அரசாங்கம் அளவுக்கு மீறி தொழிலதிபர்களுக்கு சலுகைகளை அள்ளித்தந்தால் யார்தான் தொழில் தொடங்க மாட்டார்கள் என்ற கேள்வியும் பிரதானமாக எழுந்து நிற்கிறது. உண்மையில் குஜராத் அந்நிய முதலீட்டில் எந்தளவு இருக்கிறது என்று பார்த்தால், இந்தியாவில் ஆறாவது இடத்தில்தான் இருக்கிறது. (அட்டவணை தனியாக வெளியிடப்பட்டுள்ளது)

புதிய திட்டங்களைக் கொண்டுவந்தோம், புதிய நிறுவனங்கள் குஜராத்தில் தொடங்கப்பட்டு உள்ளன, பல்லாயிரம் கோடி பணம் மாநிலத்துக்குள் வந்துபோயுள்ளது என்றெல்லாம் மோடி அரசு சொல்கிறது. ஆனால், அந்த மாநிலத்தில் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மனிதவளம் எவ்வளவு வளர்ந்தது?

குஜராத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் அதானி!

52 வயதாகும் கௌதம் அதானியின் அப்பா ஒரு ஜவுளி வியாபாரி. பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்தான் கௌதம் என்றாலும், அப்பாவின் தொழில் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு மும்பைக்குச் சென்று வைர வியாபாரிகளிடம் தரகராக வேலை பார்த்தார். கௌதமின் தொழில் திறமை அவரை எடுத்த எடுப்பிலேயே லட்சாதிபதி ஆக்கியது. அதே போல அவரது அண்ணன் மஹாஷ§க் அதானியும் பிளாஸ்டிக் வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டினார். ஒருகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து தொழிலில் குதிக்க... அதானி குழுமம் உதயமானது. ஆரம்பத்தில் பாலி வினைல் குளோரைடு எனப்படும் பி.வி.சி. உற்பத்தியில் ஈடுபட்டார் கௌதம். அதன் தொடர்ச்சியாக ஏற்றுமதி வியாபாரத்தில் கவனம் செலுத்தினார். கௌதம் தொட்டதெல்லாம் துலங்கியது. ஏற்றுமதி வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து மின்சார உற்பத்தி சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு மின்சார சாதனங்கள் இறக்குமதியாகும் முந்திரா துறைமுகத்தையே ஏற்று நடத்தும் கான்ட்ராக்ட்டையும் கௌதம் போராடி வென்றார். லட்சங்களில் தொடங்கிய அதானியின் வியாபாரம், 2000-ம் ஆண்டு 3,300 கோடி ரூபாயாக உயர்ந்தது. (மலைக்கத்தக்க வளர்ச்சி என்றாலும், மோடியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு அதானி அடைந்த வளர்ச்சி 47,000 கோடி ரூபாயாக எழுச்சி கண்டது). அம்பானியின் வளர்ச்சியோடு ஒப்பிடும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் வளர வேண்டும் என்றால், அம்பானிகளிடம் இருந்து சில பாடங்களை கற்பது அவசியம் என்பது கௌதம் அதானிக்குப் புரிந்தது. அம்பானிகளின் ஆணி வேர் அரசு ஆதிக்கம் செலுத்தும் துறைகளில்தான் வேரூன்றி இருக்கும். அதானியும் அம்பானியின் ஃபார்முலாவை பின்பற்றத் திட்டமிட்டார்.

இந்த சமயத்தில்தான் சி.ஐ.ஐ-யின் உதவி இல்லாமல் குஜராத்துக்கு அந்நிய முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும் என்று மோடி முடிவுசெய்து 'வைபரன்ட் குஜராத்’ என்ற முதலீட்டுத் திருவிழாவை 2003-ம் ஆண்டு கூட்டினார். மோடியிடம் நல்ல பெயர் வாங்க டன்லப் அல்லது ரிலையன்ஸ் ஆகிய கம்பெனிகள்தான் குஜராத்தில் பெரிய முதலீட்டை செய்வார்கள் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். அதேபோல அம்பானி 9,000 கோடி ருபாயை முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார். ஆனால், அம்பானியையே பின்னுக்குத் தள்ளும் வகையில் குஜராத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடுசெய்வதாக கௌதம் அதானி அறிவித்து மோடியின் நம்பிக்கை வட்டத்துக்குள் முன்னேறி சென்றார்.

மோடியின் ஆசீர்வாதத்தால், இன்று குஜராத்தில் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு மிகப்பெரிய மின் உற்பத்தியாளராக இருப்பது அதானி குழுமம்தான். இந்த அளவுக்கு நாட்டில் வேறு எந்த தனியார் நிறுவனமும் மின் உற்பத்தி செய்ய இன்றுவரை அனுமதிக்கப்படவில்லை. அதானியிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 2.89 காசுக்கு குஜராத் மின்வாரியம் வாங்குகிறது. ஆனால், அதே குஜராத் மின்வாரியம் டாடாவிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 2.26 காசுக்குத்தான் வாங்குகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் வித்தியாசம் காசுகளில்தான். ஆனால், நயா பைசா வித்தியாசத்தினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1,347 கோடி ரூபாய் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இழப்பு அரசுக்கு என்றால், லாபம் அதானிக்குத்தானே. இதேபோல சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் கட்ச் பகுதியில் 7,000 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலத்தை குஜராத் அரசிடம் இருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுத்திருக்கிறது அதானி குழுமம். தான் எடுத்த குத்தகை தொகையைவிட 20 மடங்கு அதிகமான தொகைக்கு அதானி குழுமம் மற்ற கம்பெனிகளுக்கு இந்த நிலத்தை 'உள் குத்தகைக்கு’ விட்டுள்ளது.. அதேபோல குஜராத் வீதிகளில் ஓடும் பல வாகனங்கள் சி.என்.ஜி-யில் ஓடுவதுதான். இந்த எல்லா வாகனங்களுக்கும் சி.என்.ஜி. எரிபொருளை விநியோகிப்பதும் அதானி குழுமம்தான். சமையல் எண்ணெய் தொடங்கி நிலக்கரி இறக்குமதி வரை, ரியல் எஸ்டேட் தொடங்கி சோலார் பூங்காக்கள் வரை... குஜராத்தையே ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருப்பதைப்போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அதானி குழுமம்.

எப்போதும் முன்னிலையில் இருக்கும் தொழில்கள்!

அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு யுத்தத்துக்கும் குஜராத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டு. கறுப்பர் இனத்தவரை அடிமைகளாக நடத்தும் முறையை முன்வைத்து 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற பிரிவினை யுத்தத்தால்... அமெரிக்காவில் பல பஞ்சாலைகள் மூடப்பட்டன. அதனால், ஐரோப்பாவின் தேவையை பூர்த்திசெய்ய மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஏராளமான பஞ்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 'மான்செஸ்டர் ஆஃப் தி ஈஸ்ட்’ என்று குறிப்பிடப்படும் குஜராத்தில் ஜவுளித் துறை உச்சத்தில் இருந்த 1974-ம் வருடம், 74 பஞ்சாலைகள் செயல்பட்டன. அரவிந்த் மில், அஷிமா டெக்ஸ்டைல்ஸ், சோமா டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல தொழிற்சாலைகள் இருக்கும் குஜராத் ஜீன்ஸ் உற்பத்தியில் உலகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை என்ற பெருமை, ஜாம் நகரில் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு உண்டு. இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் எஸ்ஸார் குழுமம் குஜராத்தில் இரு உருக்காலையும் நடத்திவருகிறது.