அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் ஒவ்வொன்றாக உதிர்ந்தாலும், கடைசி வரை கூட்டணியில் தொடருவோம் என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''இந்தத் தேர்தலில் எதை முன்நிறுத்தி வாக்கு கேட்பீர்கள்?''

''மத்திய அரசில் மாநிலங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைப்பதில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்பார்த்தே மாநில அரசுகள் இருக்க வேண்டியுள்ளது. இதனால் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் தமிழகம் அங்கம் வகிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் முழுமையான வளர்ச்சி பெறும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். அதைத்தான் வலியுறுத்துவேன்.''

''அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், புதிய தமிழகம், ம.ம.க. உள்ளிட்ட கட்சிகள் விலகி விட்டதே?''

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தே.மு.தி.க.,

புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, ச.ம.க. ஆகியவை இருந்தன. இப்போது ச.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. கூட்டணியில் இடம் பெற்றால் ஐந்து ஆண்டுகள் அதில் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. சந்தர்ப்பவாதத்தால் கூட்டணிக் கட்சிகள் பிரிந்துவிட்டன. ஆனால், மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை நம்பி இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடுவது பாராட்டுதலுக்குரியது. அ.தி.மு.க. வெற்றிக்கு ச.ம.க. உறுதுணையாக இருக்கும். இந்தக் கூட்டணியில் கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறோம்.''

''கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?''

''சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த், அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருந்து விலகியபோது அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் ராஜினாமா செய்யச்சொல்லி தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். தனித்து நின்று இருந்தால் விஜயகாந்த்தின் செல்வாக்குத் தெரிந்திருக்கும்.''

''அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ச.ம.க. ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை?''

''கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியபோது ச.ம.க-வுக்கு நிச்சயம் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருந்தது. எதிர்பார்ப்புகள் இருக்கும் இடத்தில்தான் ஏமாற்றமும் இருக்கும். எதிர்காலத்தில் நல்லது நடக்கும்போது ஏமாற்றங்கள் மறைந்துவிடும். மக்களுக்குச் சேவை செய்யவே இந்தக் கூட்டணியில் தொடர்கிறோம்.''

''தமிழகத்தில் அ.தி.மு.க. அதிகமான இடங்களில் வெற்றிபெற்று பி.ஜே.பி-க்கு ஆதரவு கொடுக்கும் நிலை வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?''

''அப்படியரு நிலை ஏற்படும்போது அந்த முடிவை முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே எடுக்க முடியும். ஏனெனில் இந்தத் தேர்தலில் ச.ம.க. போட்டியிடவில்லை.''

''காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?''

''காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தனித்துப் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸின் செல்வாக்கு தெரிந்துவிடும். தோல்வி பயத்தில்தான் ப.சிதம்பரமும் ஜி.கே.வாசனும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியினருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது.''

''எதிரணியில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

''மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. குறிப்பாக 2ஜி, காமன்வெல்த் என ஊழல் பட்டியலை அடுக்கலாம். இந்த ஊழலுக்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. எனவே இந்தத் தேர்தலில் காங்கிரஸையும். தி.மு.க-வையும் மக்கள் நிச்சயமாக ஒதுக்குவார்கள். சந்தர்ப்பவாதத் தலைவர் விஜயகாந்த். தேர்தலில் கூட்டணி அமைக்க காங்கிரஸ், பி.ஜே.பி-யுடன் வியாபாரி போல பேரம் பேசினார். பி.ஜே.பி-யை விமர்சிக்க ஒன்றும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் அந்தக் கட்சி இல்லை. மோடி என்ற இமேஜை வைத்து பி.ஜே.பி-யினர் இந்தத் தேர்தலை சந்திக்கின்றனர்.''

''பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி அதற்குத் தகுதியானவரா?''

''குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றவர் மோடி என்பதில் சந்தேகமில்லை. அதனால் குஜராத்தில் செய்ததை இந்தியா முழுதும் செய்ய முடியுமா? இந்தத் தேர்தலில் எதிரணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி வீக்காக உள்ளது. அந்தக் கட்சியில் பிரதம வேட்பாளராகக் கருதப்படும் ராகுல் காந்தியை ஒப்பிடும்போது மோடி சிறந்தவர். அதே நேரத்தில் தெற்கில் மோடிக்கு நிகரானவர் ஜெயலலிதாதான். தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது அணி உருவாகி, தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது நிச்சயம் ஜெயலலிதாவுக்குத்தான் பிரதமராகும் தகுதி உண்டு.''

''தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு அ.தி.மு.க-வுக்கு சாதகமாக அமையுமா?''

''மு.க.அழகிரிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, இல்லையோ... அந்தக் கட்சியில் ஏற்பட்டுள்ள விவகாரம் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக அமையும். கருணாநிதியின் சொந்த மகனே எதிராக இருப்பது தி.மு.க-வுக்குப் பலவீனம்தான்!''

- எஸ்.மகேஷ், படம்: ஆ.முத்துக்குமார்