'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண்

இளைப்பில்லை காண் என்று கும்மியடி’- என அந்தக் காலத்திலேயே பாரதி பாடி வைத்திருந்தாலும், தமிழகத்தில் உள்ள முக்கிய நான்கு கூட்டணிக் கட்சிகளிலும் (காங்கிரஸும்தான்!) சேர்த்து ஒன்பது பெண்களுக்குத்தான் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. என்ன சொல்கிறார்கள் அந்த நவரத்தினங்கள்?

தி.மு.க. சேலம் - உமாராணி:

'எங்க அப்பா தி.மு.க-வில் இருந்ததால் எனக்கும் சின்ன வயசுல இருந்தே கலைஞர் மீது ஈடுபாடு இருந்தது. இப்போ காலத்துக்கு ஏற்றதுபோல எங்கள் தளபதி புதுமை படைக்கிறார். 1996-ம் வருஷத்துல நான் சேலம் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தேன். அரசியல் ஒருபக்கம் இருந்தாலும், ஆதரவற்றக் குழந்தைகள், பெண்களுக்கான இல்லம் என்று தொடர்ந்து என்னால் முடிந்த சேவைகளை செய்துவருகிறேன். 'என் குடும்பம்... என் குழந்தைகள் என்று சுயநலமாக வாழ்வது வாழ்க்கை இல்லை. மத்தவங்களுக்காக வாழணும்’னு எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு. அதைத்தான் நான் செஞ்சிட்டு இருக்கேன். என் ஊரு நிச்சயம் என்னை ஜெயிக்க வைக்கும்!''

ஈரோடு - பவித்திரவள்ளி:

'நான் அரசியலுக்கு வருவதற்கு காரணமே பெரியாரும், பாரதியாரும்தான்! அவங்களைப் பத்தி நிறைய படிச்சிருக்கேன். இன்னொரு முக்கியக் காரணம், சினிமா. 'இந்தியன்’, 'முதல்வன்’ படத்தைப் பார்த்துட்டு இதுபோல நானும் ஊழல் இல்லாம மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சேன். இப்போ அதுக்கு காலம் கனிஞ்சு வந்திருக்கு. எங்க மாமியார், மாமனார் எல்லோருமே தி.மு.க-காரங்க. பல போராட்டத்துல ஜெயிலுக்குப் போயிருக்காங்க. நான் எம்.பி. ஆனால், எல்லாப் புகழும் என் மாமியாருக்குத்தான்!''

அ.தி.மு.க. திருப்பூர் - சத்தியபாமா:

'எனக்கு சின்ன வயசுல சோறுகூடவே அரசியலையும் சேர்த்துதான் ஊட்டினாங்க. அந்த அளவுக்கு அ.தி.மு.க. வெறிப்புடிச்ச குடும்பம் எங்களோடது. எங்க குடும்பம்தான் அப்படின்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்த வீடு... அவங்களும் பரம்பரை பரம்பரையா அ.தி.மு.க-தான்! அப்புறம் கேட்கவா வேணும். கல்யாணம் ஆனதுமே கவுன்சிலரானேன். என்னோட பகுதிக்கு நிறைய நல்லது செஞ்சேன். கட்சிப் போராட்டம்னா முதல் ஆளா நிற்பேன். அதுதான் இப்போ என்னை நாடாளுமன்ற வேட்பாளராக்கியிருக்கு. என் காலம் உள்ளவரை புரட்சித்தலைவி அம்மாவுக்கு விசுவாசமா இருப்பேன்.''

காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்:

'எம்.ஜி.ஆர். காலத்துல இருந்தே எங்க குடும்பமே அ.தி.மு.க-தான். எங்க தாத்தா, அப்பா எல்லோருமே கட்சியில சின்னச் சின்ன பதவியில இருந்தவங்க. அம்மாவோட கொள்கை பிடித்துதான் நான் கட்சியில சேர்ந்தேன். அம்மாவைப் பார்த்துதான் நான் அரசியலைக் கத்துகிட்டேன். இப்போ எனக்கு வயசு 29 தான் ஆகுது. அதுக்குள்ள ஒன்றிய கவுன்சிலர், யூனியன் சேர்மன் என்று இரண்டு முறை பதவிக்கும் வந்துட்டேன். அம்மாவோட ஆசீர்வாதத்துல அடுத்து டெல்லிதான்!''

திருவண்ணாமலை - வனரோஜா:

'எங்க வீட்டுக்காரரு எம்.ஜி.ஆர். காலத்துலயே ஒன்றிய செயலாளரா இருந்தவரு. 1989-ம் வருஷத்துல செங்கம் தொகுதி பிரசாரத்துக்கு அம்மா வந்தாங்க. அப்போ நான்தான் அவங்களுக்கு ஆரத்தி எடுத்தேன். அப்போ அம்மாவைப் பக்கத்துல பார்த்து அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சி. எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டு நானும் கட்சியில சேர்ந்துட்டேன். அப்போ இருந்து கட்சிக்காகவே உழைச்சிட்டு இருக்கேன். ஜெயிலுக்கெல்லாம்கூட போயிட்டு வந்திருக்கேன். இதெல்லாம் அம்மாவுக்கே தெரியும். இந்தமுறை அம்மாவே என்னை தனியா கூப்பிட்டுப் பேசிதான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அம்மாவோட சாதனைகளுக்காகவே மக்கள் என்னை ஜெயிக்க வைப்பாங்க.''

தென்காசி - வசந்தி முருகேசன்:

'நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாமே மும்பைலதான். எனக்கு எம்.ஜி.ஆருன்னா உசிரு. அதனாலதான் கட்சியில சேர்ந்தேன். தலைவருக்குப் பிறகு எல்லாமே அம்மாதான்! கட்சியில எந்தக் கூட்டம் நடந்தாலும் குடும்பத்தோட போயிடுவேன். அதைப் பார்த்துதான் எனக்கு அம்மா மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தாங்க. அப்புறம் பொதுக்குழு உறுப்பினராக்கினாங்க. எனக்கு முகவரி கொடுத்தது அம்மாதான். பாரதி கண்ட புதுமைப் பெண் எங்க அம்மா ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து மாற மாட்டாங்க. யாருக்கு அந்த தைரியம் இருக்கு சொல்லுங்க. அம்மாவை எனக்கு ரொம்ப... ரொம்பப் பிடிக்கும்.''

காங்கிரஸ் கரூர் - ஜோதிமணி:

'21 வயசுல என் அரசியல் பயணம் ஆரம்பிச்சுது. எங்க கிராமத்துல இருந்த தலித் காலனி மக்களை பொது பைப்ல தண்ணீர் எடுக்க விடாம ஆதிக்க சாதியினர் தடுத்தாங்க. அந்த மக்களுக்காக நானே களத்தில் குதித்துப் போராடினேன். அன்று தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் என்னை இன்று மகளிர் காங்கிரஸ் தேசிய செயலாளர் வரை உயர்த்தியுள்ளது. என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்யவே விரும்புகிறேன். அதனால்தான் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விருப்பமே இல்லாமல் போனது. கரூர் மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அது என்னை ஜெயிக்க வைக்கும்!''

திருச்சி - சாருபாலா தொண்டைமான்:

'தலைவர் மூப்பனாரைப் பார்த்துதான் நான் அரசியலுக்கு வந்தேன். திருச்சி மேயராக இருந்து மக்களுக்கு நிறையவே நல்லது செய்திருக்கிறேன். அரசியலில் என் கணவர் தலையீடு எனக்கு எப்போதுமே இருந்தது இல்லை. நான் சுதந்திரமா செயல்படுகிறேன். நான் ஒரு நல்ல நிர்வாகி என்பது திருச்சி மக்களுக்குத் தெரியும். இந்த நேரத்துல காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்பதைப் பெருமையா நினைக்கிறேன். திருச்சி மக்கள் நிச்சயம் என்னை டெல்லிக்கு அனுப்புவாங்க!''

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட சென்னை - உ.வாசுகி:

'நான் கம்யூனிஸ்ட் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ப்பதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். எத்தனையோ கம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்துபோன வீடு எங்களுடையது. எனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக கட்சிப் பணியாற்றி வருகிறேன். பெண்களுக்கு எதிரான அநீதி களுக்காகத் தொடர்ந்து போராடிவருகிறேன். கட்சியில் எப்போதும் பிரசாரக் குழுவில்தான் இருப்பேன். இப்போதுதான் முதல் முறையாகப் போட்டியிடுகிறேன். களப்பணியின் ஒரு களமாகத்தான் இந்த தேர்தலை சந்திக்கிறேன்!''

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், எம்.விஜயகுமார், ரமேஷ் கந்தசாமி, கா.முரளி