'நம்ம கடை வீதி கலகலக்கும்... என் அக்கா மக... அவ நடந்து வந்தா...’ என ஹைடெசிபலில் விஜயகாந்த் ஹிட் பாடல்களைப் போட்டு பாரிமுனையில் அலறவைத்தபடி இருந்தனர் தே.மு.தி.க-வினர். விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவின் பிரசாரத்துக்குத்தான் இந்தக் கட்டியம்!

அங்கு பிரேமலதா 4 மணிக்கு பிரசாரத்துக்கு வருவதாக அறிவித்திருந்தனர். ''இதோ நம் அண்ணியார் வந்துகொண்டிருக்கிறார். இதோ பக்கத்தில் வந்துவிட்டார். இதோ 10 நிமிஷத்தில் நம் முன் இருப்பார்’ என கூட்டத்தைக் கலைய விடாமல் மைக்கில் அலறியபடி இருந்தாலும், அண்ணியார் மக்கள் முன் ஆஜரானதோ சரியாக இரவு 8 மணிக்குதான். பிரசார வேனில் இருந்து லிஃப்ட் மூலம் மக்கள் முன் எட்டிப்பார்த்த பிரேமலதாவிடம், வேனின் கீழே இருந்தவாறே பெரிய சைஸ் மாலையைக் கொடுக்க... அசால்ட்டாக வாங்கி தனக்குத் தானே மாலையை அணிவித்துக்கொண்டு மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் ரவீந்திரனை ஆதரித்துப் பேசத் தொடங்கினர்.

''இந்தக் கூட்டணியினர் நரேந்திர மோடி தலைமையில் மாபெரும் வெற்றிபெற இருக்கின்றனர். இது மாபெரும் கூட்டணி. தமிழக மக்கள் விரும்பிய கூட்டணி. என் சகோதர சகோதரிகளுக்கு நான் இப்ப ஒன்று சொல்லணும். தி.மு.க-வையோ அ.தி.மு.க-வையோ திட்டி குறைசொல்லி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை'' என்று நிறுத்தியவர், கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு கட்சிகளையுமே நான்ஸ்டாப்பாக திட்டத் தொடங்கினார்.

''நமக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் படித்தவர்கள். வல்லவர்கள். இன்னைக்கு உலக நாடுகள் முழுவதும் போயிட்டு வர்றீங்க. இன்டர்நெட், ஃபேஸ்புக் இருக்கு... டிவிட்டர் இருக்கு. எத்தனையோ விதமான திட்டங்கள் நம்ம நாட்டின் கையில் இருக்கு. ஆனால், அதை வைத்து உங்களுக்கு என்ன செய்து இருக்கிறார்கள்? நம்ம நாடு எந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்று உங்களுக்கும் தெரியும். இதற்கு முன், மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இந்தத் தொகுதிக்கு என்ன செய்து இருக்கிறார்? ஒண்ணுமே செய்யலைன்னு மக்கள் எல்லோரும் கம்ப்ளைன்ட் பண்றாங்க. அதற்கு முன் அவர் அப்பா எவ்வளவோ வருஷம் இருந்தாரு... இன்று மகன் இருக்கிறாரு... ஆனால், மத்திய சென்னை இன்று வரை எந்த டெவலப்மென்ட்டும் ஆகலை.

அ.தி.மு.க. மூன்று ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தும், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றலை என்றுதான் மக்களே நீங்க சொல்றீங்க. குடிதண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கும் அவல ஆட்சிதான் இந்த ஜெயலலிதாவின் மோசமான ஆட்சி. தமிழ்நாட்டுல எந்தவித முன்னேற்றமுமே இல்லை. டாஸ்மாக் கடைகளைத் திறந்து வெச்சு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் பார்க்கிறார்கள். டாஸ்மாக் சரக்குக்கு சைட்டிஷ் கடைகளாக அம்மா உணவகத்தைத் திறந்து இருக்காங்க. இதுதான் இவர்கள் செய்த சாதனை. இவங்க ஆட்சி நடத்துறாங்களா... இல்லை, பிசினஸ் வுமன் ஆகிட்டாங்களான்னே தெரியலை.

அதுமட்டும் இல்லாமல், 10-ல் இருந்து 15 மணி நேர மின்வெட்டுதான் இவர்கள் செய்த மற்றொரு சாதனை. மோடி எங்களிடம் 'நான் பிரதமானால் தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை விரைவில் கொண்டு வருவேன்’ என சொல்லியிருக்கார்.

அடுத்து உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். அலெக்ஸாண்டர் என்ற மாமன்னர் இருந்தார். உலகம் முழுவதையும் கைப்பற்றினார். அவரு இறக்கும் காலத்துல, 'நான் இறந்த பிறகு என்னுடைய சவப்பெட்டியில் கை மட்டும் வெளியே தெரியும்படி வையுங்கள்’ என்றார். 'இந்த உலகத்தை விட்டு நான் செல்லும்போது என் கைகளில் எதுவும் இல்லை; யாருடைய பணத்தையும் கொள்ளையடிக்கவில்லை. சிறந்த முறையில் ஆட்சி செய்துவிட்டு வெறும் கைகளோடு செல்கிறேன். இதை என் மக்களுக்கு உணர்த்த வேண்டும்’ என்று அவர் கைப்பட கடிதம் எழுதி வைத்திருந்தார். இவ்வளவு பெரிய சக்கரவர்த்தியாக வாழ்ந்தவர் வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கேப்டனும் இவரைப் போன்றவர்தான். லஞ்சம், ஊழலுக்கு அப்பால் ஒரு ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே லட்சியம். அதனால், நீங்கள் முரசுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். முரசுக்கு வாய்ப்பு தருவீர்களா? முரசு சின்னத்தில் வாக்கு அளிப்பீர்களா? ரவீந்தரனை எம்.பி. ஆக்கிவீர்களா? மோடியை பிரதமர் ஆக்குவீர்களா?' என பல கேள்விகளைக் கேட்க... ''செய்வோம்... செய்வோம்!'' என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்