''தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களில் 50 முதல் 60 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால், அவற்றை நிறைவேற்ற ஜெயலலிதா அக்கறைகாட்டவில்லை'' என்று புள்ளிவிவரப் புலியாகப் பேசுகிறார் ஸ்டாலின். திருவள்ளூர், கோவை, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளில் அவருடைய பேச்சுக்கு அமோக வரவேற்பு.

40 தொகுதிகளுக்கு 40 நாட்கள்... இதுதான் மு.க.ஸ்டாலினின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார வியூகம். மார்ச் 14-ம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட பாதி பிரசாரத்தை முடித்துவிட்டார் ஸ்டாலின். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 10 இடங்களிலாவது வேனில் இருந்தபடி பிரசாரம். ஒரு இடத்தில் மேடை அமைத்து பொதுக்கூட்டம் என 40 தொகுதிகளுக்கும் பிரசாரப் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படியே செயல்படுத்தியும் வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கி, கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராக வேனில் சுற்றி, தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு இடத்திலும் பிரசாரம் செய்வதற்கு முன்னரே அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகள், அ.தி.மு.க-வினர் மீதான புகார் குறித்த விவரங்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு தமிழக அரசியலோடு உள்ளூர் பிரச்னைகளையும் பேசி, உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்துகிறார் ஸ்டாலின்.

'தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலர் மக்களைச் சந்திப்பர். தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் மக்களைத் தேடி வரும் இயக்கம் தி.மு.க-தான்'' என தனது வழக்கமான பாணியில் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

தி.மு.க. கூட்டணியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடந்த 25-ம் தேதி மாதவரத்தில் தொடங்கி ஒரு ரவுண்டு வந்த ஸ்டாலினை நாமும் பின்தொடர்ந்தோம்.

''பெங்களூரில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்க வாய்தா மேல் வாய்தா வாங்கித் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஜெயலலிதா. இனி அவர் தப்பிக்க வாய்ப்பில்லை. மத்தியில் நிலையான, நேர்மையான, நியாயமான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும். கலைஞர் யாரைச் சுட்டிக்காட்டுகிறரோ அவர்தான் பிரதமராக வருவார். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர் கலைஞர். ஆனால், தேர்தல் சமயத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பவர் ஜெயலலிதா. எல்லா தொகுதிக்கும் அவர் செல்வது இல்லை. பறந்துதான் வருவார்.

மக்களைப்பற்றி சிந்திக்க மாட்டார். யானைகளைப்பற்றி கவலைப்படுவார். தேர்தல் பிரசாரத்தில் ஹெலிகாப்டரில் செல்லும் ஜெயலலிதாவுக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு? அந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களும் வேட்பாளர்களும் தொண்டர்களும் வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்துக் கும்பிடுகின்றனர். சிலர் தரையோடு தரையாகப் படுத்து வணக்கம் செலுத்துகின்றனர். வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டருக்கு போலீஸார் இங்கு ஓவர், ஓவர் என்று கமாண்ட் கொடுக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களைப் பார்த்து 'ஓட்டு போடுவீர்களா... செய்வீர்களா’ என்று கேட்கிறார் ஜெயலலிதா. குடிநீரை இலவசமாகக் கொடுப்பது அரசின் கடமை. ஆனால் இந்த ஆட்சியில்தான் குடிநீரை விற்கும் கேவலமான நிலை உள்ளது. ஜெயலலிதாவால் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?'' என்றார்.

பெரியபாளையத்தில் தேர்தல் பிரசார பேச்சுடன், ''போலீஸ்காரர்கள் ஜெயலலிதா மீது கடுப்பாக இருக்கிறார்கள். இவருடைய பிரசார பாணியில் அதிகம் பாதிக்கப்படுவது போலீஸார்தான். பிரியாணிக்கும் குவாட்டருக்கும் ஜெயலலிதா பிரசாரக் கூட்டத்துக்கு ஆட்கள் கூடுகிறார்கள். ஆனால் இங்கு யாரையும் அப்படி அழைத்து வரவில்லை'' என்றார்.

27-ம் தேதி கோவைக்குச் சென்றவர், அங்கும் வெளுத்து வாங்கினார். ''தமிழகத்தில் நடந்துவரும் அ,தி.மு.க. ஆட்சி, பொறுப்பேற்கும் முன்னர் எத்தனையோ வாக்குறுதிகளைத் தந்தது. ஆனால் இன்று என்ன நிலை? சொன்னது எதையும் அவர் செய்யவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்கும்போது மின் தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார். இன்று மின்சாரமே இல்லாத மாநிலமாகத் தமிழகம் மாறியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இரண்டு மணி நேர மின்வெட்டு இருந்தது. ஆனால், இப்போது 10 மணி நேரம், 14 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறதே. இரண்டு மணி நேரத்துக்கே தி.மு.க-வுக்குத் தண்டனை கொடுத்தீர்கள். அப்படி என்றால் 14 மணி நேர மின்வெட்டுக்கு உரிய தண்டனையை நீங்கள் தந்துவிட வேண்டும்.

ஜெயலலிதா மக்களை சந்திப்பதே கிடையாது. யாரைச் சந்திக்கிறார். மிஞ்சிப்போனால் யானையைச் சந்திக்கிறார். அதுவே மக்களை சந்திக்காமல் என்னை ஏன் சந்திக்க வருகிறாய் என கோபத்தில் முட்டி இருக்கிறது. ஐந்தறிவு படைத்த யானையே முட்டுகிறது என்றால், நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சரியான பாடத்தை வழங்க வேண்டும்.

இரட்டை இலை படம் பொறித்த தண்ணீர் பாட்டிலை தடைசெய்யச் சொன்னோம். 'அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. அனைவரும் கையை வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்’ என்கிறார் ஜெயலலிதா. நீங்கள் ஜடையில், ரிப்பனில், காதில், கழுத்தில் எங்கு வேண்டுமானாலும் இரட்டை இலையை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், மக்கள் வரிப்பணத்தில் இரட்டை இலை சின்னம் வைக்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன். மூன்று முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இது தெரியவில்லையே என்று வருந்துகிறேன்.

தேர்தல் பிரசாரத்தில் கலைஞரை, தி.மு.க-வை விமர்சிக்கும் ஜெயலலிதா, பாரதிய ஜனதாவையோ, மோடியைப் பற்றியோ விமர்சித்துப் பேசுவது இல்லையே... அது ஏன்? இருவருக்குள்ளும் கூட்டுச் சதி இருக்கிறது. இது தேர்தல் முடிவுகளுக்குப் பின் அம்பலமாகும். பாபர் மசூதியை இடித்துத் தள்ளியபோது கலைஞர்தான் குரல் கொடுத்தார். அப்போது கரசேவையை ஆதரிக்கிறேன் என்று கூறியவர்தான் ஜெயலலிதா.

ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்த மத்திய அரசை கண்டிக்கிறோம்'' என்றார்.

பிரசாரத்தின்போது பல இடங்களுக்கு துணையாக வரும் ஸ்டாலினின் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரும் பிரசார வேனிலேயே இடம் பிடிக்கின்றனர். சில சமயங்களில் மட்டும் தனி காரில் வலம் வருகின்றனர்.

சுட்டெரிக்கும் பங்குனி வெயில், உணவு, தூக்கம் என எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றிவருகிறார் ஸ்டாலின். ''ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் ஜெயலலிதா, கூட்டத்தினரைப் பார்த்து, 'செய்வீர்களா? செய்வீர்களா?’ என்று கேள்வி எழுப்புகிறார். அவரைப் பார்த்து 'நீங்கள் சொன்னதையெல்லாம் செய்தீர்களா... செய்தீர்களா?’ என்று கேட்க வேண்டும்'' என ஸ்டாலின் ஆக்ஷனுடன் பேசும்போது மக்களிடம் அத்தனை ஆரவாரம்.

தி.மு.க-வினருக்கு ஸ்டாலினின் பேச்சுதான் இப்போதைக்கு டானிக்!

- ச.ஜெ.ரவி, எஸ்.மகேஷ்

படங்கள்: தி.விஜய், ஜெ.வேங்கடராஜ், ர.சதானந்த்