''அழகிரி அவஸ்தை கருணாநிதியை மனநிம்மதி இல்லாமல் அடிக்க ஆரம்பித்து உள்ளது'' என்றபடி நம்முன் ஆஜரானார் கழுகார்!

''அழகிரி மதுரையில் இருந்ததுவரை கருணாநிதி அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊர் ஊராகப் போய் தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக அழகிரி குற்றச்சாட்டு அம்புகளை வீசுவதைப் பார்த்து கருணாநிதி வெம்பிப் போய்விட்டார். அதுவும், அழகிரியின் தஞ்சாவூர் பயணம் கருணாநிதி மனதை அதிகமாகப் பாதித்துவிட்டது!''

''தஞ்சாவூரில் இருந்தே ஆரம்பியும்!''

''தனது நீண்ட நாள் நண்பரான, தஞ்சை ஆர்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரனின் திருமண வெள்ளி விழாவில் பங்கேற்பதற்காகத்தான் தஞ்சாவூர் வந்தார் அழகிரி. அவர் வருகிறார் என்பது தெரிந்து ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குழுமிவிட்டார்கள்.

மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.அழகிரி முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்திருக்கிறார். 'தஞ்சாவூர் எனக்குப் புதிது அல்ல. 1962-ல் நான் தலைவருக்காக இங்கு வீதி வீதியாக ஓட்டுக் கேட்டிருக்கிறேன். பக்கத்தில் உள்ள திருவாரூரில்தான் நான் பிறந்தேன். உங்கள் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழக¤ரி பெயரைத்தான் தலைவர் எனக்கு வைத்திருக்கிறார்’ என்று சொல்லிவந்தவர், அடுத்து உஷ்ணம் ஆனார். 'என்னை ஆதரித்து போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இது தப்பா? இதற்காக கட்சியைவிட்டு நீக்கினார்கள். என்னை ஆதரிக்கிற உங்களுக்காகத்தான் நான் நியாயம் கேட்டேன். என்ன செய்வது? இப்படியொரு சித்ரவதையை அனுபவிக்க வேண்டியுள்ளது. இப்படியொரு தலைவிதி இருந்திருக்கிறது. என்ன செய்வது?’ என்று விரக்தியில் பேசினார். இதனை, கட்சிக்காரர்களே எதிர்பார்க்கவில்லை. 'கட்சியைக் காப்பாத்தணும்; கலைஞரைக் காப்பாத்தணும். அதுதான் இப்ப முக்கியம். தலைவர் பதவியோ, பொருளாளர் பதவியோ, பொதுச் செயலாளர் பதவியோ நான் கேட்கவில்லை. அந்தப் பதவியெல்லாம் எனக்கு என்றைக்குமே வேண்டாம். கலைஞர் இல்லை என்றால், கட்சி இல்லீங்க. கலைஞர் சாகா வரம் பெற வேண்டும். அதுதான் என்னோட ஆசை. அவரை ஜெயில்ல போட்டுட்டு, நாம கட்சியைப் பிடிக்கணும்னு சிலர் நினைக்கிறார்கள். அறிவாலயம் இவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அது உங்களுக்கும் சொந்தம்; எனக்கும் சொந்தம். அதுக்காக நானும் நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறேன். தி.மு.க-வில் ஜனநாயகம் செத்துப் போச்சுங்க’ என்று கொந்தளித்தவர், அடுத்ததாகத்தான் தஞ்சை அரசியலுக்கு வந்தார்!''

''ம்!''

''தஞ்சாவூர் தொகுதியைக் கைப்பற்றுவதில் டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகிய இருவருக்கும் இருந்த மோதலைப் போட்டு உடைத்தார் அழகிரி. 'தி.மு.க-வில கட்சிக்கு உழைத்தவனுக்கு சீட் இல்ல. இங்க தஞ்சாவூரில் பழன¤மாணிக்கம் இல்லை என்றால், வேறு யாருமே தி.மு.க-வில் கட்சிக் காக உழைச்சவன் இல்லையா? 35 வருஷமா கட்சிக்காக உழைச்சவனுக்கு சீட் இல்லை. அதைக் கேட்டா, என்னை தப்பானவன் என்று சொல்கிறார்கள். கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு தஞ்சாவூர் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்குப் பெரும் பங்கு உண்டு. தனக்கு மந்திரி பதவி இல்லை என்றதும், திட்டம் போட்டு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியைப் பிரித்ததே டி.ஆர்.பாலுதான். அவரால் மாவட்டச் செயலாளர்கூட ஆக முடியவில்லை. எங்ககிட்ட கெஞ்சினார்... நானும் என் தம்பி ஸ்டாலினும்தான் தலைவர் கலைஞரிடத்தில் சொல்லி மா.செ. ஆக்கினோம். இப்ப எப்படி தேர்தல்ல ஜெயிக்க போறார்ன்னு பார்ப்போம். அவருக்கு என்ன கலைஞர், எம்.ஜி.ஆருன்னு நினைப்பா? நினைச்ச இடத்தில தேர்தல்ல நிக்குறத்துக்கு? ஸ்ரீபெரும்புதூரில் மக்களுக்காக திட்டங்களை ஒழுங்கா செய்திருந்தால், அங்கே நின்னு ஜெயிக்க வேண்டியதுதானே. எதுக்கு தஞ்சாவூருக்கு வர்றார்? இவர் மகன் மன்னார்குடி எம்.எல்.ஏ-வா இருப்பதால் ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாரா? என்னோட ஆதரவாளர்களாகிய உங்களை நான் கேட்கிறேன். என்ன வழியோ... நாம மேல வரணும். அதுக்காக ஆதரவு கேட்கிறேன். சிந்திக்க வேண்டும். சிந்திப்பீர்களா... சிந்திப்பீர்களா?’ என்று கேட்டார் அழகிரி. 'அந்த அம்மா மாதிரி கேட்கிறேன்னு நினைக்கிறீங்களா?’ என்றும் அழகிரி சொல்லிக்கொண்டார். அதாவது, 'டி.ஆர்.பாலுவைத் தோற்கடியுங்கள்’ என்று அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்டதாக தஞ்சை தி.மு.க-வில் சொல்கிறார்கள்.

கும்பகோணத்தைச் சேர்ந்த கதிரவன் பாலு, புதுக்கோட்டை மாவட¢டம் குன்னண்டார்கோவில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் அன்புச்செல்வன், திருவாரூர், நாகப்பட்டினத்தில் இருந்து வந்த தி.மு.க. தொண்டர்கள் அழக¤ரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 'அண்ணன் புரிஞ்சிச்சுங்களா... சிந்திப்பீர்களா என்று கேட்டது எல்லோருக்கும் நன்றாகவே புரிந்துவிட்டது. அண்ணனைக் கட்சியை விட்டு நீக்கியதில் டி.ஆர்.பாலுவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால், தஞ்சையில் ஏதாவது நிகழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டும் என்ற முடிவில்தான் நண்பரின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். அவருடைய ஆதரவாளர்களாகிய நாங்கள் நிச்சயம் அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவோம்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அழகிரியின் அடுத்த பயணம் காரைக்குடி முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் துரைராஜ் பேத்தி காதணி விழா. அந்த நிகழ்ச்சியும் இதுபோன்று தி.மு.க-வின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாகவே இருக்கும் என்கிறார்கள். 'நானும் தலைவர் மகன்தானே... தலைவரைத் தேர்ந்தெடுத்த தஞ்சையில் எனக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க கிளம்பியவர், டி.ஆர்.பாலுவுக்கு எதிராக பிரசாரத்தை முடுக்கிவிட்டுச் சென்றுள்ளார். பி.ஜே.பி. வேட்பாளர் முருகானந்தத்துக்கு போனில் ஆதரவு சொல்லிவிட்டுக் கிளம்பினார்’ என்றும் சொல்கிறார்கள். அவரது பயணம் தேர்தல் வரைக்கும் இப்படியே தொடர்ந்தால், கட்சிக்கு பெரிய சிக்கல் என்று நினைக்கிறாராம் கருணாநிதி!''

''ஓஹோ!''

''கருணாநிதி, 'அழகிரியைச் சமாளிப்பதே பெரிய விஷயமாக இருக்கும்போது ஜெயலலிதாவை எங்க எதிர்க்கிறது?’ என்று அவநம்பிக்கையாக நினைக்கிறாராம் கருணாநிதி. 'நான் பதில் சொல்ல வேண்டிய அளவுக்கு நிலைமை போய்விடக் கூடாது’ என்று மட்டும் சொல்லிக்கொள்கிறாராம்!'' என்றபடி சப்ஜெக்ட் மாறினார் கழுகார்.

''தூத்துக்குடி துறைமுகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கிவிட்டது என்று திடீர் பீதி கிளம்பி அடங்கிவிட்டது!'' என்றார் கழுகார்.

''அதில் உண்மை என்ன?'' என்றோம் நாம்.

''நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மற்றும் வெளிநாட்டு பரிசு பொருட்கள் கப்பல்கள் வழியாகக் கடத்தப்படுவதாக மாநில தேர்தல் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இப்படி ஒரு தகவல் வந்தது உண்மை. உடனே, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ரவிக்குமார் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள், சுங்கத் துறை உயர் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் மூன்று கப்பல்கள் வந்திருந்தன. மியான்மர் நாட்டில் இருந்து மரக்கட்டை, மலேசியாவில் இருந்து பாமாயில், சிங்கப்பூரில் இருந்து பர்னர் ஆயில்... ஆகிய மூன்று சரக்கு கப்பல்கள் வந்து, துறைமுகத்தில் நின்றுகொண்டு இருந்தன. அந்தக் கப்பல்களை சோதனை செய்தார்கள் அதிகாரிகள். 'அந்தத் தகவல் எதுவும் உண்மை இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள்.''

''அப்புறம் என்ன?''

''இந்தக் கப்பல்கள் வந்து சில நாட்கள் ஆகிவிட்டதாம். அதை வைத்து சிலர் சந்தேகங்கள் கிளப்புகிறார்கள். 'அதில் பணம் வந்தது. கன்டெய்னரை எடுத்துச் சென்றுவிட்டார்கள். இதுமாதிரியான கடத்தல்களைத் தடுக்கவே அடுத்த சில நாட்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் கன்டெய்னர் ஸ்கேனிங் மிஷின் ஒன்றை செயல்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. அது இந்நேரம் வந்திருந்தால், அதை வைத்து அனைத்து கன்டெய்னர்களிலும் சோதனை செய்திருக்கலாம். அது, இப்போது நடக்காமல் போய்விட்டது. இந்த மிஷின் வருவதற்கு முன்னால் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பதற்றம் காட்டியிருக்கிறார்கள்’ என்கிறார்கள்.''

''தேர்தலுக்காகத்தான் பணம் வந்திருக்குமா... அல்லது, ஹவாலா பணமா?''

''மத்தியில் ஆட்சி மாறினால், அங்கிருந்து கறுப்புப் பணத்தைக் கொண்டுவருவதில் சிக்கல் வரலாம் என்பதை உணர்ந்தே, தேர்தலுக்கு முன்பே ரகசியமாக தூத்துக்குடி வழியாக இறக்குமதி செய்துவிட்டார்கள் என்றும் பேசிக்கொள்கிறார்கள். இன்னொரு தரப்பினரோ, 'கடல் வழி பணக்கடத்தலை தடுக்க ஃபீல்டு அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு வதந்தியை உயர் அதிகாரிகளே பரப்பிவிட்டனர்' என்கிறார்கள்''

''ஹவாலா பணம் இருக்காதா?''

''இன்று உலகம் முழுவதும் கொடிகட்டிப் பறக்கும் ஹவாலா கோஷ்டியின் பெயர் என்ன தெரியுமா? 'சாட்டிலைட்' என்பதுதான் அதன் பெயர். இதன் பொறுப்பாளர்கள் சிலர் குஜராத்திகள். இந்தியாவுக்குள் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குப் பணம் கொண்டுசெல்வதற்கு, தேர்தல் கமிஷன் கெடுபிடியால் அரசியல் கட்சிகள் தடுமாறுகின்றன. எனவே, பணத்தை சாட்டிலைட் நிறுவனத்தினர்தான் மொத் தமாகவும் பத்திரமாகவும் கொண்டுசெல்வதாகத் தகவல். அந்த வகையில், தூத்துக்குடி பக்கம் கன்டெய்னரில் சாட்டிலைட் நிறுவனத்தினர் பணம் கடத்தினார்களா என்கிற ரீதியில் மத்திய உளவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் விசாரித்து முடிப்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும்.''

''அப்படியா?''

''சமீப காலமாக மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளான தொழில் அதிபர் ஒருவர், ராசி செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஏராளமான பணத்தைப் பரிகாரம் செய்யத் தயாராகிவிட்டாராம். அவரது பெயரும் இதோடு இணைத்துச் சொல்லப்படுகிறது!''

''என்றாவது ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும் அல்லவா? அதுவரை காத்திருப்போம்! நாமக்கல் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பேச்சைக் கவனித்தீரா? தேர்தல் கமிஷன் மீது பாய்ந்திருக்கிறாரே? என்ன நடக்கிறது?''

''ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டத்தின் செலவு, சம்பந்தப்பட்ட தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரின் செலவோடு சேர்த்து பார்க்கப்படுமா, இல்லையா என்பதுதான் இப்போது பிரச்னையே. ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டத்தின் செலவைச் சேர்த்தால், ஒரு வேட்பாளரின் செலவு எங்கேயோ போய்விடும். அதுதான் ஜெயலலிதாவுக்குக் கோபம். 'ஒரு கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்துக்கு ஏற்பட்டதாகக் கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது. பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்தச் செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்?' என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.

'நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரசாரம் செய்கிறேன் என்றால், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினைக் கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்துக்குத் தங்களுடைய சொந்தச் செலவில் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்-அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாசாரம்தான். இதுதான் காலம் காலமாக நடந்துவருவது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காலத்திலும், இதுபோன்ற நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், 2014-ல் நடைபெறுகிற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இதுபோன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால், இந்தத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரே இந்த மேடைக்கு வரமுடியாத நிலை நிலவுகிறது’ என்றும் முதல்வர் ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

முத்தாய்ப்பாக, 'தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்கவைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டும் என்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் புறம்பானது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது என்று சொல்வார்களே... அதைப்போல, இப்போது

வேட்பாளரே தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக்கூட உச்சரிக்கக் கூடாது என்றும், இந்தத் தொகுதி வேட்பாளர் என்றுகூட சொல்லக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும். எனவே, இதுகுறித்து நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் வழக்குத் தொடுக்கப்படும்’ என்றும் அறிவித்துள்ளார். இதனால் நாமக்கல், சேலம் ஆகிய இரண்டு ஊர்களில் ஜெயலலிதா கலந்துகொண்ட கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இல்லை. வேட்பாளர்களே இல்லாமல் ஜெயலலிதா பேசிக்கொண்டு வந்தார். அவரது பேச்சில் டென்ஷன் அதிகமாகவே இருந்தது!''

''திடீரென ஏன் தேர்தல் ஆணையம் இப்படிச் சொல்கிறது?''

''தேர்தல் வந்துவிட்டாலே, தேர்தல் கமிஷன் ஆட்சி துவங்கிவிடும். தேர்தல் முடியும் வரையில் தேர்தெடுக்கப்பட்ட அரசுகள் தள்ளிநின்று வேடிக்கைதான் பார்க்க முடியும் என்கிற நிலையை முதல்வர் ஜெயலலிதா சேலஞ்ச் செய்திருக்கிறார். முதல்வரின் பேச்சு பற்றிக் கேள்விப்பட்டதும், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் பத்திரிகை யாளர்களிடம் பேசினார். 'நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக எந்த புதிய சட்டத்தையும் தேர்தல் கமிஷன் போடவில்லை. ஏற்கெனவே உள்ள சட்டம்தான்' என்று சொல்லியிருக்கிறார்.''

''இது முதல்வருக்குத் தெரியாதா?''

''அதிகாரிகள் இதனை ஞாபகப்படுத்தவில்லையா எனத் தெரியவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலிலேயே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுவிட்டது. ஒரு வேட்பாளர் 70 லட்சம் வரைக்கும் செலவு செய்யலாம். அந்த வேட்பாளரை ஆதரித்து தலைவர்கள் பேசும் கூட்டச் செலவும் அதோடுதான் சேரும். இப்போது ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு ஆகும் செலவு அதிகம். நாற்காலி செலவு ஆரம்பித்து ஹெலிகாப்டர் வரைக்கும் கூட்டினால், வேட்பாளராக இருப்பவர் விதியை மீறித்தான் ஆக வேண்டும். ஜெயலலிதா கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு எவ்வளவு செலவு ஆகிறது என்று தேர்தல் கமிஷன் முழுமையாகக் கண்காணித்து வருகிறது.

கூட்டம் நடக்கும் மைதானத்தின் பரப்பு, அதில் கைப்பிடி உள்ள சேர் எத்தனை, கைப்பிடி இல்லாத சேர் எத்தனை என்பது வரை கணக்குப் போட்டு ஒவ்வொரு சேருக்கும் என்ன வாடகை என்று பார்த்து கூட்டிக் கழித்து வருகிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள். இதுதான் அவரை ஆத்திரப்பட வைத்துள்ளது. 'அதிகாரிகள், அமைச்சர்கள், போலீஸ்காரர்கள் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தல் கமிஷனால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதால் அவர்களால் சில காரியங்களை வெளிப்படையாகச் செய்ய முடியவில்லை. அதனால்தான் முதல்வர் மிரட்டல் அஸ்திரத்தை எடுத்தார்’ என்றும் சொல்கிறார்கள். 'ஆளுங்கட்சி எதையோ செய்ய நினைக்கிறது, அதனை தேர்தல் கமிஷன் அதிகமாகக் கண்காணிக்கிறது. அந்தக் கோபம்தான் ஜெயலலிதா பேச்சில் வெளிப்படுகிறது’ என்று தி.மு.க. சிரித்தபடி சொல்கிறது!'' என்றபடி பறந்தார் கழுகார்.

படங்கள்: வி.ராஜேஷ்,

கே.குணசீலன்

போயஸ் கார்டனில் தனி ரூம்!

1975-ம் வருட பேட்ச் போலீஸ் அதிகாரிகளான விஜயகுமார், ஆர்.நடராஜ், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஓர் இடத்தில் சந்தித்தனர். அந்த சமயத்தில் பழைய நினைவுகளைப் பேசி மகிழ்ந்துள்ளனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு, முன்னாள் டி.ஜி.பி-யான ஆர்.நடராஜ் அ.தி.மு.க-வில் இணைந்தார். இதைக் கேள்விப்பட்ட ஒரு அதிகாரி, ''1975-ம் வருட பேட்சைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளும் அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் இணையப்போகிறார்களா?''என்று கிண்டல் அடித்தாராம்.

ஆர். நடராஜுக்கு போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பி.ஏ-வான பூங்குன்றன் அறைக்கு அருகே ஸ்பெஷல் அறை தயாராகி இருக்கிறதாம். அவருக்கான பணி விவரங்களை ஜெயலலிதாவே விலாவாரியாகச் சொல்லி இருக்கிறாராம். இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி-யும் 'உளவுத் துறை புலி’என்று அழைக்கப்பட்டவருமான அலெக்ஸாண்டரும் திடீரென அ.தி.மு.க-வில் சேர்ந்திருக்கிறார். அவருக்கும் விரைவில் கார்டனில் அறை ஒதுக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம்.

''கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை கண்காணிப்புப் பிரிவை விரைவில் அம்மா துவக்கப்போகிறார். கட்சியினர் மீது வரும் புகார்களை விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைக் களை எடுப்பதே இவர்களின் வேலை. அடுத்த இரண்டு வருடங்களில் கட்சியையும் நிர்வாகத்தையும் சீர்படுத்தி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப்போவதுதான் அம்மாவின் திட்டம்'' என்கிறார் கள் கார்டன் வட்டாரத்தில்.

ஆனால், போலீஸ் வட்டாரத் திலோ, ''எதிர்காலத்தில் மத்திய அரசில் அ.தி.மு.க. முக்கிய அங்கம் வகித்தால், முக்கியப் பதவிகளை வாங்கிவிடலாம் என்று கணக்குப்போட்டுத்தான் அவர்கள் இருவரும் கட்சியில் சேர்ந்துள்ளனர்'' என்கிறார்கள்.

வந்துவிட்டார் ராமதாஸ்!

பி.ஜே.பி. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்த வருத்தத்தில் இருந்தார் ராமதாஸ். பி.ஜே.பி. கூட்டணி பிரசாரத்துக்கு ராமதாஸ் வர மாட்டார் என்று பேச்சுக்கள் கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி ஒருவழியாக தர்மபுரி மாவட்டம் அடிலம் கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார் ராமதாஸ். ஆனால், அவருடன் அன்புமணி வரவில்லை. ''அன்புமணியை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. வெற்றிக்குப் பிறகு அன்புமணியோடு சேர்ந்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன்!'' என்று உருகிவிட்டுக் கிளம்பினார் ராமதாஸ்.

கேன்சலுக்கு காரணங்கள் மூன்று!

மதுரை தே.மு.தி.க வேட்பாளர் சிவமுத்துகுமாருக்கு பிரசாரம் செய்ய கடந்த 3-ம் தேதி மதுரை வந்தார் விஜயகாந்த். ஆனால், அன்று அவர் திட்டமிட்டபடி பிரசாரத்துக்குக் கிளம்பவில்லை. தே.மு.தி.க-வினரிடம் விசாரித்தபோது, மூன்று வகையான காரணங்களைச் சொன்னார்கள். 'கேப்டனுக்கு வயிறு சரியில்லை’ என்கிறது ஒரு தரப்பு. 'பிரசார வேனில் உள்ள ஏ.சி. ரிப்பேர் ஆகிவிட்டது’ என்பது அடுத்த காரணம். ' தே.மு.தி.க. வேட்பாளரை மாற்றுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்’ என்பது மூன்றாவது!