'''பவர்’ இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. ஆனால் மோடி ஆட்சி நிலைப்பதே 'பவரில்’தான்!''_ இப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள் பி.ஜே.பி-யினர். அவர்கள் சொல்லும் 'பவர்’ மின்சக்தி. குஜராத் அரசின் மிக முக்கியமான சாதனையாக சொல்லப்படுவது மின் உற்பத்தி. அதுவும் சூரிய சக்தியின் மூலமாக மின் உற்பத்தி செய்வது!

குஜராத் மாநில முதல்வராக மோடி ஆட்சிக்கு வந்தபோது, அந்த மாநில மின்வாரியம் கடும் நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருந்தது. மின்வெட்டு, மின்பற்றாக்குறை, சீரற்ற மின் வினியோகம்... என்று மாநிலத்தின் ஒட்டுமொத்த வர்த்தகமும் தொழில் துறையும் படுபயங்கரமான புதை குழியில் சிக்கியிருந்தன.

மாநிலத்தின் தொழில், வர்த்தகம் ஆகிய அனைத்துக்கும் சுவாசக்காற்றே மின்சாரம்தான். இந்த மின் பற்றாக்குறையால் இழுப்பு வந்த ஆஸ்துமா நோயாளியைப்போல எல்லாத் துறைகளும் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது... எத்தனை போஷாக்கான திட்டங்களை அறிவித்தாலும் அவை தவிடுபொடியாகிவிடும் என்பதை மாநிலத்தின் அதிகாரிகள் மோடிக்குப் புரியவைத்தார்கள். ''சரி, அப்படியென்றால் மாநிலத்தின் மின் தேவையை எப்படிச் சீர்படுத்துவது?'' என்ற கேள்வியோடு ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிகாரிகளை அழைத்தார் முதலமைச்சர் மோடி. அப்போது அவருக்கே ஷாக்!

மாநிலத்தின் மின்சாரப் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு கொண்ட மின்சார வாரியமே திவாலாகும் நிலமையில் இருப்பதை அந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் மோடிக்கு எடுத்துச் சொன்னார்கள். ஆம். அப்போது குஜராத் மின்சார வாரியம் கடும் நஷ்டத்தில் செயல்பட்டுவந்தது. கொக்கிப் போட்டு மின்சாரம் திருடுவது என்பது அந்த மாநிலத்தின் பல பகுதிகளிலும் அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்துவந்தது. இதனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். மின்நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பல நூறு கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும் அதன் நுகர்வோர்களுக்கு சென்று சேர்ப்பதற்குள் ஏற்படும் இழப்பும்(Transmission and distribution - T&D losses) மிக அதிகமாக இருந்தது. ஆக, உற்பத்தியாகும் மின்சாரத்தில் 35 சதவிகிதத்தை மின்வாரியம் இப்படி இழுந்துவந்ததால், அதன் நிதி ஆதாரம் குறைந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே கடன் வாங்கிக்கொண்டிருந்தது. இப்படி வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டிக் கட்டவே மின்வாரியத்துக்கு வருடத்துக்கு 1,227 கோடி ரூபாய் தேவைப்பட்டது. இது, 2001-ம் ஆண்டுகளில். இதனை திறமையான அதிகாரி ஒருவரின் கையில் ஒப்படைக்கலாம் என்று மோடி முடிவு செய்தார். மத்திய அரசுப் பணியில் இருந்த மஞ்சுளா சுப்பிரமணியம் என்ற அதிகாரியை அழைத்துவந்து இந்தப் பிரச்னையை அவரிடம் ஒப்படைத்தார்கள்.

குஜராத் மின்வாரியத்துக்கு கடன் கொடுத்திருந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மீது தன் பார்வையை திருப்பினார் அவர். தனது நிதித் தேவைகளுக்காக வங்கிகளிடம் இருந்தும் நிதி நிறுவனங்களிடம் இருந்தும் 18 சதவிகித வட்டிக்கு குஜராத் மின்வாரியம் கடன் வாங்கியிருந்தது. சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கறாராகப் பேசி அவர் வட்டி வகிதத்தை வெகுவாகக் குறைத்தார். அதன்மூலம் மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மிச்சமானது.

அடுத்து, அவரது பார்வை மின்வாரியத்துக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தனியார் கம்பெனிகள் மீது திரும்பியது. இந்த கம்பெனிகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்கும் விலையில் யூனிட்டுக்கு ஒரு சில பைசாக்களை குறைத்தாலும், அது பல கோடி ரூபாயை மிச்சப்படுத்தும். ஆகவே, சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே கையெழுத்து ஆகியிருந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் உபவிதிகளையும் காட்டி கம்பெனிகள் முரண்டுபிடித்தன. ஆனால், அரசு தனது முடிவில் பிடிவாதமாக இருந்தது. ஒன்றரை ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் இறங்கிவந்தனர். இந்த நடவடிக்கையால் முதல் ஆண்டு மின்வாரியத்துக்கு 675 கோடி ரூபாயும், அதற்கு அடுத்த ஆண்டு சுமார் ஆயிரம் கோடி ரூபாயும் மிச்சமானது. 'கடனைக் குறைத்த பிறகு மின்வாரியத்தை எப்படி புனரமைக்கலாம்’ என்று மின் ஊழியர்களிடமே யோசனைகள் கேட்கப்பட்டன.

அந்த யோசனைப்படி மின்திருட்டை சட்டபூர்வமான குற்றம் என்று கடுமையாக அறிவித்தார்கள். அதற்காக பிரத்யேக சட்டம் இயற்றப்பட்டது. மின் திருட்டை தடுக்க பிரத்யேகமான காவல் நிலையங்களையும் அமைத்தனர். நீண்ட நாட்களாக மின்பாக்கி வைத்திருந்தவர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதனால், மின் பாக்கி எல்லாம் அடுத்தடுத்த மாதங்களில் முழுமையாக வசூல் ஆனது. கிராமங்களாக இருந்தாலும், விவசாய இணைப்பாக இருந்தாலும்... மீட்டர் இல்லாமல் யாருக்கும் மின் இணைப்பு இல்லை என்று அறிவித்தனர். ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியோடு மாநிலம் முழுவதும் மின்சார மீட்டர்களைப் பொருத்த, மின்வாரியம் நடவடிக்கை எடுத்தது.

ஆனாலும், மின் திருட்டு நடந்துவந்தது. மின்திருட்டைத் தடுக்க சட்டங்கள் இயற்றலாம்; போலீஸ் நிலையம் அமைக்கலாம்; ஏன், மீட்டர்கூடப் பொருத்தலாம். ஆனால், இதெல்லாம் போதாது. திருடுவதற்கு வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை உருவாக்கியாக வேண்டும் என்பதை புரிந்துகொண்டவர்கள், இதற்கு அடுத்து எடுத்த நடவடிக்கைதான் மின் தட்டுப்பாடுள்ள மாநிலமாக இருந்த குஜராத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற அடித்தளம் அமைத்தது. மின்சாரம் பற்றாக்குறையாக இருந்தால்தானே திருடுவார்கள், மின்சாரம் மிகையாக இருந்தால் ஏன் திருடப்போகிறார்கள்?

விவசாயத்துக்காக மின்சாரம் மானிய விலையில் வழங்கப்பட்டதால் கிராமங்களில் பலர் வீட்டு உபயோகத்துக்கும் இந்த மின் இணைப்பையே பயன்படுத்தி வந்தனர். இதைத் தடுக்க வீட்டு உபயோகத்துக்கு தனி லைன், விவசாயத்துக்கு தனி லைன் என்று மின்சார விநியோகத்தையே இரண்டாகப் பிரித்தார்கள். அதனால் கிராம மக்கள் அனைவருக்கும் விவசாய பம்பு செட்டுக்காகத் தனி இணைப்பும், வீட்டு உபயோகத்துக்காகத் தனி இணைப்பும் பெற வேண்டி இருந்தது. வீட்டு உபயோகத்துக்கான இணைப்புக்குக் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு 'ஜோதி கிராம யோஜ்னா’ என்று பெயர்.

மின்சார லைன்களை இரண்டாகப் பிரித்ததைப்போலவே நிர்வாகத் திறனை மேம்படுத்த, மின்வாரியம் செய்துவந்த வேலைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. Gujarat Electricity Industry (Reform and Reorganisation) Act என்ற சட்டத்தின்படி மின் உற்பத்தி செய்யும் அமைப்பும், மின் விநியோகம் செய்யும் அமைப்பும் - பிரதேசங்களுக்குத் தகுந்த மாதிரி தனித்தனி அமைப்புகளாக உருவெடுத்தன. ஒரே இடத்தில் குவிந்துகிடந்த அதிகாரம் பரவலாக்கப்பட்டதால், மின் விநியோகத்திலும் கட்டண வசூலிலும் திறமையும் வேகமும் கூடியது.

இப்படி அடுத்தடுத்துச் செய்த சீர்திருத்தங்களால்... நஷ்டத்தில் தத்தளித்துவந்த குஜராத்தின் மின்வாரியம் மூன்று ஆண்டுகளில் நஷ்டத்தில் இருந்து மீண்டது. 'இன்று மாநிலத்தில் மின் வசதி இல்லாத கிராமங்களே இல்லை’ என்பதை மோடி தன் சாதனையாக நாடு முழுதும் தண்டோரா போட்டுச் சொல்கிறார். மின்தட்டுப்பாடு கொண்ட மாநிலமாக இருந்த குஜராத் இன்று மின்மிகை மாநிலமாக மாறியது!

தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி ஆகியவற்றில் தன்னுடைய சாதனைப் பட்டியலை மோடி அரசு விரித்தாலும் இந்தியாவின் மைய உயிர்நாடியான விவசாயம் குஜராத்தில் எப்படி இருக்கிறது? உற்பத்தி பெருகி இருக்கிறதா? அதற்கான முன்னேற்பாடான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதா? விவசாயிகள் மனநிலை எப்படி இருக்கிறது?

அடுத்தடுத்து விருதுகள்!

குஜராத் அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனல் மின் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் என்பது 6,433 மெகா வாட். மகாராஷ்டிராவைத் தவிர வேறு எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு அனல் மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்கிறது. மகாராஷ்டிரா அரசின் கீழ் இயங்கும் அனல் மின் உற்பத்தி மையங்களின் திறன் 9,072 மெகாவாட். ஆனால், அங்கே தனியார் நிறுவனங்களின் மின் உற்பத்தி திறனும் வெறும் 9,246 மெகாவாட்தான். ஆனால் குஜராத்திலோ... தனியார் அனல் மின் உற்பத்தி நிலையங்களின் திறன் சுமார் 12,000 மெகாவாட்! இன்னொருபுறம், சூரிய சக்தி, பையோமாஸ், காற்றாலைகள் என்று மரபுசாராத மின்சார தயாரிப்புத் திறனிலும் குஜராத்தின் செயல்பாடு அபாரம். இந்தக் காரணங்களால்தான் குஜராத்தின் மின்துறை செயலாளரான பாண்டியனுக்கு மத்திய அரசே விருதுகள் கொடுத்து கௌரவிக்கிறது. குஜராத் மின்துறைக்கும் மத்திய அரசு அடுத்தடுத்து ஐந்து ஆண்டுகளாக விருதுகள் கொடுத்துவருகிறது.

குஜராத்தில் இருந்து ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சுளா சுப்பிரமணியம்

மோடியின் பரிபூரண நம்பிக்கையைப் பெற்ற அதிகாரிகளில் முக்கியமானவர் மஞ்சுளா சுப்பிரமணியம். இத்தனைக்கும் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால்கூட அவரைப் புகழாமல், குஜராத் எப்படி எல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதை மட்டுமே பேசுகிறவர்.சபர்மதி ஆற்றங்கரையை அழகுபடுத்தும் ரிவர் ஃப்ரன்ட் திட்டமானாலும் சரி... அல்லது மின்துறையை சீர்செய்யும் பொறுப்பாக இருந்தாலும் சரி... அதனை நிறைவேற்றும் பொறுப்பு பெரும்பாலும் மஞ்சுளாவுக்குத்தான் கிடைக்கும். மஞ்சுளா செயல்புயல் என்பதால் அவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுகூட அவரது சேவையை இழக்க மோடி தயாராக இல்லை. அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் வேலை இப்போது இவர் தலைமையில்தான் நடந்து வருகிறது.

டி.ஜெ.பாண்டியன்

உலக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் உள்ள இவர், குஜராத்தில் மின்சாரம், எரிவாயு, பெட்ரோல்... என்று எந்த எரிபொருளாக இருந்தாலும் சரி... அதை நிர்வகிக்கும் அரசு துறை அல்லது நிறுவனங்கள் என அனைத்துக்கும் அதன் முக்கியமான காலகட்டங்களில் கேப்டனாக இருந்து அவற்றின் போக்கையே திசைமாற்றி இருக்கிறார். அதனால், டி.ஜெ.பாண்டியனை 'எனர்ஜி ஜார்’ (எரிபொருள் மன்னன்) என்ற பொருளில் குஜராத்தில் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. சோலார் பவர் போன்ற மரபு சாரா எரிசக்தி உற்பத்தியில் குஜராத் உலகத்தின் கவனத்தைக் கவர்வதற்கு இவர் முக்கியமான காரணம். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர்.

சூரிய சக்தியே மோடியின் சக்தி!

குஜராத்தின் சாதனை என்று விளம்பரப்படுத்தும் விஷயங்களில் மிக முக்கியமானது 'சோலார் பவர்’ என்று சொல்லக்கூடிய சூரிய சக்தி!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 225 கிலோ மீட்டர் மேற்கு திசையில் இருக்கும் வெட்டவெளிப் பிரதேசம்தான் சாரங்கா. ''பூமியே பிளவுபடும் அளவுக்கு வெய்யில் அடிக்கும் இந்தப் பகுதியில் பருத்தி, வேர்க்கடலை என்று எதுவும் விளையாது என்பதால்... இங்கே மின்சாரத்தை விளைவிக்க முடிவு செய்தோம்!’ என்று சுவாரஸ்யமாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். இந்தப் பூங்காவின் நட்ட நடுவே இருந்த கோபுரத்தின் உச்சிக்கு லிஃப்டில் அழைத்துச்சென்று காட்டினார்கள். எல்லாத் திசையிலும் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் சோலார் பேனல்கள் பளபளத்தன. ''அங்கே தெரிகிறதே... அதுதான் அதானியின் 40 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பார்க்... இதோ இங்கே தெரிகிறதே... இதுதான் மோஸர் பேயரின் சோலார் பூங்கா!'' என்று ஒவ்வொரு பூங்காவையும் சுட்டிக்காட்டினார்கள். 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 4,500 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு இருக்கும் இந்த சோலார் பார்க்தான் ஆசியாவிலேயே மிகப்பெரியது. இதன் உற்பத்தித் திறன் 274 மெகாவாட்.

சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 20 கம்பெனிகள் இங்கே செயல்பட்டு வருகின்றன. சூரிய சக்தி உற்பத்தி என்பதை குஜராத் அரசு சாரங்கா பகுதியோடு நிறுத்திக் கொள்ளாமல், மாநிலத்தின் தலைநகரான காந்தி நகர் தொடங்கி பல பகுதிகளிலும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, காந்தி நகரில் பல அரசு கட்டடங்களின் மொட்டை மாடிகளில் சோலார் தகடுகளைப் பார்க்க முடிந்தது.

மோடியின் சொந்த மாவட்டமான மேஸானா பகுதியில் ஓடும் சர்தார் சரோவர் நர்மதை வாய்க்காலின் மேற்பகுதியை சோலார் தகடுகள் கொண்டு மூடியிருக்கிறார்கள். இதன் மூலம் சூரிய ஒளி பட்டு வாய்க்காலில் ஓடும் நீர் ஆவி ஆகாமல் பாதுகாக்கப்படுவதுடன், மின் உற்பத்தியும் நடைபெறுகிறது. பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் இந்தத் திட்டத்தை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளத்துக்கு நீட்டிப்பது எப்படி என்று குஜராத் அரசு யோசித்துக்கொண்டு இருக்கிறது.

குஜராத்தில் மின்கட்டணம் அதிகம்

100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தமிழகத்தில் யூனிட்டுக்கு 1.20 ரூபாய் கட்டணம். ஆனால், டெல்லியில் 2.75 ரூபாய். ஆந்திரத்திலோ 1.94 ரூபாய். குஜராத்தில் 3.45 ரூபாய். கர்நாடகத்தில் 3.60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு தமிழகத்தில் யூனிட்டுக்கு 3.20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், டெல்லியில் 4.70 ரூபாய். குஜராத்தில் 7.25 ரூபாய். ஆந்திரத்தில் 6.83 ரூபாய் எனக் கட்டணம் உள்ளது.

''மின் இணைப்பு கேட்டு விவசாயிகள் காத்திருக்கிறார்கள்!''

மோடி ஆட்சியின் மின்சாதனைகள் பற்றி அவரது எதிர் தரப்பினர் விமர்சனம் கடுமையாக உள்ளது!

''மின் திருட்டையும், மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்பையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை குஜராத் அரசே பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. 35 சதவிகிதமாக இருந்த மின் திருட்டையும் இழப்பையும் இவர்கள் 20 சதவிகிதமாகக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அவ்வளவுதான். குஜராத்தில் எல்லா கிராமங்களிலும் மின் வசதி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. மின் இணைப்புக் கேட்டு பல கிராமங்களில் ஏராளமானவர்கள் காத்திருக்கிறார்கள். இங்கே 98 சதவிகித மக்களுக்கு மின்சார வசதி இருக்கிறது என்று வேண்டுமானால், சொல்ல முடியும். அப்படி என்றால் வெறும் இரண்டு சதவிகித மக்கள்தான் மின்சார வசதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று இதைச் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. இரண்டு சதவிகிதம் என்றால் குஜராத் மக்கள் தொகையில் 12 லட்சம் பேர் மின்வசதி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். விவசாயத்துக்கு நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் மட்டும்தான் மின்சாரம் வழங்கப்படுகிறது.

காலுவூர், தார்யாபுர், ஷாபுர், ஜம்பல்புர், டானிலிம்டா, ஷாலாய் போன்ற இடங்களில் மின்வசதி முழுமையாக இல்லை.

அடுத்ததாக அரசு தம்பட்டம் அடித்துக்கொள்வதைப் போல இங்கே 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவில்லை. இன்னமும் பல குக்கிராமங்களுக்கும் விவசாய பாசனத்துக்கும் சீரான மின் வசதி இல்லை. தமிழ்நாடு போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இதெல்லாம் பெரிய சாதனைகள்போலத் தோன்றும். இந்தச் சாதனைகளுக்கு எல்லாம் முழுக்க முழுக்க மோடி மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அவர் ஆட்சிக்கு வந்தபோது, குஜராத் மாநிலத்தில் இருந்த 18 ஆயிரம் கிராமங்களில், 170 கிராமங்கள் தவிர குஜராத்தின் மற்ற எல்லா கிராமங்களும் மின் இணைப்பு பெற்று இருந்தன. தமிழகத்தைப்போல இங்கே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடையாது. 'சரி பணம் கொடுக்கிறோம், மின் இணைப்பு கொடுங்கள்’ என்று கேட்டு இங்கே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல ஆண்டுகளாகக் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, 'குஜராத்தை ஒரு மின்மிகை மாநிலம்’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவே மோடி பிற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறார்'' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.