வைகோவின் கலிங்கப்பட்டி வீட்டுக்கு விஜயகாந்த் வந்தது ஒருவகையில் வரலாற்று நிகழ்வாக மாறிவிட்டது!

''ஏற்கெனவே பல அரசியல் தலைவர்கள் வந்து சென்ற இல்லம் அது. முன்னாள் முதல்வர்களான

காமராஜர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும், முக்கிய அரசியல் தலைவர் களான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், செல்லபாண்டியன், மூப்பனார், நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், அன்பழகன் உள்ளிட்ட பலரும் அவருடைய இல்லத்துக்கு வந்துள்ளனர். அந்த வரிசையில் விஜயகாந்த்தும் இணைந்துவிட்டார்'' என்று ம.தி.மு.க-வினர் பெருமை பொங்க சொல்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த், 2-ம் தேதி மாலை வைகோவின் வீட்டுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல் பரவியதும், பத்திரிகையாளர்கள் கலிங்கப்பட்டியை மொய்க்கத் தொடங்கினர். மாலை 4.15 மணிக்கு விஜயகாந்த் வந்து சேர்ந்தார். வாசலில் வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் சென்ற விஜயகாந்த், வைகோவின் தாயார் மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார். அவரது உடல்நலம் பற்றி வாஞ்சையோடு அவர் விசாரித்தார். விஜயகாந்த்தின் கரத்தைப் பற்றிக்கொண்ட மாரியம்மாள் தனக்கு அருகில் அவரை அமரவைத்து, 'நீயும் என்னோட புள்ளதாம்பா..’ என்று கன்னத்தைத் தடவியதும் நெகிழ்ந்து உருகிய விஜயகாந்த், 'அண்ணனை இந்த முறை ஜெயிக்க வெச்சு மத்திய அமைச்சரா ஆக்கிடுவோம்மா...’ என்று உறுதியளித்தார்.

பின்னர், வைகோ தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் அழைத்து விஜயகாந்த்துக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் வைகோ வீட்டுச் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்த படங்களை ஆர்வமாகப் பார்த்தார். ஒவ்வொரு அரசியல் தலைவருடனும் வைகோ இருக்கும் படங்கள் எடுக்கப்பட்ட சூழ்நிலை, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது போன்றவற்றை வைகோ விளக்கினார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் வைகோ நெருக்கமாக இருக்கும் படத்தை விஜயகாந்த் ஆர்வத்துடன் பார்த்து, 'எ ரியல் ஹீரோ...’ என்றார் உருக்கமாக.

அதைத் தொடர்ந்து இருவரும் தேர்தலை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் அரசியல் நிலவரம், தொகுதிகளின் இப்போதைய நிலைமை பற்றி ஆலோசனை நடத்தினர். விஜயகாந்த்திடம் பேசிவிட்டு வெளியே வந்த வைகோ தனது தாயாரிடம், 'இவரு ரொம்ப வெள்ளந்தியான ஆளும்மா’ என்று விஜயகாந்த்தைச் சொல்லவும் கலகலப்பு கூடியது.

தொடர்ந்து இருவரும் இணைந்தே மேடையில் ஏறினர். அந்த ஊர் தென்காசி தொகுதிக்குள் வருகிறது. அங்கு ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அப்போது பேசிய வைகோ, ''எனது தந்தை வையாபுரி காங்கிரஸில் இருந்தபோது 1953-ல் காமராஜர் எங்க வீட்டுக்கு வந்தார். அதேபோல பல அரசியல் தலைவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இப்போது விஜயகாந்த் இங்கே வந்திருக்கிறார். விஜயகாந்த்தைப் பொறுத்தவரை பண்பான மனிதர். அவரைப்பற்றி பலரும் கடுமையான விமர்சனங்கள் செய்தபோதிலும்கூட எல்லாவற்றையும் உறுதியுடன் எதிர்த்து நின்று தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார். அவரது இந்தப் பக்குவமும் உறுதியும் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தவை.

அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களை ஆளுங்கட்சியினர் வாங்கியபோதும், அவர்கள் கட்சி மாறியபோதும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். இப்போது நாங்கள் மத்தியில் நிலையானதும் வலிமையானதுமான ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைத்திருக்கிறோம். பலமான இந்தக் கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றப்போவது நிச்சயம்'' என்று உறுதியான குரலில் பேசினார்.

கலிங்கப்பட்டி மேடையில் ம.தி.மு.க. வேட்பாளரான சதன் திருமலைக்குமாரை ஆதரித்துப் பேசிய விஜயகாந்த், ''நான் வைகோவின் ரசிகன். அவரது பேச்சு எனக்கு ரொம்பவே பிடிக்கும். இதற்கு முன்பு, 'பூந்தோட்டக் காவல்காரன்’, 'கேப்டன் பிரபாகரன்’ ஆகிய பட விழாக்களில் கலைஞருடன் அவரைப் பார்த்திருக்கிறேன். அரசியலுக்கு வந்த பிறகு கூட்டணிக் கட்சித் தலைவரான ராஜ்நாத் சிங்குடன் நடந்த சந்திப்பின்போது அவரைச் சந்தித்தேன்.

2006 தேர்தல் பிரசாரத்தின்போது வைகோ வீட்டுக்கு வந்த ஜெயலலிதா, 'வைகோவின் தாயாரை சந்தித்தபோது, எனது தாயாரை சந்தித்த உணர்வு ஏற்பட்டது’ என்று சொன்னார். அப்படி பேசிய ஜெயலலிதா பிறகு வைகோவைத் தனியாக விட்டுவிட்டார். அப்படிச் செய்யலாமா? மத்தியில் மோடி ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்.

என்னை வைகோவும் அவருடைய குடும்பத்தினரும் சிறப்பாக உபசரித்தார்கள். வைகோ என்னை 'விருந்தாளி’ என்று சொன்னார். விருந்தாளி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைக்காதீர்கள். இருவரும் நெருக்கமாக இருந்து ஊழலற்ற ஆட்சி அமைய பாடுபடுவோம்'' என்று பலத்த கரகோஷத்துக்கு இடையே பேசினார்.

பின்னர் இருவரும் பிரசார வாகனத்தில் ஏறி சங்கரன் கோவில், விருது நகர், திருமங்கலம், அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆறு மணி நேரம் ஒன்றாகப் பிரசாரம் செய்தனர். ''வைகோ என்றால் வி. விஜயகாந்த் என்றால் வி. விருதுநகர் என்றாலும் வி. வெற்றி என்றாலும் வி'' என்று பஞ்ச் அடித்துக் கொண்டே போனார் விஜயகாந்த். வைகோ தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை எடுத்து விஜயகாந்த்துக்கு அணிவித்தார். பிரசார வாகனத்தில் தான் உட்காரும் சீட்டை வைகோவுக்குக் கொடுத்தார் விஜயகாந்த். 'கருணாநிதியும் ஜெயலலிதாவும் வைகோவை ஏமாற்றிவிட்டார்கள். இனி அவருக்கு வெற்றிதான்’ என்று விஜயகாந்த் நம்பிக்கை ஊட்டினார். விஜயகாந்த்தை வைகோ, 'புரட்சிக் கலைஞர்’ என்று அழைத்தார். இது இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஊட்டியது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

மின்னல் வந்துருச்சு.. மழை வருமா?

வைகோ வீட்டுக்கு வந்த விஜயகாந்த்துக்கு தனது குடும்பத்தினரை அறிமுகப்படுத்திய வைகோ, வேட்பாளர் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் சிலரையும் விஜயகாந்த்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது ம.தி.மு.க-வின் இணையதள ஒருங்கிணைப்பாளரான மின்னல் முகமது அலியை காட்டி, 'இவர் எங்க கட்சியின் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மின்னலாக செயல்படுபவர். அதனால் நான் இவரை மின்னல் என்றுதான் அழைப்பேன்’ என்றதும் விஜயகாந்த் அவரிடம், 'மின்னல் வந்துருச்சு... மழை வருமா... வராதா..?’ என ஜோக் அடிக்கவும் சிரிப்பில் அந்த இடமே கலகலத்தது.