'இந்திய நாட்டின் விவசாய வளர்ச்சி ஒரு சதவிகிதம்... இரண்டு சதவிகிதம் என்று நொண்டி அடித்துக்கொண்டு இருக்கும் வேளையில், கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் விவசாய வளர்ச்சி 10.8 சதவிகிதம்!’ என்று சொல்லி புருவத்தை உயர்த்தவைக்கிறார் மோடி. இது எந்த அளவுக்கு உண்மை?

குஜராத்தின் கிராமப்புறங்களுக்குச் செல்வதற்கு முன், அந்த மாநிலத்தின் விவசாயத் துறை இயக்குநர் டாக்டர் எஸ்.ஆர்.சௌத்ரியை காந்தி நகரில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

விவசாயம் தழைக்கிறது!

''புவியியல்ரீதியாகப் பார்த்தால், குஜராத்தின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள்தான் நீர் வளம் உள்ளவை. வடக்கு குஜராத், கட்ச், சௌராஷ்டிரா ஆகியவை எல்லாம் வறட்சியான பிரதேசங்கள். வானம்பார்த்த பூமியாக இருந்தாலும், இங்கே எங்கள் அரசு கட்டிய தடுப்பணைகளும், வெட்டிய குளம் குட்டைகளும் இந்தப் பகுதியில் நீர் ஆதாரத்தை வெகுவாக அதிகப்படுத்தி இருக்கிறது. விவசாயத்துக்கு இந்தத் தடுப்பணைகள் மிக மிக முக்கியம் என்பதால், அதை நாங்கள் 'ஜல் மந்திர்’ (நீர் கோயில்கள்) என்று மரியாதையோடு குறிப்பிடுகிறோம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, எங்கள் மாநிலத்தில் 10,700 தடுப்பணைகள்தான் இருந்தன. இந்த எண்ணிக்கை இப்போது 1.13 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. தவிர, 2,40,199 குளங்களும் விவசாயத்துக்காக வெட்டப்பட்டுள்ளன.

இயற்கையின் ஓரவஞ்சனையையும் மீறி... எங்கள் மாநிலத்தில் இன்று விவசாயம் தழைத்து வளர்கிறது என்றால், அதற்கு சர்தார் சரோவர் அணையில் தேக்கிவைக்கப்படும் நர்மதை ஆற்றின் நீரை 458 கிலோ

மீட்டர்கள் தள்ளியிருக்கும் பகுதிகளுக்கு கொண்டுச்செல்ல நாங்கள் வெட்டியிருக்கும் பெரிய வாய்க்கால்கள் மிக முக்கியக் காரணம். இந்த வாய்க்கால் ஓடும் பாதையைச் சுற்றி நிலத்தடி நீரும் அதிகரித்திருக்கிறது. அதேபோல 'சுஜலாம் சுபலாம்’ என்ற திட்டத்தின் கீழ் ஏழு மாவட்டங்களுக்கு பயனளிக்கும் வகையில் 332 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாசன வாய்க்கால் வெட்டியிருக்கிறோம்.

மகா உற்சவம்!

அதிகாரிகளைத் தேடி விவசாயி வரக் கூடாது; அவர்களைத் தேடித்தான் அதிகாரிகள் கிராமத்துக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் 'க்ருஷி மஹா உத்ஸவ்’ (விவசாய மகா உற்சவம்) என்ற ஒரு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறோம். சொட்டுநீர் பாசனத்தின் பலன்கள், உரமிடும் முறை, நவீன வேளாண் உத்திகள் ஆகியவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக இந்த அதிகாரிகளோடு விவசாய ரதங்களும் செல்கின்றன. எந்த மண்ணில் எந்தச் சத்து குறைபாடோ, அதற்குத் தகுந்த மாதிரி உரங்களைப் பயன்படுத்த அறிவுரைகள் சொல்கிறோம். விவசாயிகளுக்கு கணிசமான பணம் மிச்சம் ஆவதோடு, நல்ல மகசூலும் கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு இலவசமாக மண் பரிசோதனை செய்துதருகிறோம். ரேஷன் அட்டையைப்போல இதுவரை 42 லட்சம் விவசாயிகளுக்கு இந்த மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எங்களது இந்தத் திட்டங்களின் பயனாக இன்று நாட்டில் விளையும் பருத்தியில் 32 சதவிகிதம் எங்கள் மாநிலத்தில்தான் பயிரிடப்படுகிறது. அதேபோல பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தி அதிகமாகி இருக்கிறது. விவசாயம் என்பது லாபம் இல்லாத தொழில் என்ற எண்ணத்தை ஓரளவு குறைத்துள்ளது'' என்ற அவர்,

''தரிசாகக் கிடந்த 13 லட்சம் ஹெக்டேர் நிலம் விளைநிலங்களாக மாற்றப்படுகிறது. கடானா நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி ஆகும் தண்ணீர், வறண்ட மாவட்டங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைகள் கிடைத்து வருகின்றன. வறட்சியான மாவட்டங்களில் இருந்த மக்கள் வேலை தேடி சூரத் போன்ற இடங்களுக்குப் போனார்கள். இப்போது அவர்கள் மீண்டும் கிராமங்களுக்கு வர ஆரம்பித்துள்ளனர். விவசாயத்தின் மூலமாக வளர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது'' என்றும் சொல்கிறார்.

சொட்டுநீர் பாசனம்!

பருத்தி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய மூன்றும் குஜராத்தின் முக்கியமான விளை பொருட்கள். மா, வாழை, ஆரஞ்சு, சப்போட்டா ஆகிய பழங்களின் உற்பத்தியும் பெருமளவு நடக்கிறது. தடுப்பணைகள் கட்டப்பட்டன, ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டன, மழைநீர் சேகரிப்பு, சொட்டு நீர் பாசனம் போன்றவை காரணமாக விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது. சொட்டுநீர் பாசனம் மாநிலம் முழுவதும் 3.30 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் நடப்பதாக அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். சொட்டுநீர் பாசனத்தைப் பயன்படுத்த ஆரம்பத்தில் அதிக முதலீடு தேவை. எனவே, விவசாயிகளுக்கு மானியமாக கொடுக்க 1,500 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு 'குஜராத் பசுமைப் புரட்சி இயக்கம்’ என்று பெயர்.

மோடிக்கு முன்பே!

''விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பெரிய கம்பெனிகளுக்கு அரசு கொடுக்கிறது என்பது உண்மையே என்றாலும், இன்னொருபுறம் விவசாயிகளுக்கும் நன்மைகள் கிடைத்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் கடந்த 10 ஆண்டுகளாக, குஜராத்தில் வானம் பொய்க்கவில்லை. வழக்கத்தைவிட அதிகமாகவே இங்கு மழை பொழிந்து வருகிறது. 2002-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சிகூட குஜராத்தை அதிகமாகப் பாதிக்கவில்லை. சர்தார் சரோவர் அணைக்கட்டும், பல நூறு கிலோ மீட்டர்களுக்கு வெட்டப்பட்ட நர்மதை வாய்க்காலும் மோடி வருவதற்கு வெகு முன்னரே தொடங்கப்பட்டத் திட்டங்கள். இந்தத் திட்டங்களின் பலன்கள் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கிறது. இது தற்செயலாக நிகழ்த்து இருக்கும் விஷயம். பி.டி. பருத்தி உற்பத்தி, விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் லாபம் அதிகம் கிடைத்ததால் கோதுமை, கம்பு என்று பயிரிட்டுக்கொண்டிருந்த விவசாயிகளும் பி.டி. பருத்திக்கு மாறிவிட்டார்கள். மற்ற பயிர்களைவிட இதில் அவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிறது. உங்கள் மாநிலத்தில் உள்ளதைப் போல விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இங்கு கிடையாது. ஆனால், விவசாயத்துக்காக எட்டு மணி நேரம் மின்சாரம் ஒழுங்காகக் கிடைக்கிறது'' என்கிறார்கள் இங்குள்ள விவசாயிகள்.

பி.டி.பருத்தி!

சினோர் தாலுக்காவில் சாட்லி என்ற கிராமத்தில் இருக்கும் விவசாயிகளை சந்தித்தோம். அங்கே பலதரப்பட்ட விவசாயிகளிடம் பேசினோம். அவர்களும் பி.டி. பருத்தி உற்பத்தியால் பணம் கையில் புரள்வதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இதைத்தாண்டி இப்போது அங்கே மிகப்பெரிய பிரச்னை ஒன்று நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

இதே கிராமத்தைச் சேர்ந்த ரித்திஷ் என்ற விவசாயி, ''பி.டி.பருத்தி போட்டால், நல்ல லாபம் கிடைக்கும்

என்று அரசு அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், ஆரம்பத்தில் அதை நான் நம்பவில்லை. ஒருசில விவசாயிகள் பி.டி. பருத்தி சாகுபடி செய்து லாபம் எடுத்தார்கள். சில ஆண்டுகளிலேயே, அவர்களது வருமானம் கூடியதைக் கண்கூடாகப் பார்த்தேன் அதனால் நானும் பி.டி.பருத்தி சாகுபடிக்கு மாறினேன். ஆரம்பத்தில் எல்லாம், நல்லப்படியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் குறைந்துகொண்டே வருகிறது. அதனால், மகசூலைப் பெருக்க ரசாயன உரம் போட்டு பூச்சிக்கொல்லிகளுக்காக கூடுதலாக செலவு செய்கிறேன். இந்த பி.டி. பருத்தியில் முதல் 10 வருடங்களுக்கு மட்டும்தான் லாபம் கிடைக்கும் என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். பி.டி. பருத்தி போட்ட விவசாயிகள் பலர் இப்போது கடன்காரர்களாக மாறிவருகிறார்கள். பி.டி. பருத்திக்கு பதில் வேறு என்ன பயிரை சாகுபடி செய்யலாம் என்று யோசித்துவருகிறோம்'' என்றார் வேதனையாக.

அதே கிராமத்தைச் சேர்ந்த வன்ராஜ் என்ற விவசாயி பேசும்போது, ''கடந்த 10 ஆண்டுகளாக 25 ஏக்கரில் பி.டி.பருத்தி சாகுபடி செய்துவருகிறேன். ஆரம்பத்தில், ஏக்கருக்கு 30 குவிண்டால் மகசூல் கிடைத்தது. லாபம் கொழித்தது. அதனால் தொடர்ந்து பி.டி.பருத்தியை ஆர்வத்தோடு சாகுபடி செய்தேன். ஆனால், காலப்போக்கில், விளைச்சல் குறையத் தொடங்கியது. கடந்த ஆண்டு, ஏக்கருக்கு 15 குவிண்டால் மகசூல் எடுப்பதற்குள், பெரும்பாடு பட்டுவிட்டேன். இந்த ஆண்டு இதைவிடக் குறைவாகத்தான் கிடைக்கும் போலிருக்கிறது. நெல், கத்திரி, வெண்டை போன்ற பயிர்களை பைசா செலவில்லாமல் இயற்கை முறையில் பயிர் செய்துவருகிறேன். ஆனால், பி.டி.பருத்திக்கு மட்டும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை அளவுக்கு அதிகமாகக் கொட்டுகிறேன். நிலமும் கெட்டு, பணமும் பறிபோகிறது'' என்றார்.

உணவு உற்பத்தி குறைந்தது!

கபில் ஷா என்ற இயற்கை விவசாய ஆர்வலரைச் சந்தித்தபோது, ''பருத்தி சாகுபடியில் மட்டுமே குஜராத் 10 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இந்த மாநிலத்தின் பிரதான பயிரான நிலக்கடலையின் சாகுபடி பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்குத்தான் இங்கே விவசாயம்

சென்றுகொண்டிருக்கிறது. இதுதான் நிஜம். ஒரு பயிரை அழித்துவிட்டு இன்னொரு பயிரை வளர்ப்பது வளர்ச்சி இல்லை. விவசாயத்தை அழித்துவிட்டு தொழிற்சாலைகள் கட்டுவதற்கு பெயர், முன்னேற்றம் இல்லை. வளர்ச்சி என்றால் அனைத்துத் துறைகளும் வளர வேண்டும். விவசாயத்தை அழித்துவிட்டு தொழில் துறை வளர்கிறது என்றால், அதன் பெயர் வளர்ச்சி அல்ல... வீக்கம்!'' என்று சொன்னார்.

இது வளர்ச்சி அல்ல!

விவசாய நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருவது பலத்த எதிர்ப்பைக் கிளப்பிவருகிறது. இப்படி மொத்தம் 5 லட்சம் ஏக்கர் நிலம் விவசாயிகள், மீனவர்களிடம் இருந்து பறித்து தனியார் நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். குஜராத் வித்யா பீடத்தின் துணைவேந்தராக இருக்கும் சுதர்சன அய்யங்காரைச் சந்தித்தோம். ''நமது பண்பாடும் கலாசாரமும் நீர்த்துபோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 1920-ம் ஆண்டு மகாத்மா இந்தப் பல்கலைக்கழகத்தைத் துவங்கினார். 'கிராமங்களில்தான் உண்மையான இந்தியா உள்ளது’ என்று சொன்ன அவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் குஜராத்தின் கிராமங்களை எண்ணி கண்ணீர் சிந்தியிருப்பார். மனிதன் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் வேண்டும். ஆனால், இயற்கையை சிதைக்கும் விதமாக விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களைப் பறித்துத் தனியாருக்குத் தாரைவார்ப்பதை வளர்ச்சி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் மட்டுமே குறிக்கோள் என்றால், வருங்கால தலைமுறைக்கு விஷத்தன்மை கொண்ட மண்ணைத்தான் விட்டுச் சொல்வோம். சாத்தான் வேதம் ஓதுவதைப்போல, இந்த அரசு பருவநிலை மாற்றத்துக்காக ஒரு தனித் துறையை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு சுற்றுச்சூழல் கெட்டுப்போவதற்கு இந்த 'க்ளைமேட் சேஞ்ச் டிபார்ட்மென்ட்' துணைபோவதைப் பார்த்தால், இது எத்தனை பெரிய ஏமாற்று வேலை என்பது புரியும்'' என்கிறார்.

''எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்கிறார்கள்'' என்று மோடி ஒருமுறை சொன்னார். ஆனால், 2003-12 காலகட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குஜராத் மக்களின் சமூக வாழ்க்கை வளர்ச்சி எப்படி இருக்கிறது? கல்வி, சுகாதாரம், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, வறுமை, கழிப்பறை வசதிகள், குழந்தைகளின் படிப்பு சதவிகிதம் போன்றவை எப்படி இருக்கிறது?

தடுப்பணைகள்

நர்மதை கால்வாய் தொடாத கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளில் நிலத்தடி நீரை அதிகப்படுத்த 1,13,738 தடுப்பணைகளும் ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் குட்டைகள் கட்டப்பட்டுள்ளன. மழை நீர் சேமிப்பு திட்டம், சொட்டு நீர் பாசனத் திட்டம் ஆகியவை தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால் நீர் ஆதாரங்களை விவசாயிகள் அங்கே புத்திசாலித்தனத்தோடு பயன்படுத்துகிறார்கள்.

நர்மதை கால்வாய்த் திட்டம்

15 மாவட்டங்கள், 73 தாலுக்காக்கள், 3,112 கிராமங்கள் என்று பரந்து விரிந்திருக்கும் 18 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களுக்குப் பாசனம் செய்வதற்காக உருவானதே நர்மதை கால்வாய்த் திட்டம். 458 கி.மீட்டர் நீளத்துக்குப் பெரிய கால்வாய், 22,284 கி.மீட்டர் நீளத்துக்குக் கிளை கால்வாய்கள் மற்றும் துணை கால்வாய்கள் இதுவரை கட்டிமுடிக்கப்பட்டன.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மோடி ஆட்சியில் கட்டப்பட்டது 20,000 கி.மீட்டர்கள். 'இன்னும் சில மாதங்களில் துணை மற்றும் கிளை கால்வாய்கள் அனைத்தையும் கட்டிமுடித்துவிடுவோம்’ என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

சீனாவுக்கே சவால்!

பருத்தி என்பது கச்சாப் பொருள் மட்டுமே. அதற்கு மதிப்புக்கூட்டினால்தான் கூடுதலாக பணம் சம்பாதிக்க முடியும். அதனால் பருத்தி பயிரிடுவதோடு, அதை நூலாக மாற்றுவது, துணியாக நெய்வது, பிறகு நவநாகரிக ஆடைகளாக மாற்றுவது போன்ற அடுத்தக்கட்ட விஷயங்களும் தங்கள் மாநிலத்திலேயே நடக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் குஜராத் அரசு ஜவுளி கொள்கை பிரகடனத்தையே வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக சீனாவுக்கே சவால் விடும் வகையில் குஜராத்தில் பி.டி.பருத்தி உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் அதிகரித்தது. உலக சந்தையில் பருத்தியின் விலை விர்ர்ர்ர்ர் என்று ஏறியதும்... குஜராத் விவசாயிகள் பருத்திக்கு தாவ காரணமாக அமைந்தது.

''சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது!''

ரோஹித் பிரஜாபதி (காம்தார் யூனியன், பரோடா): ''குஜராத்தின் கிராமப் பகுதிகளுக்கு வாருங்கள் உங்களுக்கு சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று ஏழு நிறத்திலும் நீரை காட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகள் கொடூரமானவை. உதாரணத்துக்கு பரோடா அருகில் உள்ள மூன்று பகுதிகளை எடுத்துக்கொள்ளலாம். வாப்பி, அங்கிலேஷ்வர், பரோடா இந்த மூன்று பகுதிகளும், குஜராத் மாநிலத்தில் செழுமையாக விவசாயம் நடக்கும் பகுதிகள். ஆனால், இன்று அந்த நிலங்கள் அத்தனையும் இங்கே புதிதாக முளைத்த தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுநீரால் பச்சை,

மஞ்சள் என்று வண்ண நிலமாக மாறியுள்ளன. இதுதான், குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் வழியா? சுற்றுச்சூழல் சீர்கேட்டில், நாட்டிலேயே இந்த மாநிலத்தின் வாப்பி பகுதிதான் முன்னிலையில் உள்ளது.''