கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தூக்கிவைத்துக் கொண்டாடிய தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை இப்போது எதிரியாக பார்க்கிறது. 'தேர்தல் கமிஷன் மீது வழக்கு போடுவோம்’ என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் பிரவீன்குமாரை சந்தித்தோம்.

''2011 சட்டசபை தேர்தலைவிட இப்போதைய தேர்தல் நடைமுறை எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது?''

''நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால் முன்பு 49 ஓ பதிவுசெய்ய வேண்டும். இப்போது நோட்டோ வாய்ப்பு உருவாகி இருக்கிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான உறுதி செய்வதற்கான வசதி இந்தத் தேர்தலில் முதன்முறையாக மத்திய சென்னை தொகுதியில் மட்டும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேர்தலில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி முன்கூட்டியே தொடங்கப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் வெப் கேமராக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது. பறக்கும் படைகளின் பங்களிப்பும் கூடுதல் ஆக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆன்லைனின் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். இப்படி நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.''

''தமிழக தேர்தல் வரலாற்றிலேயே 2011 சட்டசபை தேர்தலில்தான் மிக அதிகபட்சமாக 78 சதவிகிதம் அளவுக்கு வாக்குப் பதிவானது. அதை மிஞ்ச டார்கெட் எதுவும் வைத்திருக்கிறீர்களா?''

''இலக்கு எதையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. ஆனால் வாக்குப் பதிவை அதிகரிக்க வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை அதிக அளவில் செய்திருக்கிறோம். பெற்றோர்கள் வாக்களிக்க அவர்களின் குழந்தைகள் வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களிடம் கடிதம் கொடுத்து பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லியிருக்கிறோம். குறும்படங்கள் மூலம் வாக்காளர்களை ஈர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் கல்லூரிகளுக்கும் மேல் தேர்தல் கமிஷனால் அம்பாசிடர்கள் என்கிற தூதர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமும் வாக்களிப்பது தொடர்பான பிரசாரம் நடைபெறுகிறது. ஒரு கோடி செல்போன் நம்பர்களை சேகரித்து வைத்திருக்கிறோம். தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். வாக்குச் சாவடி எங்கே என்பதை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இப்படி நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.''

''தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் வேட்பாளர் பெயரை சொன்னாலோ, கலந்து கொண்டாலோ செலவு கணக்கில் சேரும் என தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்த்திருக்கிறாரே ஜெயலலிதா?''

''தேர்தல் செலவு தொடர்பாக 35 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு ஒன்றில் வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்யும்போது அந்த செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் விதிகள் வகுப்பட்டன. தேர்தல் செலவீனங்கள் பற்றி தனியாகச் சட்டம் உள்ளது. இதுபற்றி புதிதாக எந்த விதிமுறைகளையும் தேர்தல் கமிஷன் இப்போது புகுத்தவில்லை. இது ஏற்கெனவே உள்ள விதிதான். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய உடன் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும். 70 லட்சத்துக்கு மேல் செலவு செய்கிறார்களா என்பதை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். இதற்காக உள்ள குழுக்கள் ஒவ்வொரு வேட்பாளர் என்னென்ன செலவுகளை செய்து வருகிறார் என்பதைத் தனியாக நிழல் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு குறித்து வருகிறது. தேர்தல் கமிஷனிடம் வேட்பாளர்கள் செலவைக் குறைத்துக் காட்டினால் வெற்றிபெற்ற வேட்பாளரின் பதவி பறிபோகும்.''

''தேர்தல் கமிஷன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே?''

''அரசியல் கட்சிகள் விமர்சனங்களை சொல்லட்டும். ஆனால், சட்டத்தின்படி தேர்தல் கமிஷன் நியாயத்தோடு நடந்து கொள்கிறது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தேர்தல் விதிகள் மட்டுமே. அதை முறையாகக் கடைப்பிடிக்கிறார்களாக என்பதைப் பார்க்கிறோம். போட்டியிடுகிறவர்களிடையே சமநிலை இருக்க வேண்டும். தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இது எங்களுக்கு சவாலான பணிதான். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு. சிலர் விமர்சனங்களையும் வைக்கிறார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு அது போதும். வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை மக்கள் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்!''

- எம்.பரக்கத் அலி

படம்: சு.குமரேசன்