சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிட்டார் சேலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ். அதிகாலை வாக்கிங் கிளம்பும்போதே பிரசாரத்தைத் தொடங்கிவிடுகிறார். வாக்கிங் முடித்துவிட்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த சுதீஷிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். உடற்பயிற்சியைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேசினார்.

''பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் இரு துருவங்களாக இருந்த கட்சிகள். இப்போது எப்படி இணைந்து தேர்தல் பணியாற்றுகிறீர்கள்?''

''எங்களுக்குள் எந்த மனஸ்தாபமும் இல்லை. எங்கள் எல்லோருடைய ஒரே நோக்கம், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை மீண்டும் தலைதூக்க விடக்கூடாது என்பதுதான். இந்திய நாட்டுக்கு நல்லாட்சித் தர நினைக்கும் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக எல்லோரும் ஒன்றுசேர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்!

மக்கள் இப்போது மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆண்ட கட்சி, ஆளும் கட்சியின் பணபலம் இந்த முறை எடுபடப்போவது இல்லை. மக்கள் சக்தி முன்பு அவை எல்லாம் தூள் தூளாகிவிடும். மக்களைக் காலம் காலமாக ஏமாற்றும் அந்த இரண்டு கட்சிகளின் மோசடி வேலைகள், மோடி எனும் மந்திரச்சொல் முன்பு எடுபடாது. இதுதான் தமிழ்நாடு முழுக்க இருக்கும் யதார்த்த நிலை.''

''முரண்பாடுகளின் மொத்த உருவமே உங்கள் கூட்டணிதான் என்று பேச்சுகள் வருகிறதே?''

''ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்... வளர்ச்சி என்பது வேறு. வீக்கம் என்பது வேறு. எங்கள் கூட்டணி வளர்ச்சியான கூட்டணி. அவர்கள் கூட்டணி தளர்ச்சியான கூட்டணி. கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் பிடியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் எல்லோரும் ஒரு மையப்புள்ளியில் ஒன்றுசேர்ந்திருக்கிறோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சாதனை படைத்தவருக்கு மீண்டும் நீலகிரியில் சீட் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. இதைப்பார்த்து ஊர் உலகமே சிரிக்கிறது. அந்தப் பக்கம் பார்த்தீங்கன்னா ஜெயலலிதாவைக் குஷிப்படுத்த ஆட்டு மந்தைகளைப்போல மனிதர்களை வாடகைக்குப் பேசி கூட்டிட்டு வர்றாங்க. காங்கிரஸைப் பார்த்தீங்கன்னா அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய் போல சிதறிக்கிடக்கிறாங்க. உலக அரசியல், பொருளாதாரத்தைப் பற்றிப் பேசும் மேதை சிதம்பரம் தேர்தலில் போட்டியிடாமப் பதுங்குறாரு... ஒதுங்குறாரு... தவிக்கிறாரு! இதை எல்லாம் மாற்றுவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஆதரிப்பார்கள்.''

''தே.மு.தி.க-வில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறதே?''

''கேப்டன் அவர்கள் எந்தப் பின்னணியும் இல்லாத சாதாரண மனிதர்களை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார். சில சந்தர்ப்பவாதிகள் சுயநலத்துக்காக முகாமுக்கு முகாம் தாவுகிறார்கள். இது அரசியலில் புதிதல்ல. அவர்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. உண்மையானவர்கள் எப்போதும் கேப்டன் பக்கம் இருப்பார்கள்!''

''தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் நீங்கள் தவிர்த்தது ஏன்?''

''வறுமையையும் ஊழலையும் ஒழிப்பதுதான் எங்கள் கட்சியின் தாரக மந்திரம். அதை மனதில் சுமந்தபடிதான் கேப்டன் முதல் எங்கள் கட்சியில் உள்ள அடிமட்டத் தொண்டன் வரை வலம் வருகிறோம். அப்படி இருக்கும்போது ஊழல் கட்சிகளின் அழைப்பை எப்படி ஏற்க முடியும்?''

''அப்புறம் எதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தீர்கள்?''

''பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக மக்களின் நலனுக்காக சந்தித்தோம். அவரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் ஒருசில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக பிரதமரும் சொன்னார். தமிழக முதல்வர் தமிழ்நாட்டுக்குத் தேவையானதை மத்திய அரசிடம் இருந்து கேட்டிருந்தால், நாங்கள் எதற்கு பிரதமரைச் சந்திக்கப்போகிறோம்? கடிதம் எழுதிக்கொண்டு இருந்தால் மட்டுமே வேலை நடந்துவிடாது. நாம் நேரில் செல்ல வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்கள் கேப்டன் அதைச் செய்தார். மக்கள் நலனுக்காக யாரைச் சந்திக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.''

''அன்புமணியை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?''

''அன்புமணி அன்பான மனிதர். அவரிடம் நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசினேன். ஒவ்வொரு தேர்தலிலும் தே.மு.தி.க-வையும் சரி... பா.ம.க-வையும் சரி தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் பசப்பு வார்த்தைகளைப் பேசி கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு வெற்றிபெறுகிறார்கள். வெற்றிபெற்றதும் நன்றியை மறந்துவிடுகிறார்கள். எங்களையே அழிக்கவும் நினைக்கிறார்கள். இனி அது நடக்காது. நடக்கவும் விடக்கூடாது என்று அவரிடம் சொன்னேன். அவரும் அதை ஆமோதித்தார். இனி ஊழல்வாதிகளையும் மக்கள் துரோகிகளையும் அழிக்க... நாங்கள் கைகோத்து செயல்படுவோம்!''

''சேலத்தில் போட்டியிட என்ன காரணம்?''

''சேலத்துக்கும் எனக்கும் 20 ஆண்டுகாலத் தொடர்பு உள்ளது. 2009 கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டேன். அதில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் சேலம் மாவட்டத்தில்தான் வந்தது. அந்த சமயத்தில் இருந்தே சேலம் மீது எனக்குத் தனிப்பாசம் உண்டு. தமிழ்நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் சேலம்தான். அதனால்தான், இந்த முறை சேலத்தில் போட்டியிட விரும்பினேன். நான் ஜெயித்ததும் பிரதமராகப் பதவியேற்கப்போகும் மோடியிடம் பேசி, சேலத்துக்கு சவாலாக இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் தீர்த்துவைப்பேன்.''

- வீ.கே.ரமேஷ்

படம்: எம்.விஜயகுமார்