வெளுத்து வாங்கும் தர்மபுரி வெயிலில் சளைக்காமல் சுற்றுகிறார் அன்புமணி ராமதாஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே தர்மபுரியில் வீடுபார்த்து குடிபுகுந்துவிட்டார். ''மேட்டூர் தொகுதி பிரசாரத்துக்குக்

கிளம்புறேன். கார்ல போய்ட்டே பேசலாமா?'' என்று அன்புமணி அழைக்க... நாமும் கிளம்பினோம். அன்புமணியே ஆரம்பித்தார்.

''தர்மபுரியில் எனக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. படித்த இளைஞர், டாக்டர் என்பதைத் தெரிந்து... போகும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுக்கிறார்கள். நான் ஜெயித்ததும் என் முதல் வேலை, தர்மபுரியை அமைதியான மாவட்டமாக உருவாக்குவதுதான். தர்மபுரி மாவட்டத்து மக்கள் சுமார் 5 லட்சம் பேர் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குப் போகிறார்கள். அவர்களுக்கு இங்கேயே தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்போகிறேன். தர்மபுரியை எடுத்ததும் துபாய் மாதிரி மாற்ற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன்!'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, மீண்டும் திராவிடக் கட்சிகளோடு கைகோத்து தேசியக் கட்சியில் கூட்டணி சேர்ந்துவிட்டீர்களே?''

''உண்மைதான்! இப்போது மக்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க. மீது அளவுகடந்த வெறுப்பு இருக்கிறது. இவர்களுக்கு மாற்றாக 47 வருடங்களுக்குப் பிறகு புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் தனியாக நின்றால், வாக்குகள் சிதறும். அது தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு சாதகமாகிவிடும். அதைத் தவிர்க்கவே இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளோம். இப்போது எங்களின் பொது எதிரி தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான். அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன்தான் எங்கள் பயணம் இருக்கிறது.''

''இந்தக் கூட்டணியில் உங்கள் அப்பா டாக்டர் ராமதாஸுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்கிறார்களே?''

''ஐயாவுக்கு இந்தக் கூட்டணியில் உடன்பாடு இருக்கிறது. சில வருத்தங்களும் இருக்கிறது. அதை என்னால் மறுக்க முடியாது. தொகுதி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அவர் நினைத்திருக்கலாம். சேலம் உட்பட நாங்கள் வேட்பாளர் அறிவித்த தொகுதிகள் கிடைக்கவில்லை. ஆனாலும், அதையெல்லாம் ஐயா மறந்து இப்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.''

''வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஆறு மாத காலம் பிரசாரம் செய்த சேலம் அருள் வருத்தத்தில் இருக்கிறாரே?''

''கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைப் பற்றி வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. சில நிர்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அருளுக்கு சேலம் கிடைக்காமல் போனது எனக்கும்கூட மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது!''

''பல தொகுதிகளில் பா.ம.க., தே.மு.தி.க-வைச் சேர்ந்த அடிமட்டத் தொண்டர்கள் இணைந்து வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''

''இது வீண் வதந்தி. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அனைத்து தொண்டர்களும்

ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் இணைந்துதான் செயல்படுகிறோம்.''

''வன்னியர்கள் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்கிறீர்கள். அப்புறம் அந்நியர்கள் ஓட்டு எப்படி வன்னியருக்கு விழும்?''

''இது, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி படையாச்சியார் இருந்தபோது சொல்லப்பட்டது. இப்போது யாரும் அப்படிச் சொல்வது இல்லை. பா.ம.க. என்பது அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபடும் பாட்டாளிச் சொந்தங்களின் கட்சி. இதில் எல்லாத் தரப்பு மக்களும் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில் பொதுச்செயலாளரே தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்!''

''சாதி கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட பா.ம.க. அரசியல் கட்சியாக உருவெடுத்து மீண்டும் சாதி கட்சியாக மாறிவிட்டது என்று ஜான் பாண்டியன் பேசியிருக்கிறாரே?''

''வேறு கட்சியைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு இப்படிப் பேசும் தகுதி அவருக்கு இல்லை.''

''பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் மீனவர் பிரச்னை பற்றியோ, ஈழத்தமிழர் பிரச்னை பற்றியோ எதுவும் இல்லையே?''

''பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை வேறு. எங்கள் தேர்தல் அறிக்கை வேறு. கூட்டணி ஒன்றாக இருந்தாலும், கட்சிகளுக்குக் கட்சி தேர்தல் அறிக்கை மாறும். தமிழ்நாட்டில் நாங்கள் அவர்களுக்கு நட்பாக இருக்கிறோம். அவர்களால் தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால், நிச்சயம் அதை நாங்கள் சுட்டிக்காட்டுவோம். தேவைப்பட்டால் கடுமை காட்டுவோம். நிச்சயம் காங்கிரஸைவிட மோடி சூப்பராக ஆட்சி செய்வார். மோடி பிரதமர் ஆனதும், தமிழக மீனவர் பிரச்னையையும் ஈழத்தமிழர் பிரச்னையும் நிச்சயம் தீர்த்துவைப்பார்.''

''தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?''

''அ.தி.மு.க-வில் யாரும் கூட்டணி கிடையாது. அவர்கள் பணத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அந்த அம்மையார் மட்டும் தினமும் ஹெலிகாப்டரில் பறக்கிறார். மக்களை சுட்டெரிக்கும் வெயிலில் உட்காரவைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். அ.தி.மு.க-வால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சி என்றால், விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். திருமாவளவன் பெயரைச் சொன்னாலே மக்கள் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். இந்த முறையும் ஏமாற, மக்கள் முட்டாள்கள் கிடையாது.

இந்த இரண்டு கட்சிகளுமே எங்களுக்கு வேண்டாம். மோடிதான் வேண்டும் என்ற முடிக்கு மக்கள் வந்துவிட்டார்கள். அதனால், எங்கள் கூட்டணி அதிக இடங்களில் ஜெயிக்கும். இந்தத் தேர்தலோடு அந்த இரண்டு கட்சிகளும் வீழ்ந்துபோகும்!''

''உங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்திருக்கிறதே?''

''அரூர் அருகே உள்ள பெத்தூரில் நான் வாக்கு கேட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். சாலையில் வேகத்தடை இருந்தது. கார் மெதுவாகச் சென்றபோது, சாலை ஓரத்தில் கையில் தடியும் கல்லுமாக 20 பேர் நின்றிருந்தார்கள். என் காரை நோக்கி அவர்கள் கற்களை வீச ஆரம்பித்தார்கள். ஒரு கல் என் முகத்துக்கு நேராக வந்தது. அது கார் கண்ணாடியில் பட்டு உடைந்து நொறுங்கியது. என் தலை தப்பியது ஏதோ புண்ணியம்தான்! போலீஸ் வந்தது. விசாரணை நடந்தது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவரை மட்டும் போலீஸ் கைது செய்திருக்கிறது. என் அரசியல் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும் என்றுதான் இப்படிச் செய்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பயப்படும் ஆள் இல்லை. என்னோடு என் மக்கள் இருக்கிறார்கள். எமனே வந்தாலும் எதிர்த்து நிற்பேன்!''

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்