தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பிரசார லகான் ஜி.கே.வாசன் வசம் வந்துவிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பயணம் போய் வருகிறார் அவர். இது அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உற்சா கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தேனியில் பிரசாரத்துக்கு வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனைச் சந்தித் தோம்.

''தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு சீட்கூட கிடைக்காது என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றனவே. எந்த நம்பிக் கையின் அடிப்படையில் மக்களிடம் பிரசாரம் செய்கிறீர்கள்?''

''ஒரு சீட்கூட கிடைக்காது என்பவர்கள் சோதிடர்களாக இருக்கக் கூடும். சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. மத்திய அரசின் திட்டங்களை வைத்தே மக்களிடம் நாங்கள் அணுகுகிறோம். இந்திய மக்களுக்காக, குறிப்பாக தமிழக மக்களுக்கான ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. அதனை மக்கள் மன்றத்தில் பிரசாரம் செய்கிறோம். அதேபோல் வாக்குக் கேட்டுவரும் பி.ஜே.பி-யின் மதவாத அரசியலை மக்கள் சரியாக அடையாளம் காண வேண்டும் என்பதும் எங்கள் பிரசாரத்தின் நோக்கம். தேர்தல் நடப்பதற்கு முன்னால் தீர்ப்புகளைச் சொல்பவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?''

''ஈழத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரம் என்று காங்கிரஸ் தலைமையின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களே?''

''மீனவர்களின் பிரச்னையை முக்கியமாகக் கருதி அவர்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறது. இலங்கைக் கடற்படை செய்யும் தவறுகளைக் கண் டித்து அவர்களை அடக்கிவைத்தது. இரு தரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடக்க மத்திய அரசுதான் காரணம். இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாததற்கு, மாநில அரசுதான் காரணம்.''

''மத்திய அரசு இந்த பிரச்னைகளுக்கு என்னதான் செய்திருக்கிறது?''

''இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இன்னும் வீடுகளுக்குச் செல்லவில்லை. ராணுவப் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்களை விடுவிப்பது இந்தியாவின் கடமை. சிங்களர்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமை, பாதுகாப்பு, நல்வாழ்வு... எல்லாமும் தமிழருக்குக் கிடைக்க மத்திய அரசு படிப்படியாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு நடுவே மீனவர் பிரச்னை வந்துவிட்டது. மீனவர் பிரச்னையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. அதனால், இங்கு இருக்கும் மற்ற அரசியல் கட்சிகள் மத்திய அரசை குறைகூறி ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைக்கின்றன. இதுவரை இலங்கைத் தமிழர்களுக்கு 6,500 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது இந்தியா. ஜெனீவாவில் இந்தியா நடுநிலைமையாக இருந்ததால்தான், இந்த உதவியைச் செய்ய முடிந்தது. இந்தியாவின் நோக்கம் அங்கு வாழும் மக்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதுதான். இங்கு இருக்கும் ஒட்டுமொத்த தமிழக கட்சிகள், இதை அரசியல் ஆக்குகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் மீனவர்களுக்கும் மத்திய அரசு செய்கிற நன்மைகளைத் தடுக்கும் வகையில், தமிழக அரசியல் கட்சிகள் சில அநீதி இழைக்கின்றன. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.''

'காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் மத்திய ஆட்சியில் நிலக்கரி, பாதுகாப்புத் துறை, ராணுவத்தில் நடந்த ஊழல்கள் பற்றியும் ஜெயலலிதா பேசிவருகிறாரே?''

''ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவது நாட்டுக்கு நல்லது அல்ல. அவருக்கும் நல்லது அல்ல. எதையாவது பேசி நாட்டின் ஸ்திரத் தன்மையைக் குலைக்கப் பார்க் கிறார்கள். எங்கள் பிரசாரத்தில் உண்மை நிலையை எடுத்துச் சொல் கிறோம். மக்கள்தான் எஜமானர்கள். அவர்களின் முடிவு தான் இறுதியானது.''

''காங்கிரஸ் கட்சியுடன் யாரும் கடைசி வரை கூட்டணி வைக்க முன்வரவே இல்லையே ஏன்?''

''காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை மகிழ்ச்சியாக, நிம்மதியாக சந்திக்கிறது. கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் இதை மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள். மத்திய அரசின் சாதனைகளை யாருடனும் பங்குபோடாமல் மக்களிடம் கொண்டுசென்று வாக்கு கேட்கிறோம். அதனால் எங்களுக்கு மகிழ்ச்சியே.''

''உங்களின் ஆதரவாளர்களுக்கு சீட் தரப்படவில்லை என்று சொல்கிறார்களே?''

''காங்கிரஸ் கட்சியின் அத்தனை வேட்பாளர்களும் ஜெயிக்க பிரசாரம் செய்துவருகிறேன். இதில் என் ஆதரவாளர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லை.''

'உங்கள் நண்பர் விஜயகாந்த் வகிக்கும் கூட்டணி பற்றி?''

''இது போர்க்களம். எதிர்த்துப் போட்டியிடுபவர்களை நண்பர் என்று பார்ப்பது இல்லை.''

''அ.தி.மு.க-வின் மூன்று வருட ஆட்சியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜெயலலிதா செயல்படவில்லை. மத்திய அரசு கொடுத்த பல கோடி நிதிகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார். இதுதான் அவரின் ஆட்சி நிர்வாகம்.''

''பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தீர்களா?''

''பொது சிவில் சட்டம், பாபர் மசூதி விவகாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது போன்றவை பி.ஜே.பி-யின் சுயரூபத்தை, அவர்களின் மதவாதத்தைக் காட்டுகிறது'.

''சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறதே?''

''இந்தத் திட்டம் தமிழகத்துக்கு மட்டும் வளம் சேர்க்கும் திட்டம் அல்ல. இந்தியாவின் பொருளாதாரத்தையே உயர்த்தும் நல்ல திட்டம். பி.ஜே.பி., அ.தி.மு.க. தலைவர்களைத் தவிர மற்ற அனைத்துப் பெரிய கட்சிகளின் தலைவர்கள் எல்லாரும் ஒரே மேடையில் நின்று இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்து உள்ளனர் என்பதை இங்கு நினைவு கூர்கிறேன்.''

''10 வருடங்களாக மத்திய அரசின் அமைச்சராக இருந்தும் இன்னும் ஏன் இந்தத் திட்டத்தை முடிக்க முடியவில்லை?''

'சேது திட்டம் முழுமையான முறையில் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்று ஆரம்பித்தத் திட்டம். இந்தத் திட்டம் ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளுக்குள் பி.ஜே.பி., உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைப் போட்டு, அதை வேண்டுமென்றே தடுக்க நினைத்தனர். காலப்போக்கில் மதவாதத்தில் இருக்கும் பலர் தொடர்ந்து வழக்குகளைப் போட்டு திட்டத்துக்குத் தடை ஏற்படுத்தினார்கள். இறுதியாக தமிழக அரசே தமிழக மக்களுக்கு கிடைக்கக் கூடிய திட்டத்தை முடக்கும் வகையில் மதவாதத்தோடு இணைந்து ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, இதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. உண்மை நிலையை விளக்கி, பிரமாணப் பத்திரமாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ளது. கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.''

''காங்கிரஸ் ஆட்சியில் நடந்த முக்கியமான மூன்று நல்ல திட்டங்கள் சொல்ல முடியுமா?''

''100 நாள் வேலைத் திட்டம், அனைவருக்கும் கட்டாயக் கல்வி, உணவுக்கு உத்தரவாதம்.''

''இன்றையப் பொருளாதார சூழலில் இது மட்டும் போதுமா, மக்களுக்கு?''

''வேலை, கல்வி, உணவு போன்ற அடிப்படை வசதி இல்லாத மக்களுக்கான அடித்தளமான திட்டம் இது. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தால் ஐந்து கோடி குடும்பங்கள் பயனடைகிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.''

''அரவிந்த் கெஜ்ரிவால் போகும் இடமெல்லாம் தாக்குதலும் தடைகளும் இருக்கும்போது அவருக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை?'

''அரவிந்த் கெஜ்ரிவால், தலைவர் என்ற ஸ்தானத்தையே இழந்து பல நாட்கள் ஆகிவிட்டது. தேர்தலுக்காக, தனது அரசியல் கட்சியின் விளம்பரத்துக்காக, லாபத்துக்காகப் பல வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார். அதனால், அவருக்கு எந்த ஒரு மரியாதையும் மக்களிடத்தில் இல்லை.''

'முன்னாள் முதல்வர் என்பதற்காவது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கலாமே?'

'முன்னாள் முதல்வருக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கடிதம் கொடுத்தால், அரசாங்கம் பாதுகாப்பு கொடுக்கும். யாரையாவது அறையச் சொல்லி அவரே விளம்பரம் தேடிக்கொண்டால் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது. அவர் பொலிட்டிகல் சர்க்கஸ் பண்ணுகிறார். இந்த மாதிரி சர்க்கஸ்காரர்களுக்கு இந்திய அரசியலில் இடமில்லை. மன்மோகன் சிங் போன்ற சாதனையாளர்களையே மக்கள் விரும்புவார்கள்!''

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி