இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஜரூராக தேர்தல் சுற்றுப் பயணத்தில் இறங்கிவிட்டார். அண்ணாநகரில் அவரது இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''மோடி அலையால் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார்களே?''

''அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுகிற, அதில் வெளியிடுகிற கருத்துகள் எல்லாமே வரலாற்றுப் பிழைகள். அவரை மலிவான தேர்தல் கால அரசியல்வாதியாக மட்டுமே காட்டுகிறது. அவர் குஜராத்தில்

தொடர்ந்து முதல்வராக இருப்பதால், அவர் அங்கு செய்த செயல்களை வைத்தும் மதிப்பிட வேண்டும். அங்கு 2002-ல் நடைபெற்ற சிறுபான்மையினர் அழிப்புச் சம்பவங்கள் பலவகையான கோர வழக்குகளாக வந்தன. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அச்சுறுத்துவதற்கு மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியதற்கு சாட்சியாக நிற்கிறது.

இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது ஒரு அனுதாப அலை வீசியதைக் கண்டோம். அதன் விளைவுதான் 400 தொகுதிகளுக்கு மேல் ராஜீவ் காந்தி பெற்றார். அதேபோல வங்கதேசம் உதிக்க இந்திரா உதவினார் என்றபோது எழுந்தது அலை. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் அரசுடமை என்று இந்திரா எடுத்த நடவடிக்கைகளால் ஒரு அலை எழுந்ததைக் கண்டோம். ஆனால், அப்போதெல்லாம் அந்த அலை நீரை, வரப்பு எழுப்பி வயலுக்குக் கொண்டுபோய் சேர்க்க காங்கிரஸ் கட்சிக்குத் தொண்டர்கள், மக்கள் ஆதரவு இருந்தது. இப்போது அலையே வீசினாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ள ஊருக்கு நான்கு பேர் காங்கிரஸிலும் இல்லை; பாரதிய ஜனதாவிலும் இல்லை.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பி.ஜே.பி. கடந்த தேர்தலில் பெற்றதைவிட மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெறலாம். காங்கிரஸ் சில தொகுதிகளை இழக்கலாம். இவை இரண்டையும் நீக்கிப் பார்த்தால் மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள் இந்த இரண்டு கட்சிகளையும்விட அதிக இடங்களைக் கைப்பற்றும். ஆனால், ஒரே குழு என்று சொல்ல முடியாது. ஆக, மூன்று பேராலும் தனித்து ஆட்சி அமைக்க இயலாது. ஆகவே, ஆட்சி அமைக்க விரும்புகிறவர்கள் யாரை சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட மறு விநாடியே தொடங்கிவிடும்.''

'அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட்களை ஜெயலலிதா கழற்றிவிட்டாரே?

''பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் முதலில் உதவி கேட்டு, ஆதரவு கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினரைத்தான் தேடிவருவார்கள். ஆனால், ஊரில் தீப்பற்றினால் தீயை அணைக்க அழைப்பை எதிர்பாராமல் ஓடி பணிபுரிவதுதான் கம்யூனிஸ்ட்களின் வரலாறு. அந்த வகையில் தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது அதற்கு ஆதரவு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தவரே எங்கள் தலைவர்கள் கல்யாணசுந்தரமும் பாலதண்டாயுதமும்தான். அவர்களுடன் இருந்தவன் நான்.

'எம்.ஜி.ஆர். கம்யூனிஸ்ட்களை வளர்த்துவிடுகிறார். அதன் விளைவுகளை அவரே பின்னர் அனுபவிப்பார்’ என்று கலைஞர் அன்று அறிக்கைவிட்டார். எம்.ஜி.ஆருக்கு வேறு பல கட்சிகளின் தலைவர்களும் கம்யூனிஸ்ட்களை விட்டு தனித்துச் செல்லும்படி புத்தி கூறினார்கள். 'மக்களின் மகத்தான ஆதரவு இருக்கும்போது அதிக மக்கள் ஆதரவு இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளை ஏன் கட்டி அழுகிறீர்கள்’ என்று எம்.ஜி.ஆரிடம் ஒரு திரைப்பட முதலாளி கேட்டபோது, நானும் மறைந்த நண்பர் ஆண்டித்தேவரும் அங்கேதான் இருந்தோம். எங்களை அடையாளம் தெரியாததால் 'கம்யூனிஸ்ட் உறவு வேண்டுமா... வேண்டாமா?’ என்ற விவாதம் பலமாக நடந்தது. அவர் சொன்னதை உள்வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர்., 'ஒரு குடம் பாலை வெறும் பாலாக வைத்துக் கொண்டிருந்தால் அது தானாகத் திரிந்து போய்விடும். எனவே, மக்கள் ஆதரவு என்ற பால், குடம் நிறைய இருக்கிறபோதே அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி காபி தூள் போட்டால் காபி. தேயிலை போட்டால் தேநீர்... ஹார்லிக்ஸ், போன்விட்டா என பாலில் சுவை ஏற்றுவதைக் கண்டிருப்பீர்கள். ஒரு கரண்டி காபித் தூளை போட்ட பிறகுதான் அது பால் என்ற பெயரை மறைத்து காபி என்றாகிறது. அது போலத்தான் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு. அது ஒரு ஸ்பூன் ஹார்லிக்ஸ் மாதிரி’ என்று சொன்னார்.

ஒரு வசதி படைத்த கட்சியுடன் உறவுகொண்டால் எவ்வளவு வசதிகள் அவருக்கு வரும் என்று அந்த நண்பர் வர்ணித்தபோது, அதற்கும் அந்தப் பால் குடத்தையே உதாரணமாகச் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ஒரு குடம் பாலில் ஒரு துளி மோர் விழுந்தாலும் அது தயிராகிவிடும். அதைக் கடைந்தால் வெண்ணெய் வரும். வெண்ணையை உருக்கினால் நெய் நறு மணத்தோடு வரும். இதற்குப் பதில், ஒரு குடம் பாலில் ஒரு பல்லி விழுந்தால்? பாலும் பாழ்பட்டுப் போய்விடும். கம்யூ னிஸ்ட்களை தயிராக்கி நெய் கிடைக்க உதவும் மோர் ஆக நினைக்கிறேன். நீங்கள் துளி விஷத்தைப் போடப் பார்க்கிறீர்கள். அது என்னை நம்பும் மக்களுக்கு நான் காட்டும் தவறான வழியாகிவிடும். மக்களுக்கு வழிகாட்டும் நடிகனாக இருக்க விரும்புவதால் தோழர்களைத்தான் நம்புகிறேன். நான் ஜீவாவுடன் பழகியவன். வீடு கட்டித் தருகிறேன் என்று கூறியபோது தனக்கு வேண்டாம் என்று மறுத்தவர் அந்த மாமனிதர். அவர் வளர்த்த கட்சிக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று முடித்தார்.

இந்த வாதங்களைக் கேட்கும் வாய்ப்பு அம்மையாருக்குக் கிடைக்காமல் போனது, தமிழ்நாட்டு வரலாற்றுக்கு ஒரு விபத்தாக ஆகிவிட்டது. இப்போது அவர் ஏன் உங்களை விட்டுப் போனார் எனப் பலரும் கேட்கிறார்கள். இதற்கான உண்மை விளக்கத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும். டெல்லி மாநிலங்களவைக்கு சில வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். மறுநாள் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை கட்சியில் இருந்தே நீக்கினார். இது ஏன், எதனால் என்று கேட்டு பதிலைப் பெற முடியாதோ அதே வழியில்தான் இந்தக் கூட்டணி முயற்சியும்.''

''இந்தத் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?''

''தி.மு.க-வுக்குத் தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது நம்பகத்தன்மை தருகிற சூழ்நிலை வந்திருப்பது உண்மை. அ.தி.மு.க. எடுத்த நிலை காரணமாக தி.மு.க-வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு பெருகி இருப்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே, தொடக்கத்தில் இருந்ததைவிட இப்போது தி.மு.க. முன்னேறி இருக்கிறது. அதேபோல தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அ.தி.மு.க-வுக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் தந்த ஆதரவு என்பது கரைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி வெற்றிபெற மாட்டோம் என்பதை அவர்களாகவே அறிவித்துவிட்டார்கள். தமிழகத்தில் சமூக சேர்க்கை காரணமாக பி.ஜே.பி. ஓரிரு இடங்களில் வெற்றி பெறக் கூடும் என்று நானும் நினைத்தது உண்டு. ஆனால், அவர்களின் தேர்தல் அறிக்கைக்குப் பின், தமிழகத்தில் அவர்களும் அவர்களோடு கூட்டுசேர்ந்தவர்களும் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கம்யூனிஸ்ட் இயக்கம் அமைத்துள்ள அணி அனைத்து இடங்களிலும் ஜெயிக்கும் என்று வீர வசனம் பேச மாட்டேன். ஏனென்றால், தேர்தல் என்பது பணம் புழங்கும் அரசியல் சந்தை. கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைக் கைப்பற்ற சில்லறை வியாபாரிகள் தமிழில் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த சில்லறை வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்ததை குஜராத் மொத்த வியாபாரியிடம் முழுமையாக விற்கப்போகிறார்கள். இதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.''

-எஸ்.முத்துகிருஷ்ணன், படம்: வீ.நாகமணி