''போயஸ் கார்டன் பட்டாசு சப்தத்தைக் கேட்டுவிட்டு, பி.ஜே.பி அலுவலகமான கமலாலயத்தின் சந்தோஷக் காட்சிகளையும் பார்த்துவிட்டு வருகிறேன்''- என்றபடி உள்ளே வந்தார் கழுகார்!

''மத்தியில் மாபெரும் ஆட்சி மாற்றத்தை மக்கள் நடத்திக் காட்டிவிட்டார்கள். கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பி.ஜே.பி பெறலாம் என்ற கணிப்பை மீறி, தனிப்பட்ட முறையிலேயே ஆட்சி அமைக்கும் பலத்தை பி.ஜே.பி அடைந்துவிட்டது. இத்தனை இடங்கள் வரும் என்று பி.ஜே.பி தலைவர்கள்கூட நினைக்கவில்லை. 272 என்றுதான் ராஜ்நாத் சிங் தேர்தலுக்கு முன்னதாக தனது விருப்பத்தைச் சொல்லியிருந்தார். 'கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து வேண்டுமானால் 272-ஐ பிடிக்கலாம்’ என்றார்கள். 'எங்களுக்கு 300 தொகுதிகள் தாருங்கள்’ என்று நரேந்திர மோடி கேட்டாலும், 'மாயாவதி, மம்தா, ஜெயலலிதா போன்ற அனைவரும் நிலையான ஆட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்று சொன்னார். பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இவர்களது ஆதரவைப் பெற வேண்டி இருக்கும் என்ற தயக்கத்துடன்தான் மோடி இப்படிச் சொன்னார். இதனை உடனடியாக மம்தாவும் மாயாவதியும் நிராகரித்தனர். ஜெயலலிதா மட்டும்தான் கருத்துச் சொல்லவில்லை. அந்த அளவுக்குத் தயக்கம் மோடிக்கே இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அவர்களுக்கே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. இது தனிப்பட்ட மோடிக்கு கிடைத்த வெற்றியாக மாறிவிட்டதை பி.ஜே.பி தலைவர்கள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது!''

''ம்!''

''கடந்த ஒரு வாரமாகவே ஆட்சி அமைந்தால் எப்படிச் செயல்படுவது என்பதற்கான முஸ்தீபுகளை டெல்லியில் மோடி தொடங்கிவிட்டார். அந்தக் கட்சி சார்பாக நடத்தப்பட்ட திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, நிதின் கட்கரி, அருண் ஜெட்லி ஆகிய நால்வர் மட்டுமே பங்கேற்றனர். அத்வானியும் இல்லை. முரளிமனோகர் ஜோஷியும் இல்லை. சுஷ்மா ஸ்வராஜும் இல்லை. நரேந்திர மோடி பிரதமராக ஆகிறார் என்றால்... அத்வானி, ஜோஷி ஆகிய இருவருக்கும் என்ன பதவியைக் கொடுப்பது என்பதுதான் இப்போதைய சிக்கல். அத்வானி, ஜோஷி ஆகிய இருவருமே மோடிக்கு சீனியர்கள். மோடிக்குக் கீழே இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இருக்க முடியாது. அதனால், இருவருக்கும் மரியாதைக்குரிய பதவிகளைத் தர வேண்டும் என்று நினைக்கிறது பி.ஜே.பி. இப்போது சோனியா வகிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற பதவியை அத்வானிக்குத் தரலாம் என்றும், ஜோஷிக்கு சபாநாயகர் பதவியைத் தரலாம் என்றும் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் ஜோஷியால் அந்தப் பொறுப்பில் செயல்பட முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. டெல்லி பி.ஜே.பி என்பது இதுவரை அத்வானியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அது இப்போது முழுமையாக மோடி கட்டுப்பாட்டுக்கு வரப்போகிறது. இதில் எந்த தலை உருளப்போகிறது, யார் யார் தப்பிப்பார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்'' என்ற கழுகார், தமிழக நிலவரங்களுக்கு வந்தார்!

''ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதனைவிடக் கூடுதலான வெற்றியைப் பெற்றுவிட்டார். 'நமக்கு 33 இடங்கள் நிச்சயம்’ என்று அவர் சொன்னதை, நான் உமக்குச் சொல்லி இருந்தேன் அல்லவா? 7.5.14 தேதியிட்ட இதழில் நீரே அதனை கட்டம் கட்டி வெளியிட்டு இருந்தீர். '33 இடங்கள் நிச்சயம் கிடைக்கும் நம்பிக்கையுடன் சொல்கிறாராம் முதல்வர் ஜெயலலிதா. அவரது கணக்குப்படி ஏழு இடங்கள்தான் மற்ற கட்சிகள் ஜெயிக்குமாம். நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தி.மு.க-வுக்கும், கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய இரண்டு தொகுதிகள் பி.ஜே.பி-க்கும் கிடைக்கும். விருதுநகரில் வைகோ, தர்மபுரியில் அன்புமணி ஆகிய இருவரும் ஜெயிப்பார்கள். புதுவையை என்.ஆர்.காங்கிரஸ் பிடிக்கும். இந்த ஏழு தொகுதிகள் நீங்கலாக அனைத்திலுமே இரட்டை இலைதான் ஜெயிக்கும்’ என்று முதல்வர் சொல்லிவந்ததை நான் சொல்லியிருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், கோவை, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க முன்னிலையில் இருக்கிறது. புதுவையை என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றும் நிலைமை இருக்கிறது. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலையில் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தொகுதிகளை இறுதியில் அ.தி.மு.க கைப்பற்றிவிடும்!''

''இவ்வளவு வெற்றியை முதல்வரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அல்லவா?''

''ஆமாம்! அவர் ஒரு லாஜிக் சொல்லிவந்தார். 'தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகிறது. பி.ஜே.பி சில கட்சிகளை சேர்த்துக்கொண்டு நிற்கிறது. இப்படி நால்வரும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்தால் நமக்கு வசதி. எளிதில் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்று சொல்லிவந்தார். 'மோடி அலை தமிழகத்தில் ஓரளவு இருந்தாலும், அது வெற்றிபெறும் அளவுக்கு இருக்காது’ என்று சொல்லிவந்தார். இந்தத் தேர்தலில் அவருக்கு ஒரு இலக்கு இருந்தது. தி.மு.க., தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு சீட்கூட ஜெயிக்கக் கூடாது என்று சொல்லிவந்தார். கொடநாட்டில் தங்கி இருக்கும்போது இதைத்தான் சொல்லிவந்தார். அங்கிருந்தபடி மம்தா, நவீன்பட்நாயக் போன்ற தலைவர்களுடன் பேசிவந்தார். 'தேசிய அளவில் பி.ஜே.பி கூடுதல் இடங்களைப் பெறும். ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு 272-க்கு மேல் பெற முடியாது’ என்றே இந்தத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிவந்துள்ளார்கள். அப்போது தாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, மத்தியில் மூன்றாவது அணியின் ஆட்சியை அமைக்க வேண்டும், அதற்கு காங்கிரஸின் தயவை வாங்க வேண்டும் என்றும் பேசிவந்தார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் அன்றைய தினம் காலையில்கூட, 'தமிழகத்தில் நாம்தான் அதிகம் ஜெயிப்போம். ஆனால், மத்தியில் என்ன நிலைமை என்பதுதான் நமக்கு முக்கியம்’ என்று சொல்லிவந்தாராம் ஜெயலலிதா!''

''ம்!''

''காலையில் முதல் லீடிங் தகவல், சேலத்தில் இருந்து வந்தது ஜெயலலிதாவுக்கு. அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை என்ற தகவலுக்குப் பிறகு 11 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகித்தது. அதன் பிறகு 22 தொகுதி முன்னிலை. பிறகு 35 தொகுதிகள் முன்னிலை... என்று பெரும்பாலான தொகுதிகள் முன்னிலை என்று சொன்னதுமே, இறுதி ரிசல்ட் வந்துவிட்ட பூரிப்பு முதல்வருக்கு. அதன் பிறகு அவர் டெல்லி சேனல்களைத் திருப்ப ஆரம்பித்தார். அங்கு முழுமையாக பி.ஜே.பி முன்னிலை தகவல்களைக் குறிக்க ஆரம்பித்தார்.

காலை 11 மணிக்கெல்லாம் தமிழகத்தின் ஒன்றிரண்டு தொகுதிகள் தவிர அனைத்திலும் அ.தி.மு.க முன்னிலை என்றதும், ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியில் வந்து கட்சிக்காரர்களுக்கு இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவார் என்று பத்திரிகையாளர்கள் போயஸ் கார்டன் முன்னால் குவிய ஆரம்பித்தனர். ஆனால், ஜெயலலிதா வெளியில் வரவில்லை. 'டெல்லி ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் போதும். டெல்லியில் இழுபறி வந்தால், அதற்குத் தகுந்த மாதிரி பேச வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். அதனால், கார்டனை விட்டு வெளியில் வந்த பாதுகாவலர், 'மாலை மூன்று மணிக்குத்தான் சி.எம் பிரஸ்ஸை பார்ப்பாங்க’ என்று சொன்னார். அதாவது, தமிழகத்தில் அ.தி.மு.க ஜெயித்தாலும் அதனை வைத்து டெல்லியில் ஏதாவது செய்யும் சூழ்நிலை இருக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பதற்குத்தான் தாமதித்தார். அதே பாதுகாவலர் மீண்டும் வெளியில் வந்து, 'நான்கு மணிக்குத்தான் சி.எம் பிரஸ்ஸை பார்ப்பாங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

'மோடி இந்தளவுக்கு ஜெயிப்பார் என்று ஜெயலலிதா நினைக்கவில்லை’ என்றே சொல்கிறார்கள். 'மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை அமையும்’ என்றும் நினைத்தாராம். ஆனால் 12 மணி ஆனபோது, பி.ஜே.பி அணி 300 தொகுதிகளைத் தாண்டிவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க 272 என்ற எண்ணிக்கையை பி.ஜே.பி தனிப்பட்ட முறையில் அடைந்துவிட்ட தகவல் ஜெயலலிதாவுக்குச் சொல்லப்பட்டது. இனிமேல் டெல்லியை நம்புவதில் அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்தார் ஜெயலலிதா. உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடிவெடுத்தார். அதாவது, நான்கு மணிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என்ற முடிவை மாற்றி மதியம் ஒரு மணிக்கே சந்திக்க முடிவெடுத்தார்.''

''அப்படியா?''

''பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போதும் அவ்வளவாக அவர் கலகலப்பாக இல்லை. பொதுவாக தேர்தலில் வெற்றிபெற்றால் வெளியில் வந்ததும் அனைவருக்கும் லட்டு கொடுப்பார். அது இந்த முறை மிஸ்ஸிங். மைக் பிடித்ததும், மக்களுக்கு நன்றி சொன்னார். வழக்கத்துக்கு மாறாக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் கசகசவென பேச்சு இருந்தது. உடனே கோபமான முதல்வர், 'நீங்க பேசுறீங்களா? நான் பேசணுமா?’ என்று எரிச்சல் ஆனார். அதன் பிறகே பத்திரிகையாளர்கள் கப்சிப் ஆனார்கள். 'மத்திய அரசில் அங்கம் வகிப்பீர்களா?’ என்று ஒருவர் கேட்க படாரென்று, 'அப்படி ஒரு சூழ்நிலை இல்லையே?’ என்று கசப்பாகச் சொன்னார். 'புதிய பிரதமருக்கும் புதிய அமைச்சரவைக்கும் வாழ்த்துக்கள். நாங்கள் நட்புரீதியான அரசாக இருப்போம்’ என்று பட்டும்படாமலும் சொன்னார். 'இதே மாதிரிதான் சட்டமன்றத் தேர்தலிலும் தனியாக நிற்பீர்களா?’ என்று கேட்டார் ஒரு நிருபர். 'அந்த நேரத்தில் கேளுங்கள் சொல்கிறேன்’ என்றபடி பேட்டியை முடித்துக்கொண்டார்.''

''அப்புறம்?''

''தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன்வர்கீஸ் சுங்கத், முதல்வரின் செயலாளர்கள், டி.ஜி.பி ராமானுஜம் ஆகியோர் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து, 'கமான்’ என்றார். அவர்கள் பொக்கே கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டார். 'கட்சிக்காரங்க வந்திருக்காங்களா?’ என்று கேட்டார். வளர்மதி, சைதை துரைசாமி, கலைராஜன் ஆகியோர் நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களும் பொக்கே கொடுத்தார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சிலர், முதல்வருக்கு வாழ்த்துச் சொன்னார்கள். 'இந்த வெற்றியை எப்படி நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். 'இது நான் எதிர்பார்த்த வெற்றிதான்’ என்று சொன்னார். 'டெல்லி போவீர்களா?’ என்று ஒருவர் கேட்டார். 'இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று பட்டும்படாமலும் சொன்னார். உடனே உள்ளே போய்விட்டார். நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் இவருக்கு நன்கு அறிமுகம் ஆனவர். ஆனாலும், மோடியின் வெற்றியை ஜெயலலிதா ரசிக்கவில்லை என்பதே அவரது நடவடிக்கையில் தெரிந்தது. இந்தியா முழுக்க மோடி அலை. தமிழகத்தில் ஜெயலலிதா அலை. ஆனால், இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று மோதும் அலை. இந்த ஆட்சி மாற்றம் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படுத்தும் என்பதைக் காத்திருந்து கவனிப்போம்!'' என்றபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: சு.குமரேசன், ஆ.முத்துக்குமார்

காலையிலேயே டென்ஷன் ஆன ஸ்டாலின்!

உற்சாகமாக தேர்தல் பிரசாரம் செய்துவந்த ஸ்டாலின், முடிவுகள் அறிவிப்பதற்கு முந்தைய இரண்டு நாட்கள் அதிகமான டென்ஷனில் இருந்துள்ளார். 16-ம் தேதி அவரது டென்ஷன் அதிகம் ஆனது. தோல்வி, தோல்வி என்று நிலவரங்கள் வர, 'எப்படியாவது கடைசியில ஐந்தாறு தொகுதியாவது வந்துவிடும்’ என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஆனால் முன்னணி என்று ஒரு தொகுதிகூட தி.மு.க-வுக்கு அறிவிக்கப்படவில்லை. தனது அறைக்கு போய் அமைதியாக உட்கார்ந்துவிட்டாராம்.

கோபாலபுரத்தில் கருணாநிதி உட்கார்ந்து டி.வி. பார்த்தபடி இருந்துள்ளார். துரைமுருகன், கனிமொழி என்று ஒவ்வொருவராக வர ஸ்டாலினையும் வரச்சொல்லி இருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு தைரியம் வருவது மாதிரி ஏதோ கருணாநிதி சொல்லி இருக்கிறார். 'இதைப்பற்றி பேசிப் பயனில்லை. மத்தியில் அமைய உள்ள ஆட்சியை ஆதரித்து அறிக்கை வெளியிடுவோம்’ என்று சொல்லி உற்சாகமாக எழுத ஆரம்பித்தார் கருணாநிதி. ஸ்டாலின்தான் விரக்தியோடு டென்ஷனாக உட்கார்ந்து இருந்தாராம்.

'மோடி அலை இல்லை!’

தேர்தல் பிரசாரம் போய்விட்டு வந்த விஜயகாந்த் மனதில் ஏதோ நெருடல். பி.ஜே.பி தலைவர்களிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார். 'மோடி அலைன்னு நீங்கள் சொல்வது வட இந்தியாவில் வேண்டுமானால் இருக்கலாம். எனக்குத் தெரிய தமிழகத்தில் இல்லை’ என்று சொன்னாராம். வாக்குப்பதிவு நடந்த பிறகும் அவருக்கு இது தோன்றியுள்ளது. 'சேலத்தில் சுதீஷ் தோற்பாருன்னு கருத்துக் கணிப்பு சொல்லுது. அப்படின்னா மோடி அலை இல்லைன்னுதான அர்த்தம்’ என்றும் சொன்னாராம்.

தேர்தல் முடிவுகள் வந்தபோது முதலில் வந்த தகவல், சேலம் தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை என்பதுதான். அதாவது, சுதீஷ் பின்னடைவு. முதல் தகவலிலேயே அப்செட் ஆகிவிட்டார் விஜயகாந்த்!

'ஸ்டாலினுக்குதான் இந்தப் பெருமை!’

இந்தத் தேர்தல் முடிவுகளால் உற்சாகம் அடைந்தது மு.க.அழகிரிதான். 'தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும்’ என்று சொல்லிவந்தார் அழகிரி. ரிசல்ட் வர ஆரம்பித்த உடனே, 'அ.தி.மு.க வெற்றி’ என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி ட்விட்டரில் தட்டினார். எல்லா இடத்திலும் தி.மு.க பின்தங்குகிறது என்று தெரிந்ததும், 'தலைவர் இருக்கும்போதே கட்சியை பூஜ்யத்துல கொண்டுவந்து நிறுத்தின பெருமை ஸ்டாலினுக்குத்தான் உண்டு’ என்று சொன்னவர், 'இதை சந்தோஷத்துல சொல்லலை. வருத்தத்தோடு சொல்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

தேங்க்ஸ் சொன்ன ராகுல்!

தேர்தல் ரிசல்ட் வர ஆரம்பித்ததும், மூன்று பேருக்கு போன் செய்துள்ளார் ராகுல். 'நீங்கள் சொன்னதுதான் நடந்தது. உண்மை நிலவரத்தை எனக்குச் சொன்ன உங்களுக்கு நன்றி. இதேபோல் நேர்மையானத் தகவல்களை நீங்கள் அடுத்து வர இருப்பவர்களுக்கும் வழங்குங்கள்’ என்று சொன்னாராம். டெல்லியில் இருக்கும் புலனாய்வு, உள்துறை சம்பந்தப்பட்டவர்களாம் இவர்கள் மூவரும். இவர்கள்தான், 'இரண்டு இலக்க எண்களைத்தான் காங்கிரஸ் பெறும்’ என்று ராகுலிடம் தைரியமாகச் சொன்னவர்களாம்.