Published:Updated:

உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!

விஜய் சிங்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 26 ஆண்டுகளாக தர்ணா போராட்டம் நடத்திவரும் ஆசிரியர் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 26 ஆண்டுகளாக தர்ணா போராட்டம் நடத்திவரும் ஆசிரியர் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

Published:Updated:
விஜய் சிங்

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க மத்திய அமைச்சரைக் களத்தில் இறக்கியிருக்கிறது. பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடிவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோரக்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

முஜாபர்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அருகில் ஷெட் அமைத்து கடந்த 26 ஆண்டுகளாக தர்ணா போராட்டம் நடத்திவரும் முன்னாள் ஆசிரியர் விஜய் சிங் ஊழலுக்கு எதிராகவும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரியும் தர்ணா நடத்திவருகிறார்.

விஜய் சிங்
விஜய் சிங்

ஆசிரியராக இருந்த விஜய் சிங், திடீரென 1996-ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஊழல் மற்றும் நில மாஃபியாக்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினார். கடந்த 26 ஆண்டுகளில் எந்த அரசும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அரசு நிலத்தை மீட்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் விஜய், தற்போது தனது எதிர்ப்பைக் காட்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அதோடு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யோகி
யோகி

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``கடந்த 26 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் ஊழல் மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தீவிரமாக இல்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவிருக்கிறேன். நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரி மனு கொடுப்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்கச் சென்றேன். ஆனால், என்னை முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. எனது மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டனர். எனது மனுமீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism