Published:Updated:

தேனி: அரசு நிலமோசடி வழக்கு; ஜாமீனில் வந்த அதிமுக முன்னாள் ஒ.செ., ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி

தேர்தல்

அதிமுக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், இதே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு நிலங்களைத் தனிநபர்களுக்கு பட்டா போட்டு, கனிம வளத்தைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார்.    

தேனி: அரசு நிலமோசடி வழக்கு; ஜாமீனில் வந்த அதிமுக முன்னாள் ஒ.செ., ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி

அதிமுக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ், இதே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு நிலங்களைத் தனிநபர்களுக்கு பட்டா போட்டு, கனிம வளத்தைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார்.    

Published:Updated:
தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், 3-வது வார்டு உறுப்பினர், டி.வாடிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு உறுப்பினர், பெரியகுளம் நகராட்சியில் 26-வது வார்டு உறுப்பினர், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரெங்கசமுத்திரம் கிராம ஊராட்சியில் 1-வது வார்டு, மொட்டனூத்து கிராம ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர், கடமலை - மயிலை ஒன்றியத்தில் முத்தலாம்பாறை ஊராட்சியில் 6-வது வார்டு, தும்மக்குண்டு ஊராட்சியில் 7-வது வார்டு, சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர் என மொத்தம் 9 பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது.‌

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

இதில் நீதிமன்றத் தடை உத்தரவால் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 26 -வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் ரத்தானது. ஆண்டிபட்டி ஒன்றியத்திலுள்ள மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், கடமலை - மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தாலம்பாறை, தும்மக்குண்டு, வடபுதுப்பட்டி ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் ஆகிய ஐந்து இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சியுள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய மூன்று இடங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இரண்டு பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மூன்று பேர் என மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தல்
தேர்தல்

மொத்தம் 9,872 வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர். இதற்காக 14 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் பதற்றமான ஆறு வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வாக்குப்பதிவுக்காக மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

வரிசையில் நின்று வாக்களித்த பெண்கள்
வரிசையில் நின்று வாக்களித்த பெண்கள்

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கொரோனா நோய் பரவல் காரணமாக வாக்குச்சாவடி மையத்துக்கு வரும் வாக்காளர்கள் கட்டாய முகக்கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

வடபுதுப்பட்டி ஊராட்சித் தலைவருக்கு அரசு நில மோசடி வழக்கில் கைதானவர் போட்டி

திமுக தேனி நகரப் பொறுப்பாளராக இருந்தவர் பாலமுருகன். இவரின் மனைவி ரேணுப்பிரியா வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். உள்ளாட்சித் தேர்தலின்போது தேனி-அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு பாலமுருகன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தன. ஆனால் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், ஊராட்சித் தலைவரான தன் மனைவி ரேணுப்ரியாவை ராஜினாமா செய்யவைத்து, நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடவைத்து வென்றார்.

ரேணுப்ரியா-பாலமுருகன்
ரேணுப்ரியா-பாலமுருகன்

இதையடுத்து நகராட்சித் தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அதைவிட்டுக் கொடுக்காததால் பாலமுருகன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே ரேணுப்ரியாவே தலைவராகத் தொடர்ந்துவருகிறார். இதற்கிடையே வடபுதுப்பட்டி ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினர் பிரகாஷ் உயிரிழந்தார். இதனால் ஊராட்சித் தலைவர் மற்றும் 3-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ் இதே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு நிலங்களை தனிநபர்களுக்குப் பட்டா போட்டு, அந்த நிலத்தில் உள்ள கனிம வளத்தைக் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

தேனி: அரசு நிலமோசடி வழக்கு; ஜாமீனில் வந்த அதிமுக முன்னாள் ஒ.செ., ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டி

இந்நிலையில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அன்னப்பிரகாஷ், சசிக்குமார், ஞானமுருகன் உட்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மூன்று பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் ஒரு பெண் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க தரப்பில் அன்னப்பிரகாஷும், தி.மு.க தரப்பில் ஞானமுருகன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கிடையேதான் போட்டி கடுமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அன்னப்பிரகாஷ் அரசு நில மோசடி வழக்கில் தான் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கண்டிப்பாக இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களம்கண்டிருக்கிறார். வரும் ஜூலை 12-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.