Published:Updated:

பிரபல ரௌடியின் மனைவி உள்ளாட்சித் தேர்தலில் போட்டி; காவல்துறை நெருக்கடி கொடுப்பதாகப் புகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பால் கனகராஜுக்கு சால்வை அணிவிக்கும் விஜயலட்சுமி
பால் கனகராஜுக்கு சால்வை அணிவிக்கும் விஜயலட்சுமி

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை நெடுங்குன்றம், காந்தி சாலையைச் சேர்ந்தவர் சூர்யா. இவர்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது சூர்யா, சிறையில் இருக்கிறார். இவரின் மனைவி விஜயலட்சுமி. நெடுங்குன்றம் சூர்யாவும், அவரின் மனைவி விஜயலட்சுமியும் பா.ஜ.க-வில் இருக்கிறார்கள். இவர் டி.ஜி.பி அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினராக போட்டியிட மனுதாக்கல் செய்திருக்கிறேன். நான் தலித் என்பதாலும், என் கணவர் சூர்யா மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் என்னிடம் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் அசோகன், விசாரணை என்ற பெயரில் அநாகரிகமாகப் பேசுகிறார்.

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

என்னுடைய செல்போன், காரைப் பறிமுதல் செய்து வைத்திருக்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதைக் கொடுக்காமல் இழுத்தடித்துவருகிறார். எனவே, காவல்துறை சார்பில் எனக்கு எந்தவிதத் தொந்தரவும் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதனால் விஜயலட்சுமி, டி.ஜி.பி அலுவலகத்துக்கு வந்தபோது பா.ஜ.க வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவர் பால்கனகராஜ், மாநிலச் செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர், வழக்கறிஞர்கள் அனிதா, மோட்சம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்தனர். நெடுங்குன்றத்தில் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமிக்கு காவல்துறையினரால் தொல்லை ஏற்படுவதையடுத்து அவர் சென்னையில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பில் இருந்துவருகிறார்.

சென்னை: `உள்ளாட்சி தேர்தல் பகை?’ - வெட்டி கொல்லப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்

இது குறித்து பா.ஜ.க வழக்கறிஞரணியின் மாநிலத் தலைவர் பால்கனகராஜ் கூறுகையில், ``தலித் பெண்களைத் தேர்தலில் போட்டியிடவிடாமல் சில சக்திகள் தடுத்துவருகின்றனர். அதை எஸ்.சி., எஸ்.டி ஆணையமும் மனித உரிமை ஆணையமும் கடுமையாக எச்சரித்தபோதிலும் செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் பஞ்சாயத்தில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் விஜயலட்சுமி என்பவர் தலித் என்பதால், அவருக்கு காவல்துறை தரப்பிலிருந்து தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன.

பால் கனகராஜ்
பால் கனகராஜ்

சூர்யா, திருந்தி வாழப்போவதாக ஏற்கெனவே செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார். சூர்யாவின் குடும்பத்தினருக்கு செங்கல்பட்டு மாவட்ட போலீஸார் கொடுத்த நெருக்கடி காரணமாக, சூர்யாவின் சகோதரி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். எனவே, காவல்துறை உயரதிகாரிகள் இந்தப் புகாரின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு